மேட்-இன்-இந்தியா ஜிம்னி இந்த நாடுகளில் விலை அதிகமாக உள்ளது

published on பிப்ரவரி 21, 2024 07:29 pm by ansh for மாருதி ஜிம்னி

  • 19 Views
  • ஒரு கருத்தை எழுதுக

இது கடந்த ஆண்டு இந்தியாவில் உலகளவில் அறிமுகப்படுத்தப்பட்டது மற்றும் 5-டோர் ஜிம்னி ஏற்கனவே இந்தோனேசியா, ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

5-door Suzuki Jimny

2023 ஆட்டோ எக்ஸ்போவில், 5-டோர் மாருதி ஜிம்னி உலகளவில் அறிமுகமானது மற்றும் இந்தியாவிலும் வெளியிடப்பட்டது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் இந்த மாருதி சுஸுகி ஆஃப்-ரோடர் இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா போன்ற வலது பக்க டிரைவிங் செய்யும் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது, ஆனால் அந்த சந்தைகளில் விலை வித்தியாசமாக உள்ளது. இந்த நாடுகளில் ஜிம்னி எவ்வளவு விலை உயர்ந்ததாக உள்ளது மற்றும் பிரீமியத்திற்கான கூடுதல் அம்சங்கள் ஏதேனும் கிடைக்குமா என்பதைப் பற்றிய விவரங்களை பார்ப்போம்.

ஆனால் அதற்கு முன், இந்தியா-ஸ்பெக் 5-டோர் மாருதி ஜிம்னியின் விலை விவரங்களை பாருங்கள்:

வேரியன்ட்

எக்ஸ்-ஷோரூம் விலை

ஜெட்டா MT

ரூ.12.74 லட்சம்

ஆல்பா MT

ரூ.13.69 லட்சம்

ஜெட்டா AT

ரூ.13.84 லட்சம்

ஆல்பா AT

ரூ.14.79 லட்சம்

* டூயல்-டோன் வேரியன்ட்களுக்கு ரூ. 16,000 கூடுதல் விலை

சுஸூகி ஜிம்னி எக்ஸ்எல் (ஆஸ்திரேலியா)

Suzuki Jimny XL

எக்ஸ்-ஷோரூம் விலை

இந்திய ரூபாய் மதிப்புக்கு மாற்றப்பட்டுள்ளது

AUD 34,990 - AUD 36,490

ரூ.18.96 லட்சம் முதல் ரூ.19.78 லட்சம்

ஆஸ்திரேலியாவில், 5-டோர் ஜிம்னி சுஸுகி ஜிம்னி எக்ஸ்எல் என்ற பெயரில் விற்கப்படுகிறது, மேலும் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள்டுடன் ஒரே ஒரு வேரியன்டில் கிடைக்கிறது. இந்தியா-ஸ்பெக் மாடலுடன் ஒப்பிடுகையில், இதன் விலை கிட்டத்தட்ட ரூ.5 லட்சம் அதிகம். இருப்பினும், ஆஸ்திரேலியா-ஸ்பெக் 5-டோர் ஜிம்னி சில புதிய கலர் ஆப்ஷன்களை  பெறுகிறது, மேலும் அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் போன்ற ADAS அம்சங்களையும் கொண்டுள்ளது.

சுஸூகி ஜிம்னி 5-டோர் (தென் ஆப்பிரிக்கா)

Suzuki Jimny 5-door in South Africa

எக்ஸ்-ஷோரூம் விலை

இந்திய ரூபாய் மதிப்புக்கு மாற்றப்பட்டுள்ளது

ராண்ட் 4,29,990 - ராண்ட் 4,79,990

ரூ.18.78 லட்சம் முதல் ரூ.20.97 லட்சம்

தென்னாப்பிரிக்காவில் 5-டோர் ஜிம்னியின் ஆரம்ப விலை ஆஸ்திரேலியாவின் ஆரம்ப விலைக்கு நிகராக இருக்கின்றது. இருப்பினும், ஆஸ்திரேலியாவை போல இல்லாமல், தென்னாப்பிரிக்க மார்க்கெட்டில் 5-டோர் ஜிம்னி GL மற்றும் GLX ஆகிய இரண்டு வேரியன்ட்களில் விற்பனை செய்யப்படுகின்றது - இதை இந்தியாவில் உள்ள ஜெட்டா மற்றும் ஆல்ஃபா வேரியன்ட்களுடன் ஒப்பிடலாம்.

தென்னாப்பிரிக்காவில், ஜிம்னி எந்த கூடுதல் அம்சங்களையும் பெறவில்லை, மேலும் பேஸ்-ஸ்பெக் வேரியன்ட்டில் 6 ஏர்பேக்குகள் கொடுக்கப்படவில்லை.

மேலும் பார்க்க: மாருதி ஜிம்னி ராஜஸ்தானில் ஃபாரஸ்ட் சஃபாரிக்கு மேற்கூரை இல்லாமல் செல்கிறது

சுஸூகி ஜிம்னி 5-டோர் (இந்தோனேசியா)

Suzuki Jimny 5-door in Indonesia

எக்ஸ்-ஷோரூம் விலை

இந்திய ரூபாய் மதிப்புக்கு மாற்றப்பட்டுள்ளது

Rp 46,20,00,000 - Rp 47,86,00,000

ரூ.24.48 லட்சம் முதல் ரூ.25.36 லட்சம்

இந்தோனேசியா -வில் சமீபத்திய மாடலாக 5-டோர் ஜிம்னி மாறியுள்ளது. ஆஸ்திரேலிய மார்கெட்டை போலவே, இந்தோனேசியாவில் உள்ள 5-டோர் ஜிம்னி இரண்டு டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களுடன் ஒரே வேரியன்ட்டில் வருகிறது. அதன் அம்சங்கள் பட்டியல் இந்தியா-ஸ்பெக் பதிப்பைப் போலவே உள்ளது, ஆனால் இது இந்திய சந்தையில் கிடைக்காத சில கூடுதலாக சில கலர் ஆப்ஷன்களை பெறுகிறது.

ஏன் இவ்வளவு அதிக விலை?

இந்த அனைத்து சந்தைகளிலும் உள்ள 5-டோர் ஜிம்னி, இந்தியா-ஸ்பெக் பதிப்பின் அதே இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களுடன் வருகிறது, மேலும் இதே போன்ற அம்சங்கள் பட்டியலையும் பெறுகிறது. ஆனாலும், விலையில் பெரிய வித்தியாசம் உள்ளது. 5-டோர் ஜிம்னி இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுவதால், இந்த நாடுகளின் இறக்குமதி வரிகள் காரணமாக இந்த விலை வேறுபாடு இருக்கின்றது.

ஜிம்னி 5-டோர் விலை

Maruti Jimny

இந்தியா

ஆஸ்திரேலியா*

தென்னாப்பிரிக்கா*

இந்தோனேசியா*

ரூ.12.74 லட்சம் முதல் ரூ.14.79 லட்சம்

ரூ.18.96 லட்சம் முதல் ரூ.19.76 லட்சம்

ரூ.18.78 லட்சம் முதல் ரூ.20.97 லட்சம்

ரூ.24.48 லட்சம் முதல் ரூ.25.36 லட்சம்

* இந்திய ரூபாய் மதிப்புக்கு மாற்றப்பட்டது

இந்த இறக்குமதி கட்டணங்கள் காரணமாக, இந்த நாடுகளில் உள்ள வாடிக்கையாளர்கள் அதே தயாரிப்புக்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. இருப்பினும், சில நாடுகளுக்கான இந்த இறக்குமதி வரிகள் இந்திய சந்தையுடன் ஒப்பிடும்போது இன்னும் குறைவாகவே உள்ளன, அங்கு இறக்குமதி செய்யப்பட்ட கார்களுக்கு 100 சதவீத இறக்குமதிக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும், அவற்றின் விலை உண்மையான விலையை விட இரட்டிப்பாகும்.

தற்போதைய நிலவரப்படி, 5-டோர் ஜிம்னி மற்ற மூன்று நாடுகளில் கிடைக்கிறது, வரும் காலங்களில் மாருதி இதை கூடுதலான சந்தைகளுக்கும் ஏற்றுமதி செய்யலாம். இந்தியாவில், ஜிம்னி மூன்று-டோர் சப்-4 மீட்டர் ஆஃப்-ரோடு எஸ்யூவி -களான மஹிந்திரா தார் மற்றும் கூர்க்காவை ஃபோர்ஸ் ஆகியவற்றுக்கு போட்டியாக உள்ளது.

மேலும் படிக்க: மாருதி ஜிம்னி vs மஹிந்திரா தார்: உங்களுக்கான தினசரி ஆஃப்ரோடர் எது

மேலும் படிக்க: ஜிம்னி ஆன்ரோடு விலை

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment மீது மாருதி ஜிம்னி

Read Full News

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trendingஎஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience