• English
  • Login / Register

இந்த இரண்டு கார்களில் ஒன்று பேஸ் வேரியன்ட்டிலேயே CNG -யின் ஆப்ஷனை வழங்குகிறது. மற்றொன்று பெட்ரோல் இன்ஜினுடன் மட்டுமே கிடைக்கும்.

published on ஜூன் 12, 2024 11:46 am by samarth for டாடா பன்ச்

  • 21 Views
  • ஒரு கருத்தை எழுதுக

இந்த இரண்டு கார்களில் ஒன்று பேஸ் வேரியன்ட்டிலேயே CNG -யின் ஆப்ஷனை வழங்குகிறது. மற்றொன்று பெட்ரோல் இன்ஜினுடன் மட்டுமே கிடைக்கும்.

Tata Punch Pure vs Hyundai Exter EX

இந்திய கார் சந்தையில் என்ட்ரி-லெவல் எஸ்யூவி பிரிவில் மைக்ரோ-எஸ்யூவி -கள் ஆதிக்கம் செலுத்துகின்றன. அவற்றின் எஸ்யூவி போன்ற வடிவமைப்பு மற்றும் ஹையர் கிரவுண்ட் கிளியரன்ஸ் ஆகியவற்றிற்கு பெயர் பெற்றது. அதே நேரத்தில் பெரிய எஸ்யூவிகளுடன் ஒப்பிடும் போது இதன் விலை குறைவாகவே உள்ளது. இதனால் பலர் ஹேட்ச்பேக்குகளுக்கு பதிலாக டாடா பன்ச் மற்றும் ஹூண்டாய் எக்ஸ்டர் போன்ற மைக்ரோ எஸ்யூவிகளை தேர்வு செய்து வருகின்றனர். இரண்டு எஸ்யூவி  -களும் சுமார் ரூ. 6 லட்சத்தில் தொடங்குகின்றன (எக்ஸ்-ஷோரூம், டெல்லி). எனவே உங்கள் பணத்திற்கு எது சிறந்த மதிப்பை வழங்குகிறது என்பதைத் தீர்மானிக்க அவற்றின் பேஸ் மாடல்களை இங்கே ஒப்பிட்டுப் பார்ப்போம்.

விலை

 

டாடா பன்ச் ப்யூர்

ஹூண்டாய் எக்ஸ்டர் எக்ஸ்

விலை

ரூ.6.13 லட்சம்

ரூ.6.13 லட்சம்

விலை விவரங்கள் அனைத்தும் எக்ஸ்-ஷோரூம், டெல்லி -க்கானவை

டாடா பன்ச் காரின் பேஸ் வேரியன்ட் (Pure) விலை ரூ. 6.13 லட்சம் ஆகும். இது ஹூண்டாய் எக்ஸ்டரின் என்ட்ரி லெவல் EX டிரிமின் அதே விலையில் உள்ளது. 

அளவுகள் 

மாடல்

டாடா பன்ச்

ஹூண்டாய் எக்ஸ்டர்

நீளம்

3827 மி.மீ

3815 மி.மீ

அகலம்

1742 மி.மீ

1710 மி.மீ

உயரம்

1615 மி.மீ

1631 மி.மீ ( ரூஃப் ரெயில்களுடன்)

வீல்பேஸ்

2445 மி.மீ

2450 மி.மீ

கிரவுண்ட் கிளியரன்ஸ்

187 மி.மீ

185 மி.மீ

பூட் ஸ்பேஸ்

366 லிட்டர்

391 லிட்டர்

  • எக்ஸ்டர் பன்சை விட 16 மி.மீ உயரம் அதிகமானது. ஆனால் எக்ஸ்டர் 32 மி.மீ அகலமும் 12 மி.மீ நீளமும் கொண்டது.

  • இரண்டு மைக்ரோ எஸ்யூவி -களும் ஏறக்குறைய ஒரே அளவு கிரவுண்ட் கிளியரன்ஸை கொண்டுள்ளன. டாடா பன்ச் காரில் சற்று அதிகமான கிரவுண்ட் கிளியரன்ஸ் அளவு உள்ளது.

  • எக்ஸ்டர் ஆனது பன்ச்சை விட 5 மி.மீ நீளமான வீல்பேஸை கொண்டுள்ளது. 

Tata Punch: First Drive Review

  • பூட் ஸ்பேஸை பொறுத்தவரை, எக்ஸ்டர் 25 லிட்டர் கூடுதல் லக்கேஜ் இடத்தைப் பெறுகிறது. குறைந்தபட்சம் பேப்பரில் அதைத் தொடர்ந்து பன்ச் உள்ளது 

பவர்டிரெய்ன்

 

டாடா பன்ச் ப்யூர்

ஹூண்டாய் எக்ஸ்டர் EX

இன்ஜின்

1.2 லிட்டர் N.A. பெட்ரோல் இன்ஜின்

1.2-லிட்டர் N.A. பெட்ரோல்+CNG

1.2-லிட்டர் N.A. பெட்ரோல்

பவர்

88 PS

73.5 PS

83 PS

டார்க்

115 Nm

103 Nm

114 Nm

சிலிண்டர்

3

4

டிரான்ஸ்மிஷன்

5-ஸ்பீடு MT

5-ஸ்பீடு MT

5-ஸ்பீடு MT

Tata Punch: First Drive Review

  • பன்ச் -ன் 1.2-லிட்டர், 3-சிலிண்டர் பெட்ரோல் யூனிட் எக்ஸ்டரின் 1.2-லிட்டர், 4-சிலிண்டர் பெட்ரோல் இன்ஜினை விட சற்று கூடுதல் சக்தி வாய்ந்தது.

  • டாடா பன்ச் இன் ப்யூர் வேரியன்ட் பெட்ரோல் மற்றும் CNG இரண்டிலும் கிடைக்கிறது. அதேசமயம் எக்ஸ்டர் EX பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனுடன் மட்டுமே கிடைக்கிறது.

  • இரண்டு எஸ்யூவி -களின் பேஸ்-ஸ்பெக் வேரியன்ட்களும் மேனுவல் டிரான்ஸ்மிஷனில் மட்டுமே கிடைக்கின்றன.

  • இரண்டு மாடல்களிலும் உள்ள அதே இன்ஜின்கள் ஹையர் வேரியன்ட்களில் 5-ஸ்பீடு AMT ஆப்ஷனை கொண்டுள்ளன. 

வசதிகள் 

காரிலுள்ள முக்கியமான வசதிகள்

வசதிகள்

டாடா பன்ச் ப்யூர்

ஹூண்டாய் எக்ஸ்டர் எக்ஸ்

வெளிப்புறம்

  • ஹாலோஜன் ஹெட்லைட்கள் 

  • LED இண்டிகேட்டர்ஸ்

  • 15 இன்ச் ஸ்டீல் வீல்ஸ்

  • டேர்ன் இண்டிகேட்டர்ஸ் ஆன் ORVMs

  • ஹாலோஜன் ஹெட்லைட்கள்

  • 14 இன்ச் ஸ்டீல் வீல்ஸ்

  • LED டெயில் லைட்ஸ்

உட்புறம்

  • ஆல் பிளாக் கேபின் தீம்

  • முன் இருக்கைகளுக்கு அட்ஜஸ்ட்டபிள் ஹெட்ரெஸ்ட்கள்

  • பேஃப்ரிக் அப்ஹோல்ஸ்டரி 

  • ஆல் பிளாக் கேபின் தீம்

  • பின்பக்க பயணிகளுக்கு அட்ஜஸ்ட்டபிள் ஹெட்ரெஸ்ட்கள்

  • 12V பவர் சாக்கெட்

கம்ஃபோர்ட் மற்றும் வசதி

  • சென்ட்ரல் லாக்கிங் 

  • முன்பக்க பவர் விண்டோஸ்

  • மேனுவல் ஏசி

  • டில்ட் ஸ்டீயரிங் வீல்

  • செமி டிஜிட்டல் டிரைவர் டிஸ்பிளே

  • உயரத்தை சரி செய்துக் கொள்ளக்கூடிய ஓட்டுநர் இருக்கை

  • ஸ்டீயரிங்கில் கொடுக்கப்பட்டுள்ள்ள கன்ட்ரோல்கள் 

  • சென்ட்ரல் லாக்கிங் 

  • முன்பக்க பவர் விண்டோஸ்

  • மேனுவல் ஏசி

  • கீலெஸ் என்ட்ரி

இன்ஃபோடெயின்மென்ட்

இல்லை

இல்லை

பாதுகாப்பு

  • டூயல் முன் ஏர்பேக்குகள்

  • எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம்

  • EBD உடன் ABS

  • பின்புற பார்க்கிங் சென்சார்கள்

  • ISOFIX சைல்டு சீட் ஆங்கரேஜ்கள்

  • 6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டு)

  • EBD உடன் ABS

  • அனைத்து இருக்கைகளுக்கும் சீட்பெல்ட் ரிமைண்டர்

  • அனைத்து பயணிகளுக்கும் 3-பாயிண்ட் சீட்பெல்ட்கள்

  • பின்புற பார்க்கிங் சென்சார்கள்

  • ISOFIX சைல்டு சீட் ஆங்கரேஜ்கள்

மேலும் படிக்க: Tata Altroz ​​Racer மற்றும் Tata Altroz: இரண்டுக்கும் இடயே உள்ள 5 முக்கிய வித்தியாசங்கள்

முக்கிய விவரங்கள்

Tata Punch Pure Variant Front

  • இரண்டு மாடல்களிலும் ஹாலோஜன் ஹெட்லைட்கள் உள்ளன. அதே சமயம் பன்ச் ORVMகளில் டர்ன் இண்டிகேட்டர்கள் உள்ளன. கூடுதலாக எக்ஸ்டரில் 14-இன்ச் சக்கரங்கள் உள்ளன. அதேசமயம் பன்ச் பெரிய 15-இன்ச் சக்கரங்களுடன் வருகிறது.

Tata Punch Pure Variant Interiors

  • உள்ளே இரண்டு கார்களிலும் ஆல் பிளாக் கேபின் தீம் கொடுக்கப்பட்டுள்ளது. ஓட்டுநர் மற்றும் முன் பயணிகளின் வசதிக்காக, பன்ச் அட்ஜஸ்ட்டபிள் ஹெட்ரெஸ்ட்களை வழங்குகிறது. இருப்பினும் பின்புற இருக்கைகள் இன்டெகிரேட்டட் ஹெட்ரெஸ்ட்களை மட்டுமே கொண்டுள்ளது. இதற்கு மாறாக எக்ஸ்டர் ஆனது முன்பக்கத்தில் இன்டெகிரேட்டட் ஹெட்ரெஸ்ட்கள் மற்றும் பின்புறத்தில் அட்ஜஸ்ட்டபிள் உடன் வருகிறது.

  • சௌகரியம் மற்றும் வசதியின் அடிப்படையில் இரண்டும் ஒரே மாதிரியான வசதிகளை பெறுகின்றன. ஆனால் இங்கே எக்ஸ்டர் ஆனது MID -க்கான உயரத்தை அட்ஜஸ்ட் செய்துக் கொள்ளும் வகையிலான ஓட்டுநர் இருக்கை மற்றும் ஸ்டீயரிங்கில் பொருத்தப்பட்ட கன்ட்ரோல் உட்பட இரண்டு கூடுதல் வசதிகளைப் பெறுகிறது. பன்ச் ஸ்டீயரிங் வீலில் டில்ட் அட்ஜஸ்ட்மென்ட்டை வழங்குகிறது ஆனால் எக்ஸ்டர் காரில் அது இல்லை. 

  • இரண்டு கார்களும் பேஸ் வேரியன்ட்டில் எந்தவொரு இன்ஃபோடெயின்மென்ட் அல்லது மியூசிக் சிஸ்டத்தையும் வழங்கவில்லை. 

Hyundai Exter 6 Airbags

  • எக்ஸ்டரின் அனைத்து வேரியன்ட்களிலும் 6 ஏர்பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் பன்ச் டூயல் ஏர்பேக்குகளை ஸ்டாண்டர்டாக வழங்குகிறது. அனைத்து இருக்கைகளுக்கும் 3-பாயின்ட் சீட்பெல்ட்கள் மற்றும் சீட்பெல்ட் ரிமைண்டர்கள் உள்ளது சிறப்பு. எக்ஸ்டர் காரானது அதிகமான பாதுகாப்பு வசதிகளை கொண்டுள்ளது.

தீர்ப்பு

பேஸ்-ஸ்பெக் எக்ஸ்டர் EX மற்றும் பன்ச் ப்யூர் ஆகியற்றில் உள்ள ஒட்டுமொத்த வசதிகளின் படி பார்க்கும் போது இரண்டும் நெருக்கமாக உள்ளன. நீங்கள் CNG மற்றும் சற்று விசாலமான கேபின் ஆகியவற்றை விரும்பினால் பன்ச் ப்யூர் சிறந்த தேர்வாகும். இருப்பினும் நீங்கள் மிகவும் ரீஃபைன்மென்ட்டான 4-சிலிண்டர் இன்ஜின், பெரிய பூட் மற்றும் சற்று கூடுதலான பாதுகாப்பு வசதிகளை விரும்புகிறீர்கள் என்றால் எக்ஸ்டர் EX வேரியன்ட் உங்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும். சுமார் ரூ.6 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) பட்ஜெட்டில் எந்த பேஸ் வேரியன்ட்டை தேர்ந்தெடுப்பீர்கள் என்பதை கமெண்ட் பகுதியில் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.

மேலும் படிக்க: பன்ச் AMT

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment on Tata பன்ச்

Read Full News

explore similar கார்கள்

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience