• English
  • Login / Register

நாளை அறிமுகமாகும் Tata Nexon EV Facelift: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் இங்கே

published on செப் 13, 2023 07:29 pm by tarun for டாடா நெக்ஸன் இவி

  • 32 Views
  • ஒரு கருத்தை எழுதுக

டாடா நெக்ஸான் EVஃபேஸ்லிஃப்ட் காரை பற்றிய அனைத்து விவரங்களும் வெளியாகியுள்ளன, அதே நேரத்தில் அதன் விலை விவரங்களுக்காக காத்திருக்கிறோம்

Tata Nexon EV facelift

  • டாடா நெக்ஸான் EV ஃபேஸ்லிஃப்ட் தேர்வு செய்ய கிரியேட்டிவ், ஃபயர்லெஸ் மற்றும் எம்பவர்டு ஆகிய மூன்று வேரியன்ட்களில் கிடைக்கிறது.

  • புதுப்பிக்கப்பட்ட முன்புறம் மற்றும் பின்புறத்துடன் புதிய ஸ்டைலிங் மற்றும் இணைக்கப்பட்ட LED  லைட் பாகங்களை கொண்டுள்ளது.

  • கேபினும் கணிசமாக அப்டேட் செய்யப்பட்டுள்ளது, டச் எனபில்டு AC பேனல் மற்றும் 2-ஸ்போக் ஸ்டீயரிங் வீல் ஆகியவற்றை கொண்டுள்ளது.

  • இப்போது 10.25 இன்ச் டிஜிட்டல் கிளஸ்ட்டர், 12.3 இன்ச் டச்ஸ்கிரீன் சிஸ்டம் மற்றும் 9 ஸ்பீக்கர் JBL  சவுண்ட் சிஸ்டம் ஆகியவற்றையும் கொண்டு உள்ளது.

  • ஆறு ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்ட்), 360 டிகிரி கேமரா, முன்பக்க பார்க்கிங் சென்சார்கள் மற்றும் மழையை உணரும் வைப்பர்கள் ஆகியவை உள்ளன.

  • மிட் ரேஞ்ச் கார் வேரியன்ட்கள் 325 கிமீ வரையும், லாங் ரேஞ்ச் 465 கிமீ வரையும் பயணதூர வரம்பை வழங்கும்.

டாடா நெக்ஸான் இவி ஃபேஸ்லிஃப்ட் கார் நாளை வெளியிடப்படவுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் பெற்ற சிறிய மாற்றங்களைத் தவிர, எலெக்ட்ரிக் SUVயின் முதல் பெரிய அப்டேட் இதுவாகும். இதற்கான முன்பதிவு ஏற்கனவே நடைபெற்று வருகிறது, இது ஏற்கனவே டீலர்ஷிப்புகளை சென்றடைந்துள்ளது.

டாடா நெக்ஸான் EVஃபேஸ்லிஃப்ட் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் இங்கே:

கார்களின் வேரியன்ட்கள்

நெக்ஸான் EV ஃபேஸ்லிஃப்ட் கார் கிரியேட்டிவ், பியர்லெஸ் மற்றும் எம்பவர்டு என மூன்று வேரியன்ட்களில் கிடைக்கிறது. பேஸ் வேரியண்ட் ஆனது மிட்-ரேஞ்ச் (MR) பேட்டரி பேக்கில் மட்டுமே கிடைக்கிறது, மற்றவை MR மற்றும் லாங்-ரேஞ்ச் (LR) இரண்டின் ஆப்ஷனையும் பெறுகின்றன.

வெளிப்புற ஸ்டைலிங்

Tata Nexon EV facelift

டாடா நெக்ஸான் MR ஃபேஸ்லிஃப்ட் முற்றிலும் புதிய அடையாளத்திற்காக அதன் வடிவமைப்பு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முன்பக்கத்தில், இணைக்கப்பட்ட LED DRL -கள், மென்மையான மூடிய கிரில் மற்றும் ஹாரியர் EV-யிலிருந்து பெறப்பட்ட  ஸ்பிளிட் ஹெட்லைட் அமைப்புடன் இது மிகவும் நவீன மற்றும் எதிர்கால தோற்றத்தை கொண்டுள்ளது.

Tata Nexon EV facelift side

 புதிய 16 இன்ச் ஏரோடைனமிக்கலி ஸ்டைல்டு அலாய் வீல்களில் மட்டுமே மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. DRL -களை போலவே, வெல்கம் லைட் பங்க்ஷனை ஆதரிக்கும் கனெக்டட் LED  டெயில் விளக்குகளை டெர்ரியர் வெளிப்படுத்துகிறது. பூட் லிட் மற்றும் பம்பர் புதிய வடிவத்துடன் வருகிறது, மேலும் மிகவும் முக்கியமான மற்றும் வலுவான  தோற்றத்தை கொண்டுள்ளது. அதன் தோற்றத்தை மெருகேற்றும் வகையில், பின்புற வைப்பர் ஸ்பாய்லரில் அழகாக பொருத்தப்பட்டுள்ளது.
ஸ்டைலிங் மாற்றங்கள் ICE மூலம் இயங்கும் நெக்ஸானுக்கு ஏற்ப இருந்தாலும், இன்னும் சில தனித்துவமான அப்டேட்களும் இதில் உள்ளன.

தொடர்புடையவை: Nexon EV Facelift காரின் ஸ்டீயரிங் வீலில் ஏர்பேக் எப்படி பொருத்தப்பட்டுள்ளது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்

இன்டீரியர் ஸ்டைலிங்

Tata Nexon EV facelift cabin

புதிய டூயல்-டோன் தீம் மற்றும் புதிய வடிவமைப்பிலான டாஷ்போர்டு லே அவுட்டுடன் கேபினுக்குள் புதிய மாற்றங்கள் தொடர்கின்றன. டாடா அவின்யா கான்செப்ட்டால் ஈர்க்கப்பட்டு, டாடா லோகோவைக் கொண்ட பேக்லைட் டிஸ்ப்ளேவுடன் புதிய டூ ஸ்போக் ஸ்டீயரிங் வீல் உருவாக்கப்பட்டுள்ளது.

ரெகுலர் நெக்ஸான் காரை போலவே புதிய டச் எனபில்டு கிளைமேட் கன்ட்ரோல்  பேனல் உள்ளது. இறுதியாக, EV -க்கு வேரியன்ட்டை பொறுத்து பிரத்யேகமான சீட் அப்ஹோல்ஸ்டரியும் கிடைக்கும்.

புதிய அம்சங்கள்

Tata Nexon EV facelift 12.3-inch touchscreen

 புதிய 10.25 இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே சேர்க்கப்பட்டுள்ளது, இது ஆன் ஸ்கிரீன் நேவிகேஷனையும் ஆதரிக்கிறது. டாடா தனது மிகப்பெரிய டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை பயன்படுத்துகிறது: 12.3 இன்ச் லேன்ட்ஸ்கேப் சார்ந்த யூனிட்டாக உள்ளது.

9 ஸ்பீக்கர் JBL சவுண்ட் சிஸ்டம் மற்றும் முன்பக்க பயணிகள் இருக்கை உயரத்தை சரிசெய்து கொள்ளும் வசதி ஆகியவை பிற புதிய அம்சங்களாகும். எலக்ட்ரிக் சன்ரூஃப், வயர்லெஸ் போன் சார்ஜர், ஆட்டோமேட்டிக் AC, க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் வென்டிலேட்டட் முன்புற இருக்கைகள் ஆகியவை ஏற்கனவே நெக்ஸான் EV -யின் அம்சங்கள் பட்டியலில் ஒரு பகுதியாக இருந்தன.

EV -க்கான தனிப்பட்ட திறன்களை பொறுத்தவரை, புதிய நெக்ஸான் EV, V2L மற்றும் V2V சார்ஜிங்கை சப்போர்ட் செய்யும். இவை அடிப்படையில் உங்கள் மின்சார எஸ்யூவி - யை உபகரணங்களை இயக்க ஒரு பெரிய பவர் பேங்காக பயன்படுத்த அனுமதிக்கின்றன (கேம்ப்பிங் - போன்ற நேரங்களில் ), அல்லது மற்றொரு EV செல்லும் தூரத்தை அதிகரிக்க உதவுகின்றன.

இதையும் பாருங்கள்: காணுங்கள்: டாடா நெக்ஸான் இவி ஃபேஸ்லிஃப்ட் V2L அம்சம்

கூடுதல் பாதுகாப்பு

Tata Nexon EV facelift rearview camera

நெக்ஸான் EV ஃபேஸ்லிஃப்ட் காரின் பாதுகாப்பு அம்சங்களில் ஆறு ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்ட்), ESC, ISOFIX  சைல்டு சீட் மவுண்ட்கள், 360 டிகிரி கேமரா, முன்பக்க பார்க்கிங் சென்சார்கள் மற்றும் ரெயின் சென்சிங் வைப்பர்கள் உள்ளன.

மேம்படுத்தப்பட்ட பயணதூரம்

 

விவரங்கள்

 
மிட் ரேஞ்ச்

 
லாங் ரேஞ்ச்

 
பேட்டரி

30.2kWh

40.5kWh

 
பயணதூரம்:

325 kms

465 kms

 
பவர் /டார்க்

129PS/ 215Nm

144PS/ 215Nm

நெக்ஸான் EV ஃபேஸ்லிஃப்ட் 30.2kWh மற்றும் 40.5kWh பேட்டரி பேக்குகளைத் தக்க வைத்துக் கொண்டாலும், கார் பயணிக்கும் தூரம் மற்றும் சக்தி அதிகரித்துள்ளது. மிட் ரேஞ்ச் (முந்தைய பிரைம்) கார் வேரியன்ட் இப்போது 13 கிலோமீட்டர் கூடுதலாக பயணிக்க  முடியும், அதே நேரத்தில் லாங் ரேஞ்ச் (முந்தைய மேக்ஸ்) கூடுதலாக 12 கிலோமீட்டர் பயணதூர ரேஞ்சை வழங்க முடியும்.

எதிர்பார்க்கப்படும் விலை

Tata Nexon EV facelift rear

நெக்ஸான் EV ஃபேஸ்லிஃப்டட்  தற்போதைய விலையான ரூ. 14.49 லட்சத்திலிருந்து ரூ.19.54 லட்சம் வரை (எக்ஸ் ஷோ ரூம் ) விட கூடுதல் விலையில் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.  MG ZS EV  மற்றும் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் போன்ற மாடல்களுக்கு விலை குறைவான மாற்று தேர்வாக டாடாவின் எலெக்ட்ரிக் எஸ்யூவி இருக்கும் நேரத்தில் மஹிந்திரா XUV400 EV -க்கு போட்டியாகவும் இருக்கும்.

மேலும் படிக்க: டாடா நெக்ஸான் AMT

was this article helpful ?

Write your Comment on Tata நெக்ஸன் இவி

explore மேலும் on டாடா நெக்ஸன் இவி

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending எலக்ட்ரிக் கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்
  • புதிய வகைகள்
    மஹிந்திரா be 6
    மஹிந்திரா be 6
    Rs.18.90 - 26.90 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • புதிய வகைகள்
    மஹிந்திரா xev 9e
    மஹிந்திரா xev 9e
    Rs.21.90 - 30.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • ஆடி க்யூ6 இ-ட்ரான்
    ஆடி க்யூ6 இ-ட்ரான்
    Rs.1 சிஆர்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • மஹிந்திரா xev 4e
    மஹிந்திரா xev 4e
    Rs.13 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • மாருதி இ vitara
    மாருதி இ vitara
    Rs.17 - 22.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
×
We need your சிட்டி to customize your experience