2024 ஐபிஎல் தொடருக்கான அதிகாரப்பூர்வ காராக Tata Punch EV தேர்வு செய்யப்பட்டுள்ளது
modified on மார்ச் 22, 2024 04:39 pm by ansh for டாடா பன்ச் EV
- 35 Views
- ஒரு கருத்தை எழுதுக
கடந்த 2023 ஆண்டில் நடைபெற்ற ஐபிஎல் தொடருக்கு டாடா டியாகோ EV -அதிகாரப்பூர்வ காராக இருந்தது. இந்த வருடன் அந்த இடத்தை பன்ச் EV இடம்பிடித்துள்ளது. எலக்ட்ரிக் கார் ஐபிஎல் தொடரின் அதிகாரப்பூர்வ காராக இடம்பிடிப்பது என்பது இரண்டாவது முறையாகும்.
இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) 2024 தொடர் கிரிக்கெட் போட்டி விரைவில் தொடங்க உள்ளது. இந்த போட்டியின் அதிகாரப்பூர்வ காராக டாடா பன்ச் EV இருக்கும் என்பதை டாடா நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. சமீபத்தில் முடிவடைந்த 2024 மகளிர் பிரீமியர் லீக்கின் (WPL) அதிகாரப்பூர்வ காராகவும் டாடா EV இருந்தது. ஐபிஎல் போட்டியின் அதிகாரப்பூர்வ காராக ஒரு எலெக்ட்ரிக் கார் இடம்பெறுவது என்பது இரண்டாவது முறையாகும். டாடா டியாகோ EV கடந்த ஆண்டு அதிகாரப்பூர்வமான காராக இருந்தது. பன்ச் EV பற்றிய விவரங்களை இங்கேபார்ப்போம்.
பேட்டரி பேக் & ரேஞ்ச்
மீடியம் ரேஞ்ச் |
லாங் ரேஞ்ச் |
|
பேட்டரி பேக் |
25 kWh |
35 kWh |
எலக்ட்ரிக் மோட்டார் பவர் |
82 PS |
122 PS |
எலக்ட்ரிக் மோட்டார் டார்க் |
114 Nm |
190 Nm |
கிளைம்டு ரேஞ்ச் |
315 கி.மீ |
421 கி.மீ |
பன்ச் EV ஆனது இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களுடன் வருகிறது. இரண்டும் ஃபிரன்ட் வீல் டிரைவ் (FWD) செட்டப்பில் ஒரே ஒரு எலக்ட்ரிக் மோட்டாருடன் இணைக்கப்பட்டுள்ளது. பெரிய பேட்டரி பேக் MIDC கிளைம்டு 421 கிமீ ரேஞ்சை வழங்குகிறது, மற்றும் சிறியது 315 கிமீ ரேஞ்சை வழங்குகிறது. இருப்பினும் நாம் சாலைகளில் ஓட்டும் போது பெரிய பேட்டரி பேக் சுமார் 320 கி.மீ ரேஞ்சையும், சிறியது 200 கி.மீ ரேஞ்சையும் வழங்கும்.
வசதிகள் மற்றும் பாதுகாப்பு
பன்ச் EV நிறைய வசதிகளுடன் கிடைக்கின்றது. 10.25-இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 10.25-இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே, வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே, வென்டிலேட்டட் முன் இருக்கைகள், ஏர் பியூரிஃபையர் மற்றும் சன்ரூஃப் ஆகியவற்றுடன் வருகிறது.
பாதுகாப்பிற்காக இதில் 6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக ), ABS உடன் EBD, எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (TPMS), ஆட்டோ ஹோல்டுடன் கூடிய எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் மற்றும் 360 டிகிரி கேமரா ஆகியவை உள்ளன.
விலை மற்றும் போட்டியாளர்கள்
டாடா பன்ச் EV -யின் விலை ரூ. 10.99 லட்சத்தில் இருந்து ரூ. 15.49 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை இருக்கும். இது சிட்ரோன் eC3 -யுடன் நேரடியாக போட்டியிடும். மேலும் இது டாடா டியாகோ EV, எம்ஜி காமெட் EV ஆகியவற்றுக்கு பிரீமியம் மாற்றாக இருக்கும்.
மேலும் படிக்க: பன்ச் EV ஆட்டோமெட்டிக்