Mahindra Thar Roxx: அறிமுகம், வசதிகள் இதர விவரங்கள்
தார் ரோக்ஸ் வரும் ஆகஸ்ட் 15 -ஆம் தேதி விற்பனைக்கு வரவுள்ளது. இதன் ஆரம்ப விலை ரூ.12.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆகும்.
-
மஹிந்திரா தார் ரோக்ஸ் கார் மஹிந்திராவின் எஸ்யூவி வரிசையில் தார் 3-டோர் -க்கு காருக்கு மேலே விற்பனைக்கு வரும்.
-
வெளிப்புறத்தில் 6-ஸ்லாட் கிரில், LED ஹெட்லைட்கள் மற்றும் டெயில் லைட்ஸ் மற்றும் சி வடிவ LED DRL -கள் ஆகியவை உள்ளன.
-
டூயல்-டோன் தீம் மற்றும் வொயிட் கலர் லெதரெட் சீட்களை கேபினில் பார்க்க முடிகிறது.
-
டூயல் டிஜிட்டல் டிஸ்பிளேக்கள், வென்டிலேட்டட் முன் இருக்கைகள் மற்றும் ADAS ஆகிய வசதிகள் காரில் கிடைக்கும்.
-
தார் 3-டோர் -ல் உள்ள அதே பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்களுடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆகஸ்ட் 15 ஆம் தேதி மஹிந்திரா தார் ரோக்ஸ் விற்பனைக்கு வர உள்ளது. அதன் விலை அறிவிப்புக்கு முன்னதாக, மஹிந்திரா உற்பத்திக்கு தயாராகவுள்ள ஸ்பெக் பதிப்பை காட்டும் வகையில் நாளை முழுமையான விவரங்களை வெளியிடவுள்ளது. இப்போது வரை சில டீஸர் படங்கள் மற்றும் வீடியோக்களில் மட்டுமே இதைப் பார்த்தோம். இது காரில் உள்ள சில வசதிகளை காட்டுகிறது. புதிய மஹிந்திரா எஸ்யூவி பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் இங்கே:
இதுவரை வெளியாகியுள்ள வடிவமைப்பு விவரங்கள்
இதுவரை வெளியிடப்பட்ட சில டீஸர் படங்கள் மற்றும் வீடியோக்களில் காட்டப்பட்டுள்ளவற்றின் அடிப்படையில் தார் ரோக்ஸ் காரில் 6-ஸ்லாட் கிரில்லை நாம் கவனிக்கலாம். தார் 3-டோர் காரில் 7-ஸ்லேட்டட் கிரில் கொடுக்கப்பட்டுள்ளது.C வடிவ LED DRL -களுடன் கூடிய LED ஹெட்லைட்கள், டூயல்-டோன் அலாய் வீல்கள் மற்றும் LED டெயில் லைட்களில் C வடிவ எலமென்ட்கள் ஆகியவற்றை வெளியில் பார்க்க முடிகிறது.
உட்புறத்தில் இது டூயல்-டோன் தீம் மற்றும் வொயிட் லெதரெட் இருக்கைகள் மற்றும் அப்ஹோல்ஸ்டரி ஆகியவற்றைப் பெறும். டாஷ்போர்டு பிளாக் கலர் லெதரெட் பேடிங்கில், கான்ட்ராஸ்ட் புரோன்ஸ் ஸ்டிச் -களுடன் இருக்கும்.
என்ன வசதிகள் கிடைக்கும்?
தார் ரோக்ஸ் காரில் வென்டிலேட்டட் முன் இருக்கைகள், பனோரமிக் சன்ரூஃப், ஆட்டோமெட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் மற்றும் டூயல் டிஜிட்டல் டிஸ்ப்ளேக்கள் (ஒவ்வொன்றும் 10.25-இன்ச் யூனிட்கள் இருக்கலாம்) என மஹிந்திரா உறுதிப்படுத்தியுள்ளது. புஷ்-பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப் மற்றும் வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங் ஆகியவை எதிர்பார்க்கப்படும் மற்ற வசதிகள் ஆகும்.
பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக கிடைக்கலாம்), எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), 360 டிகிரி கேமரா மற்றும் சில அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) ஆகியவை இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
மேலும் பார்க்க: 2024 ஜூலை மாதம் ஒரு லட்சத்திற்கும் அதிகமான யூனிட்கள் விற்பனை செய்த கார் பிராண்டாக மாருதி இருந்தது.
பல பவர்டிரெய்ன்களை பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது
சரியான இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும் தார் ரோக்ஸ் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்களுடன் இது வர வாய்ப்புள்ளது. மஹிந்திரா தார் 3-டோர் போன்ற அதே பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்களுடன் வரலாம் ஆனால் அவற்றின் அவுட்புட்களில் மாற்றம் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆப்ஷன்களில் 2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் மற்றும் 2.2-லிட்டர் டீசல் இன்ஜின் ஆகியவை கொடுக்கப்படும். இது 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் கிடைக்கிறது. ரியர் வீல் டிரைவ் (RWD) மற்றும் 4 வீல் டிரைவ் (4WD) செட்டப் இரண்டிலும் வழங்கப்படலாம்.
எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்
மஹிந்திரா தார் ரோக்ஸ் காரின் ஆரம்ப விலை ரூ.12.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஃபோர்ஸ் கூர்க்கா 5-டோர் காருக்கு போட்டியாக இருக்கும். மேலும் இது மாருதி ஜிம்னி -க்கு பெரிய மாற்றாக இருக்கும்.
ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகளை பெற கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.
மேலும் படிக்க: மஹிந்திரா தார் ஆட்டோமெட்டிக்