இப்போது இரண்டு சன்ரூஃப் ஆப்ஷன்களுடன் Tata Nexon கிடைக்கும்
பனோரமிக் சன்ரூஃப் எஸ்யூவி -ன் CNG பதிப்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இப்போது வழக்கமான நெக்ஸானின் ஃபுல்லி லோடட் வேரியன்ட்டிலும் இது கிடைக்கும்.
-
நெக்ஸான் சிங்கிள்-பேன் மற்றும் பனோரமிக் சன்ரூஃப் ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது.
-
டாடா எஸ்யூவி -யின் டாப்-ஸ்பெக் ஃபியர்லெஸ் பிளஸ் PS டிரிமில் மட்டுமே பனோரமிக் யூனிட்டை வழங்குகிறது.
-
மற்ற சன்ரூஃப்-எலிஜிபிள் வேரியன்ட்கள் சிங்கிள் பேனல் யூனிட் உடன் மட்டுமே வருகின்றன.
-
அதன் எக்யூப்மென்ட் செட்டில் அமைப்பில் வேறு எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
-
பெட்ரோல், டீசல், EV மற்றும் CNG என இப்போது 4 எடிஷன்களில் வழங்கப்படுகிறது:
-
நெக்ஸானின் விலை ரூ. 8 லட்சம் முதல் ரூ.15.50 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா) உள்ளது.
மஹிந்திரா நிறுவனம் தார் ரோக்ஸ் எஸ்யூவி -யில் 2 சன்ரூஃப்களின் ஆப்ஷன் உடன் அறிமுகப்பட்டதை சமீபத்தில் பார்த்தோம். அதே போல டாடா நெக்ஸான் தேர்ந்தெடுக்கப்பட்ட வேரியன்ட்டை பொறுத்து இப்போது அதே ஆப்ஷன்களுடன் வழங்கப்படுகிறது.
பனோரமிக் சன்ரூஃப்
நெக்ஸான் சிஇன்ஜி சமீபத்தில் விற்பனைக்கு வந்தது. மேலும் இதில் பனோரமிக் சன்ரூஃப் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நெக்ஸானின் ஃபுல்லி லோடட் ஃபியர்லெஸ் பிளஸ் PS CNG வேரியன்ட்டிற்கு மட்டுமே இது கிடைக்கும். இப்போது கார் தயாரிப்பாளர் வழக்கமான பெட்ரோல் மற்றும் டீசல் வேரியன்ட்களுடன் பனோரமிக் சன்ரூஃப் கிடைக்கச் செய்துள்ளது. இது ஸ்டாண்டர்டான நெக்ஸானுடன் கூடிய டாப்-ஸ்பெக் ஃபியர்லெஸ் பிளஸ் PS டிரிமிற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. CNG மற்றும் பெட்ரோல்-டீசல் வரிசையில் உள்ள மற்ற சன்ரூஃப்-தகுதியான வேரியன்ட்கள் சிங்கிள்-பேன் யூனிட்டை மட்டுமே பெறுகின்றன.
வசதிகளில் வேறு எந்த மாற்றமும் இல்லை
பனோரமிக் சன்ரூஃப் சேர்க்கப்பட்டுள்ளதை தவிர நெக்ஸானின் உபகரணங்களுடன் டாடா டிங்கர் செய்யவில்லை. இது டூயல் 10.25-இன்ச் ஸ்கிரீன்கள் (ஒன்று இன்ஸ்ட்ரூமென்ட்க்கு மற்றும் இன்ஃபோடெயின்மென்ட்க்கு), வென்டிலேட்டட் முன் சீட்கள், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் மற்றும் கனெக்டட் கார் டெக்னாலஜியுடன் வருகிறது.
பாதுகாப்பு -க்காக இன்னும் 6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டான), 360 டிகிரி கேமரா, டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS) மற்றும் முன் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள் உள்ளன.
மேலும் படிக்க: Tata Nexon விமர்சனம்: சிறப்பான காராக இருக்க நிறைய சாத்தியங்கள் உள்ளன
என்னென்ன இன்ஜின் ஆப்ஷன்ள் ?
டாடா நெக்ஸான் பெட்ரோல் மற்றும் டீசல் பவர் ட்ரெய்ன்களுடன் கிடைக்கிறது. அதன் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
விவரங்கள் |
1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல் |
1.2-லிட்டர் டர்போ-பெட்ரோல்+சிஇன்ஜி |
1.5 லிட்டர் டீசல் |
பவர் |
120 PS |
100 PS |
115 PS |
டார்க் |
170 Nm |
170 Nm |
260 Nm |
டிரான்ஸ்மிஷன் |
5-ஸ்பீடு MT, 6-ஸ்பீடு MT, 6-ஸ்பீடு AMT, 7-ஸ்பீடு DCT* |
6-ஸ்பீடு MT |
6-ஸ்பீடு MT, 6-ஸ்பீடு AMT |
*DCT- டூயல் கிளட்ச் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன்
தொடர்புடையது: Tata Nexon CNG மற்றும் Maruti Brezza CNG: விவரங்கள் ஒப்பீடு
விலை மற்றும் போட்டியாளர்கள்
டாடா நெக்ஸான் விலை ரூ.8 லட்சம் முதல் ரூ.15.50 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா) உள்ளது. மேலும் இது மாருதி பிரெஸ்ஸா, கியா சோனெட், மஹிந்திரா XUV 3XO, மற்றும் ரெனால்ட் கைகர் போன்ற கார்களுடன் போட்டியிடுகிறது . மேலும் சப்-4மீ கிராஸ்ஓவர்களான டொயோட்டா டெய்சர் மற்றும் மாருதி ஃபிரான்க்ஸ் போன்றவற்றுக்கு மாற்றாகவும் செயல்படுகிறது.
கார்கள் தொடர்பான லேட்டஸ்ட் அப்டேட்டுகளுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.
மேலும் படிக்க: நெக்ஸான் ஏஎம்டி
Write your Comment on Tata நிக்சன்
is the panoramic sunroof for petrol official?, cant find any details on the tata website