ஸ்மார்ட்போன் நிறுவனமான Xiaomi அதன் முதல் எலக்ட்ரிக் காரான SU7 -ஐ அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது
published on ஜனவரி 02, 2024 07:30 pm by rohit
- 31 Views
- ஒரு கருத ்தை எழுதுக
டெஸ்லா மாடல் 3 மற்றும் போர்ஷே டெய்கான் போன்ற பெரிய போட்டியாளர்களை எதிர்கொள்ள, ஷியோமி SU7 கார் மூலமாக என்ட்ரி கொடுத்துள்ளது.
-
ஷியோமி EV -க்கான திட்டங்களை முதன்முதலில் 2021 -ஆண்டில் அறிவித்தது, அடுத்த பத்தாண்டுகளில் இந்த துறையில் USD 10 பில்லியன் மதிப்பிலான முதலீடுகளை செய்யவும் முடிவு செய்துள்ளது.
-
SU7 -யின் வெளிப்புறம் கனெக்டட் டெயில்லைட்கள், டியர்டிராப் வடிவ LED ஹெட்லைட்கள் மற்றும் 20-இன்ச் அலாய் வீல்கள் ஆகியவற்றால் சிறப்பிக்கப்படுகிறது.
-
கேபினில் 3-ஸ்போக் ஸ்டீயரிங் வீல் மற்றும் டிஜிட்டல் ஸ்கிரீன்கள் மட்டும் கொடுக்கப்பட்டு மினிமலிஸ்ட் வடிவமைப்பில் உள்ளது.
-
போர்டில் உள்ள அம்சங்களில் 16.1-இன்ச் டச் ஸ்கிரீன், 56-இன்ச் ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே மற்றும் ADAS ஆகியவை அடங்கும்.
-
ரியர் வீல் டிரைவ் மற்றும் ஆல் வீல் டிரைவ் ஆப்ஷன்களுடன் 73.6 kWh மற்றும் 101 kWh பேட்டரி பேக்குகளை பெறுகிறது.
-
2024 ஆண்டில் உலகளாவிய வெளியீடு எதிர்பார்க்கப்படுகிறது; எதிர்காலத்தில் இந்தியாவிற்கு கொண்டு வரப்படலாம்.
ஷியோமி நிறுவனம் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது ஸ்மார்ட்போன்கள் தான். சீன நாட்டை சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனமான ஷியோமி நுகர்வோர் மின்னணு சாதனங்கள் தயாரிப்பில் தேர்ச்சி பெற்றதாக இருக்கிறது. மேலும் அன்றாட வீட்டு தேவைகளுக்கான வீட்டு உபயோகப் பொருட்களை தவிர்த்து முற்றிலும் மாறுபட்ட புதிய தயாரிப்புகளையும் இது அறிமுகம் செய்துள்ளது கொண்டுள்ளது. அந்த வகையில் வளர்ந்து வரும் EVகள் சந்தையை குறிவைத்து 2021 ஆண்டில், ஷியோமி அடுத்த 10 ஆண்டுகளில் 10 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்யும் திட்டத்தை அறிவித்தது. எலக்ட்ரிக் கார் பிரிவில் மூலம் அதன் போர்ட்ஃபோலியோவை மேலும் பலப்படுத்தும் திட்டங்களை அறிவித்தது. அதன்படி இப்போது SU7 - ஷியோமி யின் முதல் மின்சார கான்செப்ட் கார் உருவாக்கப்பட்டுள்ளது. இது SU7 மற்றும் SU7 மேக்ஸ் ஆகிய இரண்டு வேரியன்ட்களில் கிடைக்கும்.
SU7 -யின் வடிவமைப்பு
எஸ்யூவி -கள் மற்றும் கிராஸ்ஓவர்களின் போல இல்லாமல், ஷியோமி SU7 ஒரு மின்சார செடான் ஆகும். ஹூண்டாய் ஐயோனிக் 6 போர்ஷே டேகன், மற்றும் டெஸ்லா மாடல் 3 போன்று ஏற்கனவே உள்ள மின்சார செடான்களை இதன் குறைந்த ஸ்லங் வடிவமைப்பு உங்களுக்கு நினைவூட்டக்கூடும்.வெளிப்புறமாக டியர் டிராப் வடிவ LED ஹெட்லைட்கள், பாப்-அப் ரியர் ஸ்பாய்லர், 20-இன்ச் வரையிலான அலாய் வீல்கள், கனெக்டட் LED டெயில்லைட்கள் மற்றும் ஸ்போர்ட்டி பம்பர்கள் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன
இன்டீரியர் மற்றும் வசதிகள்
ஷியோமி நிறுவனம் மின்சார காரின் கேபின் விவரங்களை வெளியிடவில்லை. என்றாலும், சர்வதேச ஸ்பை ஷாட்கள் மற்றும் ரெண்டர்கள் மூலமாக இது 3-ஸ்போக் ஸ்டீயரிங் வீல் மற்றும் இரண்டு டிஜிட்டல் டிஸ்ப்ளேக்களால் ஆன மினிமலிஸ்ட் கேபின் ஆக இருக்கக்கூடும் என தெரிகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட வேரியன்ட்டின் அடிப்படையில் அதன் கேபினில் வெவ்வேறு தீம்கள் (ரெட், வொயிட், மற்றும் பிளாக் மற்றும் கிரே இடையே இருக்கலாம்) இருக்கலாம்.
SU7 -யில் 16.1-இன்ச் ஃப்ரீ-ஃப்ளோட்டிங் டச்ஸ்கிரீன் சிஸ்டம், 25-ஸ்பீக்கர் மியூசிக் சிஸ்டம் மற்றும் 56-இன்ச் ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே ஆகியவை அடங்கும். கனெக்டட் கார் டெக்னாலஜி, பின்புற பொழுதுபோக்குக்காக டிஸ்பிளேக்கள், முன் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள் மற்றும் அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) ஆகியவற்றையும் ஷியோமி வழங்கியுள்ளது.
மேலும் படிக்க: எலெக்ட்ரிக் வாகன தயாரிப்புக்காக இந்தியாவில் நுழைய திட்டமிடும் ஃபாக்ஸ்கான்
எலக்ட்ரிக் பவர்டிரெய்ன் பற்றிய விவரங்கள்
ஷொயோமி SU7 -ஐ இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களுடன் வழங்கும்: 73.6 kWh (SU7) மற்றும் 101 kWh (SU7 Max). SU7 ஆனது ரியர் வீல் டிரைவ் (RWD) உடன் 299 PS சிங்கிள்-மோட்டார் அமைப்பைக் கொண்டுள்ளது, மற்றொன்று ஆல்-வீல்-டிரைவ் (AWD) உடன் 673 PS டூயல்-மோட்டார் செட்டப்பை வழங்குகிறது. இவை 668 கிமீ மற்றும் 800 கிமீ வரை கிளைம்டு ரேஞ்சை கொண்டதாக இருக்கலாம்.
இதையும் பார்க்கவும்: ட்ராஃபிக்கில் சிக்கும்போது உங்கள் காரைப் பாதுகாக்க 7 குறிப்புகள்
உலகளாவிய வெளியீடு மற்றும் போட்டியாளர்கள்
2024 ஆம் ஆண்டில் ஷியோமி சீனாவில் EV -யை முதன்முதலில் அறிமுகப்படுத்தலாம் என்று நாங்கள் நம்புகிறோம். SU7 ஆனது ஹூண்டாய் ஐயோனிக் 6, போர்ஷே டேகன் மற்றும் டெஸ்லா மாடல் 3 போன்றவற்றுக்கு போட்டியாக இருக்கும்.
0 out of 0 found this helpful