Tata Tiago EV முதல் Tata Nexon EV வரை: டாடாவின் எலக்ட்ரிக் கார்களை வாங்க இந்த மார்ச் மாதம் எவ்வளவு நாள்கள் காத்திருக்க வேண்டியிருக்கும் ?
published on மார்ச் 21, 2024 03:13 pm by shreyash for டாடா பன்ச் EV
- 17 Views
- ஒரு கருத்தை எழுதுக
டாடா -வின் இவி கார்களை பொறுத்தவரையில் புதிய வாடிக்கையாளர்கள் உடனடியாக வாங்கக் கூடிய மாடல்களை கண்டறிவது கடினமானது. கார்களின் வெயிட்டிங் பீரியட் எனப்படும் காத்திருப்பு காலம் சராசரியாக சுமார் 2 மாதங்கள் வரை உள்ளது.
இந்த மார்ச் மாதத்தில் டாடா EV -களை வாங்க நீங்கள் முடிவு செய்திருந்தால் அனைத்து மாடல்களிலும் கணிசமான அளவுக்கு காத்திருப்பு காலம் உள்ளதை நீங்கள் பார்க்கலாம். டாடாவின் இவி சீரிஸ்களான டியாகோ EV, டிகோர் EV, பன்ச் EV மற்றும் நெக்ஸான் EV என அனைத்துக்கும் இது பொருந்தும். எனவே உங்களுக்கு உதவும் வகையில் இந்தியாவின் டாப் 20 நகரங்களில் டாடாவின் ஆல் எலக்ட்ரிக் கார்களுக்கான வெயிட்டிங் பீரியட் பற்றிய விவரங்களை நாங்கள் விவரித்துள்ளோம்.
நகரம் |
டாடா டியாகோ EV |
டாடா டிகோர் EV |
டாடா பன்ச் EV |
டாடா நெக்ஸான் EV |
புது டெல்லி |
2.5 மாதங்கள் |
2.5 மாதங்கள் |
1.5 முதல் 2.5 மாதங்கள் |
2 மாதங்கள் |
பெங்களூரு |
1.5 முதல் 2 மாதங்கள் |
1.5 முதல் 2 மாதங்கள் |
1.5 முதல் 2 மாதங்கள் |
2 மாதங்கள் |
மும்பை |
1-2 மாதங்கள் |
1-2 மாதங்கள் |
1-2 மாதங்கள் |
1-2 மாதங்கள் |
ஹைதராபாத் |
2 மாதங்கள் |
2-3 மாதங்கள் |
1 மாதம் |
2 மாதங்கள் |
புனே |
2 மாதங்கள் |
2-3 மாதங்கள் |
2 மாதங்கள் |
2 மாதங்கள் |
சென்னை |
2 மாதங்கள் |
2 மாதங்கள் |
1-2 மாதங்கள் |
2-3 மாதங்கள் |
ஜெய்ப்பூர் |
2 மாதங்கள் |
2 மாதங்கள் |
2 மாதங்கள் |
2-3 மாதங்கள் |
அகமதாபாத் |
2 மாதங்கள் |
2 மாதங்கள் |
2.5 மாதங்கள் |
2 மாதங்கள் |
குருகிராம் |
2 மாதங்கள் |
2 மாதங்கள் |
1.5 முதல் 2.5 மாதங்கள் |
2 மாதங்கள் |
லக்னோ |
2 மாதங்கள் |
2 மாதங்கள் |
2-2.5 மாதங்கள் |
2-3 மாதங்கள் |
கொல்கத்தா |
2 மாதங்கள் |
2-3 மாதங்கள் |
2 மாதங்கள் |
2 மாதங்கள் |
தானே |
2 மாதங்கள் |
2 மாதங்கள் |
2 மாதங்கள் |
2-3 மாதங்கள் |
சூரத் |
2 மாதங்கள் |
2 மாதங்கள் |
2.5 மாதங்கள் |
2-3 மாதங்கள் |
காசியாபாத் |
2 மாதங்கள் |
2 மாதங்கள் |
1.5 மாதங்கள் |
2 மாதங்கள் |
சண்டிகர் |
3 மாதங்கள் |
2-3 மாதங்கள் |
2.5 மாதங்கள் |
3 மாதங்கள் |
கோயம்புத்தூர் |
2 மாதங்கள் |
2-3 மாதங்கள் |
1.5-2 மாதங்கள் |
2 மாதங்கள் |
பாட்னா |
1-3 மாதங்கள் |
2-3 மாதங்கள் |
2 மாதங்கள் |
2 மாதங்கள் |
ஃபரிதாபாத் |
2 மாதங்கள் |
2-3 மாதங்கள் |
2 மாதங்கள் |
2 மாதங்கள் |
இந்தூர் |
2 மாதங்கள் |
2-3 மாதங்கள் |
1-2 மாதங்கள் |
2 மாதங்கள் |
நொய்டா |
2 மாதங்கள் |
2 மாதங்கள் |
1-1.5 மாதங்கள் |
2 மாதங்கள் |
முக்கிய விவரங்கள்
-
டாடா டியாகோ EV -வை வாங்க சராசரியாக 2 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டியிருக்கும். எலெக்ட்ரிக் ஹேட்ச்பேக் சண்டிகர் மற்றும் பாட்னாவில் அதிகபட்சமாக 3 மாதங்கள் வரை வெயிட்டிங் பீரியடை கொண்டுள்ளது. மும்பையில் வாடிக்கையாளர்கள் 1 முதல் 2 மாதங்களுக்குள் டியாகோ EV -யை டெலிவரியை எடுக்கலாம்.
-
டியாகோ EV உடன் ஒப்பிடும்போது டாடா டிகோர் EV 2.5 மாதங்கள் வரை அதிக சராசரி வெயிட்டிங் பீரியடை கொண்டுள்ளது. ஹைதராபாத், புனே, கொல்கத்தா, சண்டிகர், கோயம்புத்தூர், பாட்னா, ஃபரிதாபாத் மற்றும் இந்தூரில் உள்ள வாடிக்கையாளர்கள் டிகோர் இவி -யை வாங்க பெற 3 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டியிருக்கும்.
மேலும் பார்க்க: புதிதாக மேலும் 2 வசதிகளுடன் மேம்படுத்தப்படவுள்ள Tata Tiago EV
டாடா பன்ச் EV சமீபத்தில் அதாவது ஜனவரி 2024 மாதம்தான் வெளியிடப்பட்டது. சராசரியாக 2 மாதங்கள் வெயிட்டிங் பீரியடை கொண்டுள்ளது. புது டெல்லி, அகமதாபாத், குருகிராம், லக்னோ, சூரத் மற்றும் சண்டிகர் போன்ற நகரங்களில் இதன் அதிகபட்ச காத்திருப்பு காலம் 2.5 மாதங்கள் வரை நீடிக்கிறது. இருப்பினும் நீங்கள் ஹைதராபாத்தில் வசிப்பவர் என்றால் ஒரு மாதத்திற்குள் பன்ச் EV -யின் வீட்டுக்கு கொண்டு செல்லலாம்.
-
டாடா நெக்ஸான் EV சென்னை, ஜெய்ப்பூர், லக்னோ, தானே, சூரத் மற்றும் சண்டிகர் போன்ற நகரங்களில் அதிகபட்ச காத்திருப்பு காலம் சராசரியாக 2.5 மாதங்கள் வரை இருக்கின்றது. இருப்பினும் நீங்கள் மும்பையில் வசிக்கிறீர்கள் என்றால் உங்கள் நெக்ஸான் EV -யை 1 மாதத்தில் டெலிவரி எடுக்கலாம்.
நீங்கள் டாடா EV -யில் சில கூடுதலான தள்ளுபடிகளை பெற விரும்பினாலோ, 2023 ஆண்டில் தயாரிக்கப்பட்ட பழைய கார்களை வாங்குவதில் உங்களுக்கு எந்த தயக்கமும் இல்லையென்றாலோ உங்களுக்கு அருகிலுள்ள டீலரை அணுகி பழைய கார்கள் ஏதாவது ஸ்டாக் இருக்கின்றதா என்பதை விசாரித்து கொள்ளலாம்.
மேலும் படிக்க: டாடா பன்ச் EV ஆட்டோமெட்டிக்
0 out of 0 found this helpful