Tata Nexon ஒரு புதிய வசதியாக பனோரமிக் சன்ரூஃபை பெறலாம்
டாடா நிக்சன் க்காக மே 17, 2024 07:02 pm அன்று samarth ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது
- 67 Views
- ஒரு கருத்தை எழுதுக
டாடா நெக்ஸான் ஃபேக்டரி செட்டிங்கில் பனோரமிக் சன்ரூஃப் பொருத்தப்பட்டிருப்பதைக் காட்டும் வீடியோ ஆன்லைனில் வெளிவந்துள்ளது. நெக்ஸானில் இது விரைவில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மஹிந்திரா XUV 3XO -ன் சமீபத்திய அறிமுகம் சில செக்மெண்டின் முதன்மை வசதிகள் பலவற்றை கொண்டுள்ளது. அப்டேட்களை கவனத்தில் வைக்குமாறு போட்டியாளர்களைத் தூண்டியது. அதன் செக்மென்ட்டில் முன்னணியில் இருக்கும் டாடா நெக்ஸான், பனோரமிக் சன்ரூஃப்பை அறிமுகப்படுத்தி முதலில் பதிலளிப்பதாகத் தெரிகிறது. இந்த ஊகமானது ஒரு தொழிற்சாலையின் தளம் போன்ற இடத்தில் சன்ரூஃப் உடன் கூடிய நெக்ஸானை காட்டும் சமீபத்திய ஆன்லைன் வீடியோவால் ஏற்பட்டது.
இது XUV 3XO விளைவா?
XUV3XO ஆனது XUV300-க்கு மாற்றாக ஃபேஸ்லிஃப்ட் மாடலாக அறிமுகப்படுத்தப்பட்டது. இது பல செக்மென்ட்டின் முன்னணி வசதிகள் மற்றும் ஒரு சிறப்பான அறிமுக விலையை கொண்டிருந்தது. ஆர்டர் புத்தகங்களைத் திறந்த முதல் மணி நேரத்திலேயே புதிய சப்-4m எஸ்யூவிக்கு 50,000-க்கும் அதிகமான முன்பதிவுகளை மஹிந்திரா பெறுவதற்கு இந்தக் காரணிகள் பங்களித்தன.
ஏப்ரல் 29, 2024 அன்று மஹிந்திரா XUV 3XO அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, டாடா நெக்ஸானுக்கான புதிய பேஸ்-ஸ்பெக் பெட்ரோல் மற்றும் டீசல் வேரியன்ட்களை அறிவித்து, அறிமுக விலையைக் குறைத்தது மட்டுமல்லாமல் XUV 3XO -ன் பேஸ் வேரியன்ட்களுக்கு நெருக்கமாக மாற்றியமைத்தது. நெக்ஸானுக்கு பனோரமிக் சன்ரூஃப் சேர்க்க திட்டமிடப்பட்டிருந்தாலும், போட்டி அழுத்தங்களுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த அம்சத்தை அறிமுகப்படுத்துவதற்கான காலவரிசையை டாடா துரிதப்படுத்தினால் ஆச்சரியப்படுவதற்கில்லை.
டாடா நெக்ஸானுக்கான பிற எதிர்பார்க்கப்படும் அப்டேட்டுகளில் அட்வான்ஸ்ட் டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) வழங்கப்படலாம். இந்த வசதி தற்போது XUV 3OO கியா சொனட் மற்றும் ஹூண்டாய் வென்யூ ஆகியவற்றிலும் வழங்கப்படுகிறது.
மேலும் பார்க்க: Mahindra XUV 3XO Tata Nexon-யை விட இந்த 7 நன்மைகளை வழங்குகிறது
நெக்ஸானில் தற்போது உள்ள வசதிகள்
டாடா நெக்ஸானின் தற்போதைய மாடலனானது வெல்கம்/குட்பை செயல்பாடு கொண்ட தொடர்ச்சியான LED DRL-கள், 360-டிகிரி வியூ கேமரா, வென்டிலேட்டட் முன் சீட்கள், ஏர் ப்யூரிஃபையர், வயர்லெஸ் சார்ஜர் மற்றும் JBL-பவர்டு சவுண்ட் சிஸ்டம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் வருகிறது. தற்போதுள்ள நெக்ஸான் மாடலில் ஏற்கனவே சிங்கிள்-பேன் வாய்ஸ்-எனேபில்ட் எலெக்ட்ரிக் சன்ரூஃப் வசதியுடன் வழங்கப்படுகிறது.
எதிர்பார்க்கப்படும் அறிமுகம்
பனோரமிக் சன்ரூஃப் கொண்ட டாடா நெக்ஸானின் வீடியோ அப்டேட் செய்யப்பட்ட நெக்ஸான் விரைவில் அறிமுகப்படுத்தப்படலாம் என்பதை காட்டுகின்றது. அப்டேட் செய்யப்பட்ட நெக்ஸான், ஹூண்டாய் வென்யூ, கியா சோனெட், ரெனால்ட் கைகர், நிஸான் மேக்னைட் மற்றும் வரவிருக்கும் ஸ்கோடா சப்-4m எஸ்யூவி போன்ற மற்ற பிரிவு போட்டியாளர்களுடன் தொடர்ந்து போட்டியிடும்.
மேலும் பார்க்க: சோதனை செய்யப்படும் போது படம் பிடிக்கப்பட்டுள்ள Skoda Sub-4m எஸ்யூவி, 2025 ஆண்டின் தொடக்கத்தில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது
இது தவிர டாடா நெக்ஸான் CNG மாடலின் டீஸரும் பாரத் மொபிலிட்டி எக்ஸ்போ பிப்ரவரி 2024-இன் போது வெளியிடப்பட்டது. டாடா நெக்ஸான் CNG இந்த ஆண்டின் பிற்பகுதியில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது மாருதி பிரெஸ்ஸாவின் CNG வேரியன்ட்களுடன் நேரடியாக போட்டியிடும்.
மேலும் படிக்க: டாடா நெக்ஸான்
மேலும் படிக்க: டாடா நெக்ஸான் AMT