Tata Punch EV மீண்டும் சாலையில் தென்பட்டுள்ளது… காரின் உற்பத்தி விரைவில் தொடங்கலாம் !
published on ஜனவரி 03, 2024 12:08 pm by rohit for டாடா பன்ச் EV
- 78 Views
- ஒரு கருத்தை எழுதுக
சோதனைக் கார் LED விளக்குகள் மற்றும் அலாய் வீல்கள் கொண்ட ஃபுல்லி லோடட் வேரியன்ட் போல தெரிந்தது. இதன் உற்பத்தி விரைவில் தொடங்கும் என்று நம்புகிறோம்.
-
டாடாவின் அடுத்த பெரிய EV வெளியீடு ஆல் எலக்ட்ரிக் பன்ச் ஆகும்.
-
புதிய நெக்ஸான் போன்ற LED DRL -கள் டர்ன் இண்டிகேட்டர்களாகவும், புதிய வடிவிலான கிரில்லாகவும் இருக்கும்.
-
பெரிய டச் ஸ்கிரீன் மற்றும் 2-ஸ்போக் ஸ்டீயரிங் ஆகியவற்றை உள்ளடக்கிய கேபின் அப்டேட் ஆகும்.
-
செமி-டிஜிட்டல் டிரைவரின் டிஸ்ப்ளே, ஆட்டோ ஏசி மற்றும் 6 ஏர்பேக்குகள் வரை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
டாடா இதை இரண்டு பேட்டரி பேக்குகளுடன் வழங்கலாம்; 500 கிமீ வரை கிளைம்டு ரேஞ்சை கொண்டிருக்கலாம்.
-
2024 -ம் ஆண்டின் முதல் பாதியில் அறிமுகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, இதன் விலை ரூ. 12 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கும்.
டாடா பன்ச் EV -யின் ஸ்பை ஷாட்கள் கடந்த சில மாதங்களாகவே இணையத்தில் பரவி வருகின்றன. நாங்கள் அதை லோவர்-ஸ்பெக் வேரியன்ட்டிலும் பார்க்க முடிந்தது. பன்ச் EV -ன் வெளிப்புறம் மறைக்கப்பட்ட செய்யப்பட்ட மற்றொரு சோதனைக் காரின் சில படங்களை இப்போது மீண்டும் ஒருமுறை கிளிக் செய்ய முடிந்தது, இது ஃபுல்லி லோடட் வேரியன்ட் ஆக இருக்கலாம் என தோன்றியது. இதன் மூலம் காரின் உற்பத்தி விரைவில் தொடங்கும் என தெரிகின்றது.
தெரிய வந்த விவரங்கள்
இந்த டெஸ்ட் கார் அனைத்தும் அலங்கரிக்கப்பட்டு, முழு மின்சாரம் கொண்ட டாடா பன்ச் -ன் உற்பத்திக்கு நெருக்கமான பதிப்பாகத் தோன்றியது. இது புதிய அலாய் வீல்கள், புதிய வடிவிலான கிரில் மற்றும் புதுப்பிக்கப்பட்ட ஸ்பிலிட் LED ஹெட்லைட்கள் மற்றும் புதிய நெக்ஸான் போன்ற LED DRL -களுடன் டர்ன் இன்டிகேட்டர்களாக செயல்படும். இந்த அப்டேட்கள் அனைத்தும் ஸ்டாண்டர்டான ICE பன்ச் -க்கும் கொடுக்கப்படும்.
ஸ்பை ஷாட்களின் மற்றொரு சிறப்பம்சமாக, பெரிய டச் ஸ்கிரீன் யூனிட் (புதிய நெக்ஸானில் இருந்து 10.25-இன்ச் டிஸ்ப்ளே) இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது மற்றும் ஒளிரும் ‘டாடா’ லோகோவை கொண்ட புதிய 2-ஸ்போக் ஸ்டீயரிங் வழங்கப்பட்டுள்ளது.
வேறு என்ன வசதிகளை எதிர்பார்க்கலாம்?
செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், பேடில் ஷிஃப்டர்கள் (பேட்டரி ரீஜெனரேஷன்), 360 டிகிரி கேமரா, ஆட்டோ கிளைமேட் கன்ட்ரோல், 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS) மற்றும் ஒரு ரியர்வியூ கேமரா ஆகியவற்றையும் டாடா வழங்கலாம்.
இதையும் பார்க்கவும்: ஸ்மார்ட்போன் நிறுவனமான Xiaomi அதன் முதல் எலக்ட்ரிக் காரான SU7 -ஐ அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது
பேட்டரி பேக் மற்றும் ரேஞ்ச்
பன்ச் EV இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களுடன் வழங்கப்படலாம், அதே நேரத்தில் அதன் கிளைம்டு ரேஞ்ச் 500 கிமீ வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. இதன் மின்சார மோட்டார் பற்றி இதுவரை எந்த விவரங்களும் இல்லை என்றாலும், கூடுதலான தூரம் செல்லும் வகையில் இது மேம்படுத்தப்பட்டதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது எப்போது அறிமுகப்படுத்தப்படும்?
2024 -ம் ஆண்டின் முதல் பாதியில் டாடா பன்ச் EV விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கிறோம். டாடா இதன் விலையை ரூ.12 லட்சம் முதல் நிர்ணயம் செய்யலாம் (எக்ஸ்-ஷோரூம்). சிட்ரோன் eC3 இதன் நேரடி போட்டியாளராக இருக்கும். எம்ஜி காமெட் இவி மற்றும் டாடா டியாகோ EV ஆகிய கார்களுக்கு மாற்றாகவும் இது செயல்படும்
மேலும் படிக்க: பன்ச் AMT