Tata Nexon AMT காரின் விலை குறைக்கப்பட்டுள்ளது, இது ஸ்மார்ட் மற்றும் பியூர் வேரியன்ட்களில் கிடைக்கிறது
published on மார்ச் 28, 2024 08:37 pm by shreyash for டாடா நிக்சன்
- 43 Views
- ஒரு கருத்தை எழுதுக
முந்தைய என்ட்ரி விலையான ரூ.11.7 லட்சத்துடன் (எக்ஸ்-ஷோரூம்) ஒப்பிடும்போது நெக்ஸான் பெட்ரோல்-AMT ஆப்ஷன் இப்போது ரூ.10 லட்சத்தில் தொடங்குகிறது.
டாடா நெக்ஸான் செப்டம்பர் 2023 மாதத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மிட்லைஃப் அப்டேட்டை பெற்றது. புதிய வடிவமைப்பு மற்றும் புதிய வசதிகள் மட்டுமின்றி பரந்த அளவிலான டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களையும் கொண்டுள்ளது: 5-ஸ்பீடு MT (பெட்ரோல் மட்டும்) 6-ஸ்பீடு MT (பெட்ரோல் மற்றும் டீசல்) 6- ஸ்பீடும் AMT (பெட்ரோல் மற்றும் டீசல்) மற்றும் 7-ஸ்பீடு DCA (பெட்ரோல் மட்டும்). நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் அறிமுகப்படுத்தப்பட்ட நேரத்தில் 6-ஸ்பீடு AMT டிரான்ஸ்மிஷன் மிட்-ஸ்பெக் கிரியேட்டிவ் வேரியன்ட்டிலிருந்து பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் வேரியன்ட்களுடன் அறிமுகமானது. ஆனால் இப்போது இந்த டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன் லோவர்-ஸ்பெக் ஸ்மார்ட் மற்றும் பியூர் வேரியன்ட் ஆக கிடைக்கின்றது. டாடா நெக்ஸான் -ன் AMT வேரியன்ட்களின் புதுப்பிக்கப்பட்ட விலை விவரங்களை பார்ப்போம்.
வேரியன்ட்கள் |
பெட்ரோல் AMT |
டீசல் AMT |
ஸ்மார்ட் பிளஸ் AMT |
ரூ.10 லட்சம் |
நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் |
பியூர் AMT |
ரூ.10.50 லட்சம் |
ரூ.11.80 லட்சம் |
பியூர் எஸ் MT |
ரூ.11 லட்சம் |
ரூ.12.30 லட்சம் |
கிரியேட்டிவ் AMT |
ரூ.11.80 லட்சம் |
ரூ.13.10 லட்சம் |
கிரியேட்டிவ் AMT டார்க் |
ரூ.12.15 லட்சம் |
ரூ.13.45 லட்சம் |
கிரியேட்டிவ் பிளஸ் AMT |
ரூ.12.50 லட்சம் |
ரூ.13.90 லட்சம் |
கிரியேட்டிவ் பிளஸ் AMT டார்க் |
ரூ.12.85 லட்சம் |
ரூ.14.25 லட்சம் |
கிரியேட்டிவ் பிளஸ் எஸ் AMT |
ரூ.13 லட்சம் |
ரூ.14.40 லட்சம் |
கிரியேட்டிவ் பிளஸ் எஸ் AMT டார்க் |
ரூ.13.35 லட்சம் |
ரூ.14.75 லட்சம் |
ஃபியர்லெஸ் AMT |
நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் (பெட்ரோல்-DCA கொடுக்கப்படுகின்றது) |
ரூ.14.70 லட்சம் |
ஃபியர்லெஸ் AMT டார்க் |
நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் (பெட்ரோல்-DCA கொடுக்கப்படுகின்றது) |
ரூ.15.05 லட்சம் |
ஃபியர்லெஸ் S AMT |
நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் (பெட்ரோல்-DCA கொடுக்கப்படுகின்றது) |
ரூ.15.10 லட்சம் |
ஃபியர்லெஸ் பிளஸ் எஸ் AMT |
நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் (பெட்ரோல்-DCA கொடுக்கப்படுகின்றது) |
ரூ.15.60 லட்சம் |
ஃபியர்லெஸ் பிளஸ் எஸ் AMT டார்க் |
நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் (பெட்ரோல்-DCA கொடுக்கப்படுகின்றது) |
ரூ.15.80 லட்சம் |
இந்த புதிய AMT வேரியன்ட்களின் அறிமுகத்துடன் நெக்ஸான் பெட்ரோல் AMT -க்கான ஆரம்ப விலை இப்போது 1.8 லட்சம் ரூபாய் குறைவாக உள்ளது. இதேபோல் புதிய நெக்ஸான் டீசல் AMT அதன் முந்தைய ஆரம்ப விலையிலிருந்து ரூ.1.4 லட்சம் குறைந்துள்ளது. இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களிலும் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனை விட 6-ஸ்பீடு AMT ரூ.70000 வரை கூடுதலாக உள்ளது.
மேலும் பார்க்க: 2024 சுதந்திர தினத்தன்று அறிமுகமாகின்றது புதிய Mahindra Thar 5-door
வசதிகள் மற்றும் பாதுகாப்பு
டாடா நெக்ஸானின் ஸ்மார்ட் பிளஸ் வேரியன்ட்டில் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே (வயர்டு) கொண்ட 7-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 4-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம், எலக்ட்ரிக்கலி அட்ஜஸ்ட் செய்து கொள்ளும் வகையிலான வெளிப்புற ரியர் வியூ மிரர்கள் (OVRMs) மற்றும் நான்கு பவர் விண்டோஸ் போன்ற வசதிகளுடன் வருகிறது. பியூர் வேரியன்ட் கூடுதலாக பின்புற ஏசி வென்ட்கள் மற்றும் டச்-பேஸ்டு கிளைமேட் கன்ட்ரோல் பேனலை பெறுகிறது அதே சமயம் பியூர் S ஆனது டே/நைட் ரியர் வியூ மிரர் (IVRM) மற்றும் சன்ரூஃப் ஆகியவற்றுடன் வருகிறது. பாதுகாப்பைப் பொறுத்தவரை இரண்டு வேரியன்ட்களும் 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), பின்புற பார்க்கிங் சென்சார்கள் மற்றும் ஹில் ஹோல்ட் அசிஸ்ட் ஆகியவற்றைப் பெறுகின்றன.
10.25-இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் டிஸ்ப்ளே, டிரைவருக்கான 10.25-இன்ச் ஆல் டிஜிட்டல் டிஸ்ப்ளே, 9-ஸ்பீக்கர் ஜேபிஎல் சவுண்ட் சிஸ்டம், ஆட்டோமெட்டிக் ஏசி, வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங், வென்டிலேட்டட் மற்றும் உயரத்தை அட்ஜஸ்ட் செய்து கொள்ளும் வகையிலான முன்பக்க சீட்கள், க்ரூஸ் கன்ட்ரோல் போன்ற வசதிகளுடன் நெக்ஸானின் டாப்-ஸ்பெக் வேரியன்ட்கள் வருகின்றன. அதன் பாதுகாப்பு கருவியில் பிளைண்ட் வியூ மானிட்டர் கொண்ட 360 டிகிரி கேமரா மற்றும் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS) ஆகியவை அடங்கும்.
மேலும் பார்க்க: Volkswagen Virtus GT Plus Sport vs Hyundai Verna Turbo: படங்களில் ஒப்பீடு
பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள்
டாடா நெக்ஸான் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களுடன் வருகிறது. இரண்டின் விவரங்களும் கீழே விவரிக்கப்பட்டுள்ளன:
இன்ஜின் |
1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல் |
1.5 லிட்டர் டீசல் |
பவர் |
120 PS |
115 PS |
டார்க் |
170 Nm |
260 Nm |
டிரான்ஸ்மிஷன் |
5-ஸ்பீடு MT 6-ஸ்பீடு MT 6-ஸ்பீடு AMT 7-ஸ்பீடு DCA |
6-ஸ்பீடு MT 6-ஸ்பீடு AMT |
*DCA- டூயல் கிளட்ச் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன்
விலை & போட்டியாளர்கள்
டாடா நெக்ஸான் விலை ரூ. 8.15 லட்சம் முதல் ரூ. 15.80 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம் டெல்லி). டாடாவின் சப்காம்பாக்ட் எஸ்யூவி ஹூண்டாய் வென்யூ, கியா சோனெட், மாருதி பிரெஸ்ஸா, மஹிந்திரா XUV300, ரெனால்ட் கைகர் மற்றும் நிஸான் மேக்னைட் ஆகியவற்றுக்கு போட்டியாக இருக்கும்.
மேலும் படிக்க: நெக்ஸான் AMT
0 out of 0 found this helpful