பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 நிகழ்வில் Tata Harrier Bandipur எடிஷன் காட்சிப்படுத்தப்பட்டது
published on ஜனவரி 17, 2025 04:42 pm by rohit for டாடா ஹெரியர்
- 26 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஹாரியர் பந்திப்பூர் எடிஷனில் உள்ளேயும் வெளியேயும் சில காஸ்மெட்டிக் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பிளாக்-அவுட் ORVM -கள், அலாய் வீல்கள் மற்றும் 'ஹாரியர்' மோனிகர் ஆகியவற்றிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
-
காசிரங்கா பதிப்பை தொடர்ந்து இந்தியாவில் உள்ள மற்றொரு தேசியப் பூங்காவின் அடையாளமாக இது இருக்கும்.
-
புதிய பெயிண்ட் ஷேடு மற்றும் முன் ஃபெண்டர்களில் சின்னங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
-
கேபினில் டூயல் டோன் தீம் மற்றும் அப்ஹோல்ஸ்டரி கொடுக்கப்பட்டுள்ளது.
பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 நிகழ்வில் டாடா மோட்டார்ஸின் ஸ்டாலில் பல மாடல்களோடு மிகவும் கவர்ச்சிகரமான ஹாரியர் பந்திப்பூர் பதிப்பும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு காசிரங்காவிற்கு அறிமுகப்படுத்தப்பட்டதைப் போலவே, புதிய சிறப்புப் பதிப்பு தேசிய பூங்காவிற்கு ஒரு தீம் ஆக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கட்டுரையில் ஹாரியர் பந்திப்பூர் எடிஷன் மாடலை விரிவாக பார்க்கலாம். ஆனால் அதற்கு முன்னர் பந்திப்பூர் தேசிய பூங்காவின் சிறப்பு என்ன என்பதை இங்கே பார்க்கலாம்:
பந்திப்பூர் தேசிய பூங்கா பற்றி ஒரு சுருக்கமான பார்வை
பந்திப்பூர் தேசியப் பூங்கா கர்நாடகாவின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ளது. மேலும் இது தெற்காசியாவிலேயே காட்டு யானைகளின் மிகப்பெரிய வாழ்விடத்தை கொண்டுள்ளது. இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கையில் இந்த பூங்கா இரண்டாவது இடத்தில் உள்ளது. இது சிறுத்தைகள், சாம்பார் மான்கள் மற்றும் ஸ்லாத் கரடிகள் உள்ளிட்ட பிற விலங்குகளும் உள்ளன.
வெளிப்புறம் மற்றும் உட்புறத்தில் உள்ள மாற்றங்கள்
காசிரங்கா பதிப்பில் காணப்படுவது போல் டாடா ஹாரியர் பந்திப்பூர் பதிப்பிற்கு புதிய கோல்டன் பெயிண்ட் ஆப்ஷனை வழங்கியுள்ளது. இது புதிய 'யானை' சின்னங்கள் முன் ஃபெண்டர்களிலும் அலாய் வீல்களுக்கான பாடி கலர்டு ஃபினிஷ் ஆகியவற்றைப் பெறுகிறது. அதே நேரத்தில் ORVM -கள் மற்றும் ரூஃப் ஆகியவை பிளாக் கலரில் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளன. பின்புறத்தில் உள்ள 'ஹாரியர்' மோனிகர் கூட பிளாக் கலரில் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது.