• English
  • Login / Register

இந்தியாவில் FY23-24 காலகட்டத்தில் Tata Nexon மற்றும் Punch ஆகியவை அதிகம் விற்பனையான எஸ்யூவிகளாக இருப்பிடத்தை தக்க வைத்துக்கொண்டன

published on ஏப்ரல் 17, 2024 08:54 pm by rohit for டாடா நிக்சன்

  • 23 Views
  • ஒரு கருத்தை எழுதுக

இதில் இரண்டு எஸ்யூவி -களின் EV பதிப்புகளும் இந்த எண்ணிக்கையில் அடங்கும். இவை ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கையில் 10 சதவீதத்திற்கும் அதிகமாக பங்களித்துள்ளன.

Tata Nexon and Punch were the best-selling SUVs in India in FY23-24

ஒவ்வொரு கார் நிறுவனங்களின் மாடல்கள் விற்பனையை பொறுத்தவரையில் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை தொடர்ந்து தீவிரமாகக் கண்காணிப்பவராக இருந்தால் கடந்த இரண்டு ஆண்டுகளில் அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி டாடா நெக்ஸான் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். இப்போது FY23-24 காலகட்டத்தில் நெக்ஸான் சப்-4m எஸ்யூவி ஆனது அதன் ஹாட்ரிக் சாதனையை நிறைவுசெய்து சிறந்த விற்பனையான எஸ்யூவியாக மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது என்ற விவரத்தை டாடா இப்போது வெளியிட்டுள்ளது. டாடாவின் FY23-24 விற்பனை ஆண்டில் அதிகம் விற்பனையாகும் இரண்டாவது எஸ்யூவி -யாக டாடா பன்ச் உள்ளது.

குறிப்பு: விற்பனை எண்கள்  டாடா நெக்ஸான் EV மற்றும் டாடா பன்ச் EV ஆகியவற்றுக்கான புள்ளிவிவரங்களை உள்ளடக்கியது.

எண்களில் விற்பனை விவரங்கள் 

விற்பனை காலம்

டாடா நெக்ஸான்

டாடா பன்ச்

FY21-22

124130

52716

FY22-23

172138

133819

FY23-24

171697

170076

மேலே உள்ள அட்டவணைகளும் இரண்டு டாடா எஸ்யூவி -களின் வருடாந்திர விற்பனையைக் காட்டுகின்றன. டாடா தங்கள் EV உடன்பிறப்புகளின் சரியான பங்கை வழங்கவில்லை என்றாலும் FY23-24 -ல் நெக்ஸான் EV ஒட்டுமொத்த நெக்ஸான் விற்பனையில் 12 சதவீத பங்களிப்பை வழங்கியதாக தெரிய வருகின்றது. மறுபுறம் ஜனவரி 2024 -ல் அறிமுகப்படுத்தப்பட்ட பன்ச் EV ஜனவரி மற்றும் மார்ச் 2024 க்கு இடையில் ஒட்டுமொத்த பன்ச் விற்பனையில் 16 சதவீதத்தைக் கொண்டுள்ளது.

Tata Nexon was India's best-selling SUV in the last few years

இரண்டு எஸ்யூவிகளும் FY23-24 விற்பனை செயல்திறனை முதலிடத்தில் இருந்தன, ஏனெனில் கடந்த காலாண்டில் கார்கள் ஒவ்வொன்றிற்கும் அதிக தேவை இருந்தது. டாடா ஜனவரி 2024 இல் நெக்ஸானின் 171482 யூனிட்களையும் பிப்ரவரி 2024 இல் பன்ச் -ன் 18438 யூனிட்களையும் அனுப்பியது.

மேலும் பார்க்க: ஸ்கோடா சப்-4m எஸ்யூவி லோயர் எண்ட் வேரியன்ட் சோதனை செய்யப்படும் போது மீண்டும் படம் பிடிக்கப்பட்டுள்ளது

டாடா நெக்ஸான் மற்றும் பன்ச்: ஒரு விரைவான பார்வை

Tata Nexon

டாடா நெக்ஸான் 2017 ஆம் ஆண்டு சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது மற்றும் இரண்டு மிட்லைஃப் அப்டேட்கள் - ஒன்று 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மற்றொன்று செப்டம்பர் 2023 இல் வழங்கப்பட்டுள்ளது. சமீபத்திய மற்றும் மிகவும் முழுமையான புதுப்பித்தலுடன் சப்-4m எஸ்யூவி நவீன வடிவத்துடன் ஷார்ப்பான தோற்றத்தைப் பெற்றுள்ளது. மற்றும் இரண்டு 10.25-இன்ச் டிஸ்ப்ளேக்கள் (ஒன்று இன்ஃபோடெயின்மென்ட் மற்றொன்று இன்ஸ்ட்ரூமென்டேஷன்) 9-ஸ்பீக்கர் JBL சவுண்ட் சிஸ்டம் செட்டப் 360 டிகிரி கேமரா மற்றும் 6 ஏர்பேக்குகள் போன்ற பிரீமியம் வசதிகளும் இதில் இருக்கின்றன. இது 1.2-லிட்டர் டர்போ-பெட்ரோல் யூனிட்டுடன் இரண்டு புதிய டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனையும் பெற்றுள்ளது: 5-ஸ்பீடு MT மற்றும் 7-ஸ்பீடு DCT (இரட்டை-கிளட்ச் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்).

Tata Nexon EV

இதேபோன்ற வடிவமைப்பு மற்றும் அம்ச புதுப்பிப்புகள் நெக்ஸான் EV -க்கும் பயன்படுத்தப்பட்டன. இது 2023 இல் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட நெக்ஸான் உடன் அதன் முதல் பெரிய அப்டேட்டை பெற்றது. இருப்பினும் இது புதிய ஹாரியர்-சஃபாரி உடன்பிறப்புடன் பெரிய 12.3-இன்ச் டச்ஸ்கிரீன் யூனிட்டை கொண்டுள்ளது. பேட்டரி பேக்கின் வசதிகளில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் பவர்டிரெய்ன்கள் மேலும் மேம்படுத்தப்பட்டு இப்போது 465 கிமீ வரை கிளைம்டு ரேஞ்சை கொண்டுள்ளது.

ஆகஸ்ட் 2019 இல் டாடா நெக்ஸானின் 1 லட்சம் யூனிட் விற்பனையானது. அதே நேரத்தில் பன்ச் 2022 ஆம் ஆண்டு அதே சாதனையை எட்டியது. டிசம்பர் 2023க்குள் டாடா நிறுவனம் நெக்ஸானின் 6 லட்சம் யூனிட்களை விற்பனை செய்தது (நெக்ஸான் EV யூனிட்கள் உட்பட).

Tata Punch
Tata Punch EV

டாடா பன்ச் 2021 ஆம் ஆண்டின் இறுதியில் சந்தையில் அறிமுகமானது. மேலும் அதன் EV வழித்தோன்றல் 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் புதுப்பிக்கப்பட்ட டாடா எஸ்யூவி -களுக்கு ஏற்ப வடிவமைப்பு மற்றும் ஸ்டைலிங்குடன் வந்தது. பன்ச் EV ஆனது 10.25-இன்ச் டச் ஸ்கிரீன் 360-டிகிரி கேமரா மற்றும் வென்டிலேட்டட் முன் இருக்கைகள் போன்ற அம்சங்களுடன் கூடிய ஃபுல்லி லோடட் கார் ஆகும். இது 421 கிமீ தூரம் வரை செல்லக்கூடியதாகும். பன்ச் -ன் இன்டர்னல் கம்பஸ்டன் இன்ஜின் (ICE) பதிப்பு விரைவில் ஒரு ஃபேஸ்லிஃப்டை பெற உள்ளது. மற்றும் 2025 -ல் எதிர்பார்க்கப்படும் வெளியீட்டிற்கு முன்னதாக டாடா இந்த காரை ஏற்கனவே சோதனை செய்யத் தொடங்கியுள்ளது.

மிகவும் குறைவான விலையில் கிடைக்கும் டாடா "எஸ்யூவி" வேகமான விற்பனை வளர்ச்சியைக் கண்டுள்ளது. டாடா ஏற்கனவே 2023 ஆம் ஆண்டின் இறுதியில் 3 லட்சம் யூனிட் பன்ச்களை விற்பனை செய்துள்ளது.

விலை மற்றும் போட்டியாளர்கள்

டாடா நெக்ஸானின் விலை ரூ.8.15 லட்சம் முதல் ரூ.15.80 லட்சம் வரையிலும் நெக்ஸான் இவி விலை ரூ.14.74 லட்சம் முதல் ரூ.19.99 லட்சம் வரையிலும் உள்ளது. மறுபுறம் பன்ச் -ன் விலை ரூ.6.13 லட்சம் முதல் ரூ.10.20 லட்சம் வரை. டாடா பன்ச் EV-யின் விலையை ரூ.10.99 லட்சம் முதல் ரூ.15.49 லட்சம் வரை நிர்ணயித்துள்ளது.

நெக்ஸான் , கியா சோனெட் மாருதி ப்ரெஸ்ஸா மற்றும் ஹூண்டாய் வென்யூ உடன் போட்டியிடும் இதன் EV வெர்ஷன் மஹிந்திரா XUV400 -க்கு போட்டியாக உள்ளது. பன்ச், ஹூண்டாய் எக்ஸ்டர் -க்கு போட்டியாக இருக்கின்றது. பன்ச் EV, சிட்ரோன் eC3 உடன் போட்டியிடும்.

விலை விவரங்கள் அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியாவுக்கானவை

மேலும் படிக்க: நெக்ஸான் AMT

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment on Tata நிக்சன்

Read Full News

explore similar கார்கள்

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending எலக்ட்ரிக் கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்
  • ஸ்கோடா enyaq iv
    ஸ்கோடா enyaq iv
    Rs.65 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: டிச்பர், 2024
  • வோல்க்ஸ்வேகன் id.4
    வோல்க்ஸ்வேகன் id.4
    Rs.65 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: டிச்பர், 2024
  • வோல்வோ ex90
    வோல்வோ ex90
    Rs.1.50 சிஆர்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: டிச்பர், 2024
  • மஹிந்திரா பிஇ 09
    மஹிந்திரா பிஇ 09
    Rs.45 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: டிச்பர், 2024
  • மஹிந்திரா எக்ஸ்யூவி இ8
    மஹிந்திரா எக்ஸ்யூவி இ8
    Rs.35 - 40 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: டிச்பர், 2024
×
We need your சிட்டி to customize your experience