• English
  • Login / Register

Tata Curvv -ன் பவர்டிரெய்ன் மற்றும் கலர் ஆப்ஷன்களின் விவரங்கள் இங்கே

published on ஆகஸ்ட் 08, 2024 04:26 pm by dipan for டாடா curvv

  • 38 Views
  • ஒரு கருத்தை எழுதுக

டாடா கர்வ் இப்போது, ஸ்மார்ட், ப்யூர், கிரியேட்டிவ் மற்றும் அக்கம்பிளிஸ்டு போன்ற நான்கு முக்கிய வேரியன்ட்களில் கிடைக்கிறது.

Tata Curvv variant-wise colour options and powertrain details

  • இது இரண்டு டர்போ-பெட்ரோல் மற்றும் ஒரு டீசல் இன்ஜின் ஆப்ஷன்களுடன் வரவிருக்கிறது.

  • அனைத்து இன்ஜின்களும் 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 7-ஸ்பீடு DCT கியர்பாக்ஸுடன் இணைக்கப்படலாம்.

  • கிரியேட்டிவ் பிளஸ் S வேரியன்ட் அனைத்து பவர்டிரெய்ன் மற்றும் டிரான்ஸ்மிஷன் காம்பினேஷன்களை உள்ளடக்கியது.

  • டூயல்-டோன் ஷேட்கள் உட்பட 6 கலர் ஆப்ஷன்களில் கிடைக்கவிருக்கிறது.

  • கர்வ் செப்டம்பர் 2 ஆம் தேதி அன்று அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் விலை ரூ 10.50 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாடா கர்வ் அதன் EV எடிஷனுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. செப்டம்பர் 2 ஆம் தேதி விலைகள் அறிவிக்கப்படும் என்றாலும், இந்த எஸ்யூவி-கூபே பற்றிய அனைத்து விவரங்களும் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன. இது ஒரு எஸ்யூவி-கூபே செட்டப்பை கொண்டுள்ளது. இதில் ஒரு புதிய டர்போ-பெட்ரோல் பவர்டிரெய்ன் உட்பட நிறைய வசதிகளுடன் வருகிறது.

பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள்

Tata Curvv Rear

பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள் பின்வருமாறு:

 

இன்ஜின்

 

 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல்

 

 1.2 லிட்டர் TGDi டர்போ பெட்ரோல் இன்ஜின்

 

1.5 லிட்டர் டீசல் இன்ஜின்

 

பவர்

 

120 PS

 

125 PS

 

118 PS

 

டார்க்

 

170 Nm

 

225 Nm

 

260 Nm

 

டிரான்ஸ்மிஷன்

 

6-ஸ்பீட் MT, 7-ஸ்பீட் DCT*

 

6-ஸ்பீட் MT, 7-ஸ்பீட் DCT*

 

6-ஸ்பீட் MT, 7-ஸ்பீட் DCT*

*DCT = டூயல்-கிளட்ச் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்

வேரியன்ட் வாரியான பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள்

வரவிருக்கும் கர்வ் நான்கு முக்கிய வேரியன்ட்களில் (அல்லது டாடா குறிப்பிடுவது போல ஒவ்வொரு வேரியன்ட்க்கும்) கிடைக்கும்: ஸ்மார்ட், ப்யூர், கிரியேட்டிவ் மற்றும் அக்கம்பிளிஸ்டு. ஒவ்வொரு மாடல்களுக்கும் கிடைக்கும் பவர்டிரெய்ன் ஆப்ஷன்களின் விரிவான தகவல்கள் இதோ:

 

 

இன்ஜின்

 

 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல்

 

 

 

1.2 லிட்டர் TGDi டர்போ பெட்ரோல் இன்ஜின்

 

 

 

1.5 லிட்டர் டீசல் இன்ஜின்

 

 

 

டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள்

 

 

6-ஸ்பீட் MT

 

 

7-ஸ்பீட் DCT

 

 

6-ஸ்பீட் MT

 

 

7-ஸ்பீட் DCT

 

 

6-ஸ்பீட் MT

 

 

7-ஸ்பீட் DCT

 

 

ஸ்மார்ட்

 

✔️

 

 

 

 

 

 

 

 

✔️

 

 

 

 

ப்யூர் ப்ளஸ்

 

 

✔️

 

 

✔️

 

 

 

 

 

 

✔️

 

 

✔️

 

 

ப்யூர் ப்ளஸ் S

 

 

✔️

 

 

✔️

 

 

 

 

 

 

✔️

 

 

✔️

 

 

கிரியேட்டிவ் 

 

 

✔️

 

 

✔️

  

 

 

 

 

 

✔️

 

 

✔️

 

 

கிரியேட்டிவ் S

 

 

✔️

 

 

✔️

 

 

✔️

 

 

 

 

✔️

 

 

✔️

 

 

கிரியேட்டிவ் ப்ளஸ் S

 

✔️

 

 

✔️

 

 

✔️

 

 

✔️

 

 

✔️

 

✔️

 

அக்கம்பிளிஸ்டு S

 

✔️

 

✔️

 

✔️

 

✔️

 

✔️

 

✔️

 

அக்கம்பிளிஸ்டு ப்ளஸ் A

 

 

 

 

 

 

✔️

 

 

✔️

 

 

✔️

 

 

✔️

  • ஸ்மார்ட் வேரியன்ட் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜினுடன் வருகிறது, இவை இரண்டும் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் பிரத்தியேகமாக இணைக்கப்பட்டுள்ளன.

  • ப்யூர் பிளஸ் மற்றும் ப்யூர் பிளஸ் S வேரியன்ட்களில் 1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின்களுக்கு 7-ஸ்பீடு  DCT கியர்பாக்ஸ் ஆப்ஷனை வழங்குகிறது.

  • கிரியேட்டிவ் வேரியன்ட் 1.2-லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் மற்றும் டீசல் இன்ஜின் இரண்டிற்கும் மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது, ஆனால் டீசல் இன்ஜின் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் வரவில்லை.

  • கிரியேட்டிவ் S வேரியன்ட் TGDi டர்போ-பெட்ரோல் இன்ஜினை கொண்டுள்ளது, இது மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் மட்டுமே கிடைக்கும். மற்ற இரண்டு இன்ஜின்களும் கிடைக்கக்கூடிய அனைத்து டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களையும் வழங்குகின்றன.

  • கிரியேட்டிவ் பிளஸ் S மற்றும் அக்கம்பிளிஸ்டு S வேரியன்ட்களில் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 7-ஸ்பீடு  DCT கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் அனைத்து இன்ஜின் தேர்வுகளுக்கும் வழங்கப்படுகின்றன.

  • 1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் பிரீமியம் அக்கம்பிளிஸ்டு பிளஸ் A வேரியன்ட் வரவில்லை என்பது வருத்தத்திற்குரியது

கலர் ஆப்ஷன்கள்

டாடா கர்வ் கீழ்காணும் 6 கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது:

Tata Curvv Pristine White colour

  • பிாிஸ்டின் ஒயிட்

Tata Curvv Daytone Grey colour

  • டேடோனா கிரே

Tata Curvv Flame Red colour

  • ஃப்ளேம் ரெட்

Tata Curvv Pure Grey colour

  • ப்யூர் கிரே

Tata Curvv Gold Essence colour

  • கோல்ட் எசென்ஸ்

Tata Curvv Opera Blue colour

  • ஓபரா ப்ளூ

வேரியன்ட் வாரியான கலர் ஆப்ஷன்கள்

 

வேரியன்ட்

 

பிாிஸ்டின் ஒயிட்

 

டேடோனா கிரே

 

ஃப்லேம் ரெட்

 

ப்யூர் கிரே

 

கோல்ட் எசென்ஸ்

 

ஓபரா ப்ளூ

 

 

ஸ்மார்ட்

 

✔️

 

✔️

 

 

 

 

 

 

ப்யூர் ப்ளஸ்

 

 

✔️

 

 

✔️

 

 

✔️

 

 

 

 

 

 

✔️

 

 

ப்யூர் ப்ளஸ் S

 

 

✔️

 

 

✔️

 

 

✔️

 

 

 

 

 

 

✔️

 

 

கிரியேட்டிவ்

 

 

✔️

 

 

✔️

 

 

✔️

 

 

 

 

 

 

✔️

 

 

கிரியேட்டிவ் S

 

 

✔️

 

 

✔️

 

 

✔️

  

 

 

 

  

 

✔️

கிரியேட்டிவ் ப்ளஸ் S

✔️

✔️

✔️

✔️

அக்கம்பிளிஸ்டு S

✔️

✔️

✔️

✔️

✔️

அக்கம்பிளிஸ்டு ப்ளஸ் A

✔️

✔️

✔️

✔️

✔️

குறிப்பிடத்தக்க வகையில் டாடா மோட்டார்ஸ் கர்வ்வின் கிரியேட்டிவ் பிளஸ் S, அக்கம்பிளிஸ்டு S மற்றும் அக்கம்பிளிஸ்டு பிளஸ் A வேரியன்ட்களுக்கு டூயல்-டோன் கலர் ஆப்ஷன்களை வழங்குகிறது.

எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்

Tata Curvv Rear

டாடா கர்வ்வின் விலைகள் ரூ.10.50 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது சிட்ரோன் பசால்ட்டுடன் நேரடியாகப் போட்டியிடும். மேலும் ஹூண்டாய் கிரெட்டா, மாருதி கிராண்ட் விட்டாரா, கியா செல்டோஸ், ஹோண்டா எலிவேட், ஸ்கோடா குஷாக் மற்றும் சிட்ரோன் C3 ஏர்கிராஸ் போன்ற காம்பாக்ட் எஸ்யூவி-களுக்கான ஸ்டைலான மாற்றாக இருக்கும்.

ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகளைப் பெற கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment on Tata curvv

Read Full News

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience