• English
    • லாகின் / ரிஜிஸ்டர்

    Tata Punch Camo எடிஷன் வெளியிடப்படுள்ளது

    shreyash ஆல் அக்டோபர் 04, 2024 06:47 pm அன்று பப்ளிஷ் செய்யப்பட்டது

    90 Views
    • ஒரு கருத்தை எழுதுக

    புதிய பன்ச் கேமோ எடிஷன் மிட்-ஸ்பெக் அக்கம்பிளிஸ்டு பிளஸ் மற்றும் டாப்-ஸ்பெக் கிரியேட்டிவ் பிளஸ் வேரியன்ட்களுடன் கிடைக்கும்.

    Tata Punch Camo Edition

    • பன்ச் கேமோ பதிப்பு புதிய சீவீட் கிரீன் எக்ஸ்ட்ரீயர் ஷேடை கொண்டுள்ளது.

    • எக்ஸ்ட்ரீயர் மாற்றங்களில் 16-இன்ச் அடர் சாம்பல் அலாய் வீல்கள் மற்றும் 'கேமோ' பேட்ஜ்களும் அடங்கும்.

    • உள்ளே, இது கேமோ தீம் சீட் அப்ஹோல்ஸ்டரியைப் பெறுகிறது.

    • 10.25-இன்ச் டச் ஸ்கிரீன், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் மற்றும் ஆட்டோ ஏசி ஆகியவை சிறப்பம்சங்கள்.

    • இரட்டை முன் ஏர்பேக்குகள், EBD உடன் ABS மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள் மூலம் பாதுகாப்பு கவனிக்கப்படுகிறது.

    • 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் CNG பவர்டிரெய்ன் ஆப்ஷன்களுடன் வருகிறது.

    டாடா பன்ச் 8.45 லட்சம் ரூபாய் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விலையில், 2024 பண்டிகைக் காலத்திற்கான சிறப்பு மற்றும் லிமிடெட் பதிப்புகளின் வரிசையில் காமோ பதிப்பில் இணைந்துள்ளது. முதலில் 2022 இல் தொடங்கப்பட்டது, பன்ச் கேமோ பதிப்பு 2023 இல் நிறுத்தப்பட்டது. இந்த முறையும், பன்ச் கேமோ பதிப்பு குறைந்த எண்ணிக்கையிலான யூனிட்களில் கிடைக்கிறது.

    விலை

    பன்ச் கேமோ பதிப்பு மிட்-ஸ்பெக் அக்கம்பிளிஸ்டு பிளஸ் மற்றும் டாப்-ஸ்பெக் கிரியேட்டிவ் பிளஸ் வேரியன்ட்களுடன் வழங்கப்படுகிறது. வேரியன்ட் வாரியான விலை பின்வருமாறு:

    வேரியன்ட்கள்

    வழக்கமான விலை

    கேமோ பதிப்பு விலை

    வித்தியாசம்

    மேனுவல்

    அக்கம்பிளிஸ்டு பிளஸ்

    ரூ.8.30 லட்சம்

    ரூ.8.45 லட்சம்

    + ரூ.15,000

    அக்கம்பிளிஸ்டு பிளஸ் எஸ்

    ரூ.8.80 லட்சம்

    ரூ.8.95 லட்சம்

    + ரூ.15,000

    அக்கம்பிளிஸ்டு பிளஸ் சிஎன்ஜி

    ரூ.9.40 லட்சம்

    ரூ.9.55 லட்சம்

    + ரூ.15,000

    அக்கம்பிளிஸ்டு பிளஸ் S CNG

    ரூ.9.90 லட்சம்

    ரூ.10.05 லட்சம்

    + ரூ.15,000

    கிரியேட்டிவ் பிளஸ்

    ரூ.9 லட்சம்

    ரூ.9.15 லட்சம்

    + ரூ.15,000

    கிரியேட்டிவ் பிளஸ் எஸ்

    ரூ.9.45 லட்சம்

    ரூ.9.60 லட்சம்

    + ரூ.15,000

    ஆட்டோமெட்டிக் (AMT)

    அக்கம்பிளிஸ்டு பிளஸ்

    ரூ.8.90 லட்சம்

    ரூ.9.05 லட்சம்

    + ரூ.15,000

    அக்கம்பிளிஸ்டு பிளஸ் எஸ்

    ரூ.9.40 லட்சம்

    ரூ.9.55 லட்சம்

    + ரூ.15,000

    கிரியேட்டிவ் பிளஸ்

    ரூ.9.60 லட்சம்

    ரூ.9.75 லட்சம்

    + ரூ.15,000

    கிரியேட்டிவ் பிளஸ் எஸ்

    ரூ.10 லட்சம்

    ரூ.10.15 லட்சம்

    + ரூ.15,000

    பன்ச் கேமோ பதிப்பு அதன் வழக்கமான வேரியன்ட்களை விட ரூ.15,000 கூடுதல் விலையில் கிடைக்கும்.

    வெளிப்புறத்தில் உள்ள மாற்றங்கள்

    2024 பன்ச் கேமோ பதிப்பு இப்போது சீவீட் கிரீன் எக்ஸ்ட்ரீயர் ஷேடில் வொயிட் ரூஃப் உடன் கிடைக்கும். இது பன்ச் கேமோவின் முந்தைய பதிப்பில் கிடைத்த ஃபோலியாஜ் கிரீன் ஷேடிலிருந்து வேறுபட்டது. வெளியில் குறிப்பிடத்தக்க மற்றொரு மாற்றம் அதன் 16-இன்ச் டார்க் கிரே அலாய் வீல்கள் ஆகும். மேலும் இந்த லிமிடெட் பதிப்பு மைக்ரோ எஸ்யூவி -யை எளிதாக அடையாளம் காண பக்க ஃபெண்டரில் 'கேமோ' பேட்ஜும் கொடுக்கப்பட்டுள்ளது.

    மேலும் பார்க்க: மாருதி ஸ்விஃப்ட் CNG Vxi (O) மிட்-ஸ்பெக் வேரியன்ட் 5 படங்களில் விளக்கப்பட்டுள்ளது

    கேபின் மற்றும் வசதிகள்

    உள்ளே, 2024 பன்ச் கேமோ சிறப்புப் பதிப்பின் தீம் உடன் இணைக்கும் வகையில் பிளாக் கலர் சீட் அப்ஹோல்ஸ்டரி மற்றும் பிளாக் அவுட் டோர் ஓப்பனிங் லீவர்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. டோர் பேட்களிலும் கேமோ கிராபிக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. 

    இப்போது காரில் 10.25-இன்ச் டச் ஸ்கிரீன், செமி-டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே, ஆட்டோ ஏசி மற்றும் வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் ஆகியவற்றுடன் வருகிறது. இதன் பாதுகாப்பு வசதிகளில் டூயல் முன்பக்க ஏர்பேக்குகள், EBD உடன் ABS, பின்புற பார்க்கிங் கேமரா மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள் ஆகியவை உள்ளன.

    பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள்

    டாடா பெட்ரோல் மற்றும் CNG பவர்டிரெய்ன் ஆப்ஷன்களுடன் பன்ச் வழங்குகிறது. அவற்றின் விரிவான விவரங்கள் இங்கே:

    இன்ஜின்

    1.2 லிட்டர் நேச்சுரல் ஆஸ்பிரேட்டட் பெட்ரோல்

    1.2 லிட்டர் பெட்ரோல்+CNG

    பவர்

    88 PS

    73.5 PS

    டார்க்

    115 Nm

    103 Nm

    டிரான்ஸ்மிஷன்

    5-ஸ்பீடு MT/ 5-ஸ்பீடு AMT

    5-ஸ்பீடு MT

    விலை & போட்டியாளர்கள்

    டாடா பன்ச் -ன் விலை ரூ.6.13 லட்சம் முதல் ரூ.10.15 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) வரை இருக்கும். இது  ஹூண்டாய் எக்ஸ்டர் உடன் நேரடியாக போட்டியிடும். மேலும் மாருதி ஃபிரான்க்ஸ் மற்றும் டொயோட்டா டெய்சர் ஆகியவற்றுக்கு மாற்றாக இருக்கும்.

    கார் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகளை பெற வேண்டுமா? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.

    மேலும் படிக்க: டாடா பன்ச் ஏஎம்டி

    was this article helpful ?

    Write your Comment on Tata பன்ச்

    ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

    கார் செய்திகள்

    • டிரெண்டிங்கில் செய்திகள்
    • சமீபத்தில் செய்திகள்

    டிரெண்டிங் எஸ்யூவி கார்கள்

    • லேட்டஸ்ட்
    • உபகமிங்
    • பிரபலமானவை
    *ex-showroom <cityname> யில் உள்ள விலை
    ×
    we need your சிட்டி க்கு customize your experience