டாடா டியாகோ EVயை முழுமையாக சார்ஜ் செய்ய எவ்வளவு நேரம் ஆகிறது ?
published on ஜூன் 19, 2023 03:45 pm by ansh for டாடா டியாகோ இவி
- 51 Views
- ஒரு கருத்தை எழுதுக
டியாகோ EVயை DC ஃபாஸ்ட் சார்ஜிங் ஸ்டேஷனில் இணைத்து, அசல் உலக சூழ்நிலையில் அதன் சார்ஜிங் நேரத்தை பதிவு செய்தோம்.
டாடா டியாகோ EV கடந்த ஆண்டு செப்டம்பரில் அறிமுகப்படுத்தப்பட்டது மற்றும் அந்த நேரத்தில் இந்த மின்சார ஹேட்ச்பேக், நாட்டில் மிகவும் மலிவு விலையில் இருக்கும் மின்சாரக் காராக இருந்தது. மே மாதம் வெளிவந்த சூழ்நிலையில் MG காமெட் EV -உடன் மட்டும் அது போட்டியிட்டது இது இரண்டு பேட்டரி ஆப்ஷன்களுடன் வருகிறது - 19.2kWh மற்றும் 24kWh - முறையே 250 கிமீ மற்றும் 315 கிமீ வரை உரிமை கோரப்பட்ட ரேஞ்ச் உடன் வருகின்றது, மேலும் AC மற்றும் DC சார்ஜிங் ஆப்ஷன்கள் இரண்டையும் ஆதரிக்கிறது. சமீபத்தில், டியாகோ EV இன் பெரிய பேட்டரி பேக் வெர்ஷனை நம்மிடம் வைத்திருந்தோம், எனவே DC ஃபாஸ்ட் சார்ஜரைப் பயன்படுத்தி 10 முதல் 100 சதவீதம் வரை சார்ஜ் செய்ய எவ்வளவு நேரம் ஆகும் என்பதைச் சரிபார்த்தோம்.
சார்ஜிங் நேரம்
வாகனத்தின் நிலை, சுற்றுப்புற வெப்பநிலை மற்றும் சார்ஜர்களின் ஃப்ளோ ரேட் போன்ற காரணிகளின் அடிப்படையில் நிஜ உலகில் சார்ஜிங் நேரங்கள் மாறுபடும். எவ்வளவு வேகமாக சார்ஜ் செய்ய முடியும் என்பதைப் பார்க்க, டியாகோ EV -யை 120kW DC ஃபாஸ்ட் சார்ஜிங் நிலையத்திற்கு எடுத்துச் சென்றோம். இருப்பினும், முழு சார்ஜிங் செயல்முறையின் போது, டியாகோ EV எடுக்கக்கூடிய அதிகபட்ச சார்ஜ் விகிதம் 18kW என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்கவும்: சிட்ரோன் eC3 எலக்ட்ரிக் ஹேட்ச்பேக்கின் அசல் உலக சார்ஜிங் சோதனை
10 முதல் 100 சதவீதம் வரையிலான விரிவான சார்ஜிங் நேரங்கள் இதோ உங்களுக்காக.
|
|
|
|
17kW |
|
|
18kW |
|
|
18kW |
|
|
17kW |
|
|
17kW |
|
|
17kW |
|
|
17kW |
|
|
18kW |
|
|
18kW |
|
|
18kW |
4 நிமிடங்கள் |
|
18kW |
|
|
17kW |
|
70 முதல் 75 சதவீதம் |
17kW |
|
|
17kW |
|
|
18kW |
|
|
13kW |
|
|
7kW |
|
|
2kW |
|
முக்கிய விவரங்கள்
-
டியாகோ EV சார்ஜிங்கிற்காக இணைக்கப்பட்டவுடன், அதன் பேட்டரி ஒவ்வொரு நான்கு நிமிடங்களுக்கும் ஐந்து சதவிகிதம் நிரப்பப்பட்டது.
-
டியாகோ EV ஆனது அதன் பேட்டரி 85 சதவீதத்தைக் எட்டும் வரை 18kW இல் சார்ஜ் செய்து கொண்டே இருந்தது, அங்கிருந்து அது குறையத் தொடங்கியது.
-
சார்ஜிங் வீதம் 13kW ஆகக் குறைந்துவிட்டது, அடுத்த 5 சதவிகிதம் சார்ஜ் செய்ய கூடுதல் நிமிடங்கள் எடுத்துக்கொண்டது.
-
90 சதவீதத்தில், சார்ஜிங் விகிதம் 7kW ஆகக் குறைந்தது மற்றும் கார் 95 சதவீதத்தை அடைய ஏழு நிமிடங்கள் எடுத்தது.
-
95 சதவீதத்திலிருந்து, சார்ஜிங் விகிதம் 2kW வரை விரைவாகக் குறையத் தொடங்கியது. இந்த சார்ஜ் ஆகும் விகிதத்தில், கார் அதன் முழு சார்ஜிங் திறனை அடைய 26 நிமிடங்கள் ஆனது.
-
எங்கள் சோதனைகளில், 10 முதல் 80 சதவீதம் வரை சார்ஜிங் நேரம் 57 நிமிடங்கள் ஆக இருந்தது, இது கார் தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து உரிமைகோரப்பட்ட 58 நிமிட சார்ஜிங் நேரம் ஆக இருந்தது .
-
80 முதல் 100 சதவீதம் வரை சார்ஜ் செய்ய, காருக்கு மேலும் 42 நிமிடங்கள் எடுத்தது.
சார்ஜிங் வேகத்தில் இந்த வீழ்ச்சி ஏன்?
ஒவ்வொரு கார் தயாரிப்பு நிறுவனமும் தனது வாடிக்கையாளருக்கு 10 முதல் 80 சதவிகிதம் சார்ஜிங் நேரத்தை வழங்குகிறது, ஏனெனில் இது சிறந்த பேட்டரி சார்ஜிங் ஆதாரமாகும். எங்கள் சோதனைகளின்படி, கடைசி 20 சதவிகித சார்ஜிங்கிற்கு அதிக நேரம் எடுக்கும் என்பது தெளிவாகிறது, ஏனெனில் சார்ஜிங் விகிதம் 80 சதவிகிதத்திற்குப் பிறகு குறையத் தொடங்குகிறது. இதற்குக் காரணம், DC ஃபாஸ்ட் சார்ஜரைப் பயன்படுத்தும் போது, பேட்டரியின் பேக் சூடாகத் தொடங்குகிறது, இது பேட்டரியின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். சார்ஜிங் வேகத்தை குறைப்பது அதிக வெப்பமடைவதைத் தடுக்கிறது மற்றும் சேதாரம் ஏற்படுவதையும் தடுக்கிறது.
பவர்டிரெயின்
டாடா டியாகோ EV இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களைப் பெறுகிறது: 19.2kW மற்றும் 24kW. இரண்டும் மின்சார மோட்டாருடன் இணைக்கப்பட்டுள்ளன, இது சிறிய பேட்டரியுடன் 61PS/110Nm மற்றும் பெரிய பேட்டரி உடன் 75PS/114Nm ஐ உருவாக்கும்.
விலை & போட்டியாளர்கள்
டாடா, டியாகோEV இன் விலையை ரூ.8.69 இலட்சம் முதல் ரூ.12.04 இலட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை நிர்ணயித்துள்ளது. என்ட்ரி-லெவல் EV- சிட்ரோன் eC3 மற்றும் MG காமெட் EV ஆகியவற்றுடன் நேருக்குநேர் போட்டிக்கு நிற்கிறது எங்கள் விரிவான அசல் உலக சோதனையில் டியாகோ EV எவ்வளவு ரேஞ்ச் -ஐ வழங்குகிறது என்பதைத் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.
மேலும் படிக்கவும்: டியாகோ EV ஆட்டோமெட்டிக்