எலெக்ட்ரிக் வாகன தயாரிப்புக்காக இந்தியாவில் நுழைய திட்டமிடும் ஃபாக்ஸ்கான்
published on ஆகஸ்ட் 03, 2023 05:39 pm by rohit
- 21 Views
- ஒரு கருத்தை எழுதுக
மொபிலிட்டி இன் ஹார்மனி (MIH) எனப்படும் EV-பிளாட்ஃபார்ம் உருவாக்கும் பிரிவு ஃபாக்ஸ்கானிடம் உள்ளது.
மின்சார வாகனங்கள் (EVs) இன்டர்னல் கம்பஸ்டன் இன்ஜின் (ICE) வாகனங்களுடன் நிறைய ஒற்றுமைகளைக் கொண்டிருக்கவில்லை என்பதால் ஆட்டோமொபைல் துறைக்கு வெளியே உள்ள பல பிராண்டுகளையும் போட்டியில் சேர தயாராகி வருகின்றன. எனவே, எலக்ட்ரானிக் பிராண்டுகள் மற்றும் ஹூவாய், ஓப்போ மற்றும் சியோமி போன்ற ஸ்மார்ட்போன் தயாரிப்புநிறுவனங்கள் கூட போட்டியில் பங்கு கொள்வதை நோக்கமாகக் கொண்டுள்ளன. இன்றைய தொழில்நுட்பம் நிறைந்த கார்களில் வழங்கப்படும் வாகன அமைப்புகளில் இதே போன்ற பிராண்டுகள் ஏற்கனவே அதிகம் ஈடுபட்டுள்ளன என்பதை பார்க்கும் போது இந்த நிறுவனங்களின் ஆர்வத்தை புரிந்து கொள்ள முடிகிறது.
சில ஆண்டுகளுக்கு முன்பு, அமெரிக்க நிறுவமான ஆப்பிளுக்கு ஐபோன்களை தயாரித்து கொடுக்கும் - ஃபாக்ஸ்கான் - EV துறையில் போட்டியிட ஆர்வம் காட்டியது. ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனம் இப்போது தனது மின்சார வாகனங்களை இந்தியாவில் உற்பத்தி செய்வதற்கான சாத்தியக்கூறுகளை தற்போது ஆராய்ந்து வருகிறது.
விவாதம் எதைப் பற்றியது?
ஃபாக்ஸ்கான் 2021 ஆம் ஆண்டில் மொபிலிட்டி இன் ஹார்மனி (MIH) என்ற கூட்டமைப்பைத் தொடங்கியது, இது எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான தளங்களை உருவாக்குவதை நோக்கமாக கொண்டது. சமீபத்தில் ராய்ட்டர்ஸிடம் பேசிய அதன் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் செங், "சாத்தியமான சந்தை இருக்கும் இடத்தில் நீங்கள் கட்டமைக்கிறீர்கள்... இந்தியா அல்லது தென்கிழக்கு ஆசியாவில், உங்களுக்கு இப்போது ஒரு பெரிய அளவிலான வாய்ப்பு உள்ளது, "எலக்ட்ரிக் வாகனத் துறையில் " இந்தியா அடுத்த தலைமுறைக்கு வளர்ந்து வரும் சக்தியாக உள்ளதாக " குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில், " ஒரு ஃபாக்ஸ்கான் ஆலை (இந்தியாவில்) இருந்தால், அது சிறப்பானதாக இருக்கும். அது முதன்மை தயாரிப்பு நிறுவனமாக ஃபாக்ஸ்கானுக்கு இருக்கும். அது ஒரு உள்ளூர் இந்திய ஆலையாக இருந்தால் மற்றும் இது இன்னும் போட்டி நிறைந்ததாக இருந்தால், அதை இந்திய ஆலையாகவே மாற்றலாம்" என்றால் . MIH-இன் நீண்டகால வளர்ச்சிக்கு இந்தியா முக்கியமானதாக இருக்கும் என்று அவர் எதிர்பார்க்கிறார்.
ஃபாக்ஸ்கான் தாய்லாந்து போன்ற பிற தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் EV -களுக்கான திட்டங்களைக் வைத்துள்ளது, மேலும் அங்கு அது ஏற்கனவே ஒரு உள்ளூர் நிறுவனத்துடன் கூட்டு முயற்சி ஒப்பந்தத்தைக் கொண்டுள்ளது.
EV திட்டங்கள் விவரம்
2022 ஆம் ஆண்டு நவம்பரில் முதன்முதலில் காட்சிப்படுத்தப்பட்ட புராஜெக்ட் X என்று அழைக்கப்படும் புதிய 3 இருக்கைகள் கொண்ட EV -யை உருவாக்க MIH அதன் முதன்மை அல்லது மற்றொரு நிறுவனத்துடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளது. நிறைய தொழில்நுட்பங்கள் இருந்தாலும், இதன் தயாரிப்பு விலை 20,000 டாலருக்கும் குறைவாக உள்ளது (அதாவது சுமார் ரூ.16.5 லட்சம்). இதன் முன்மாதிரி 2023 ஆம் ஆண்டு அக்டோபரில் ஜப்பானின் வாகன வர்த்தக கண்காட்சியில் வெளியிடப்பட்டு 2025 ஆம் ஆண்டுக்குள் உற்பத்தியில் நுழைய திட்டமிடப்பட்டுள்ளது. 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் 6 சீட்டர் மற்றும் 9 சீட்டர் எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகப்படுத்தவும் MIH திட்டமிட்டுள்ளது.
மேலும் படிக்கவும்: BYD யின் $1 பில்லியன் இந்திய முதலீட்டு திட்டம் நிராகரிக்கப்பட்டது: நடந்தது என்ன
ஃபாக்ஸ்கானின் EVs பற்றிய ஒரு சுருக்கம்
ஃபாக்ஸ்கான் குழுமமும் யூலோன் குழுமமும் இணைந்து ஃபாக்ஸ்ட்ரான் பிராண்டை உருவாக்கின. முந்தையது ஆட்டோமோட்டிவ் துறையைச் சேர்ந்தது 2022 அக்டோபர் மாதத்தில், ஃபாக்ஸ்ட்ரான் மாடல் B (ஹேட்ச்பேக்), மாடல் C (கிராஸ்ஓவர் SUV) மற்றும் மாடல் V (பிக்கப்) ஆகிய மூன்று புதிய எலெக்ட்ரிக் கார்களை அறிமுகப்படுத்தியது. அவற்றின் ரேஞ்ச் முறையே 450 கி.மீ மற்றும் 700 கி.மீ ஆகும். மூன்று எலெக்ட்ரிக் வாகனங்களின் மின்சார பவர்டிரெயின்களை ஃபாக்க்ஸ்ட்ரான் இன்னும் வெளியிடவில்லை. ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனம் பிளாட்ஃபார்ம் உற்பத்தியில் அதன் நிபுணத்துவத்தை EV தயாரிப்பிலும் பயன்படுத்துவதன் மூலம் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் மூலம், பல மாடல்கள் வெகுஜன உற்பத்தியை எளிதாக்குவதற்காக ஒரே அடிப்படை தளங்கள் மற்றும் பாகங்களை அவற்றின் சொந்த தனித்துவமான ஷெல்களுடன் பயன்படுத்தலாம்.
மேலும் படிக்கவும்: 2023 கடைசி காலாண்டில் அமெரிக்க EV உற்பத்தியாளர் ஃபிஸ்கர், ஓஷன் எக்ஸ்ட்ரீம் விக்யான் எடிஷனை இந்தியாவில் வெளியிட உள்ளார்