அறிமுகம் நெருங்குவதால் சில டீலர்ஷிப்களில் Tata Curvv காருக்கான ஆஃப்லைன் முன்பதிவுகள் திறக்கப்பட்டுள்ளன
published on ஜூலை 16, 2024 02:09 pm by samarth for டாடா கர்வ்
- 31 Views
- ஒரு கருத ்தை எழுதுக
இது ICE மற்றும் EV பவர்டிரெய்ன்களுடன் கிடைக்கும் முதல் டாடாவின் முதல் எஸ்யூவி-கூபே ஸ்டைல் கார் ஆகும்.
-
டாடா மோட்டார்ஸ் ஆகஸ்ட் 7 ஆம் தேதி கர்வ்வ் காரை காட்சிக்கு வைக்க உள்ளது.
-
இது 12.3-இன்ச் டச் ஸ்கிரீன், 10.25-இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே மற்றும் பனோரமிக் சன்ரூஃப் போன்ற வசதிகளுடன் வரும்.
-
பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா மற்றும் ADAS ஆகியவை கொடுக்கப்படலாம்.
-
EV எடிஷன் இரண்டு பேட்டரி பேக்குகளுடன் 500 கி.மீ வரை கிளைம் செய்யப்பட்ட ரேஞ்சை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
கர்வ்வ் ICE 1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜினை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
ICE எடிஷனின் விலை ரூ. 10.50 லட்சத்தில் இருந்தும், கர்வ்வ் EV விலை ரூ. 20 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) இருந்தும் தொடங்கலாம்.
டாடா கர்வ்வ் கார் ஆகஸ்ட் 7-ம் தேதி அறிமுகப்படுத்தப்படும் என்பது சமீபத்தில் உறுதி செய்யப்பட்டது. இப்போது சில டாடா டீலர்ஷிப்கள் டாடா கர்வ்வ்-க்கான ஆஃப்லைன் முன்பதிவுகளை ஏற்கத் தொடங்கியுள்ளன. டாடா நிறுவனமும் ஏற்கனவே டீஸர்களை வெளியிடத் தொடங்கியுள்ளார். எஸ்யூவி ஸ்டைல் கூபேயிலிருந்து உள்ளேயும் வெளியேயும் என்ன விஷயங்களையெல்லாம் எதிர்பார்க்கலாம் என்பதற்கான சில காட்சிகளை நமக்குத் தருகிறது. டாடா கர்வ்வ் காரின் இன்டர்னல் கம்பஸ்டன் இன்ஜின் (ICE) மற்றும் எலக்ட்ரிக் கார் (EV) ஆகிய இரண்டு பதிப்புகளும் ஒரே நாளில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கர்வ்வ் பற்றிய கூடுதல் விவரங்கள் இங்கே.
எதிர்பார்க்கப்படும் வசதிகள் மற்றும் பாதுகாப்பு
டாடா கர்வ்வ் ஆனது 12.3-இன்ச் டச் ஸ்கிரீன் செட்டப், 10.25-இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, வென்டிலேட்டட் முன் இருக்கைகள், மல்டி கலர் ஆம்பியன்ட் லைட்ஸ் மற்றும் பனோரமிக் சன்ரூஃப் ஆகியவற்றைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாதுகாப்பைப் பொறுத்தவரை இது 6 ஏர்பேக்குகள், பிளைண்ட் ஸ்பாட் டிடெக்ஷன் உடன் கூடிய 360 டிகிரி கேமரா, முன் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC) மற்றும் லேன் கீப் அசிஸ்ட், அட்டானமஸ் பிரேக்கிங் மற்றும் அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் உட்பட லெவல் 2 அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம்கள் (ADAS) ஆகியவற்றைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்பார்க்கப்படும் பவர்டிரெய்ன்கள்
வரவிருக்கும் கர்வ்வ் ICE மற்றும் EV பதிப்புகளுக்கான பவர்டிரெய்ன் விவரங்களை டாடா இன்னும் உறுதிப்படுத்தவில்லை. இருப்பினும் இது ICE வேரியன்ட்டில் பின்வரும் இன்ஜின் ஆப்ஷன்களை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது:
இன்ஜின் |
1.2-லிட்டர் T-GDi டர்போ-பெட்ரோல் |
1.5 லிட்டர் டீசல் |
பவர் |
125 PS |
115 PS |
டார்க் |
225 Nm |
260 Nm |
டிரான்ஸ்மிஷன் |
6-ஸ்பீடு MT, 7-ஸ்பீடு DCT (எதிர்பார்க்கப்படுகிறது) |
6-ஸ்பீடு MT |
அதேசமயம் கர்வ்வ் இவி தோராயமாக 500 கி.மீ தூரம் வரை செல்லக்கூடிய இரண்டு பேட்டரி பேக்குகளை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது DC ஃபாஸ்ட் சார்ஜிங், V2L (வெஹிகிள் 2 வெஹிகிள்) வசதி, பல்வேறு டிரைவிங் மோடுகள் மற்றும் பிரேக் ரீஜெனரேஷன் போன்ற வசதிகளை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்
டாடா கர்வ்வ் EV, கர்வ்வ் ICE -க்கு முன்னதாக விற்பனைக்கு வர உள்ளது. இதன் விலை ரூ.20 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என எதிர்பார்க்கப்படுகிறது. இது MG ZS EV மற்றும் வரவிருக்கும் ஹூண்டாய் கிரெட்டா EV ஆகிய இரண்டுக்கும் போட்டியாக இருக்கும். மறுபுறம் கர்வ்வ் ICE ஆனது 10.50 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) விலையில் இருக்கும். இது ஹூண்டாய் கிரெட்டா, மாருதி கிராண்ட் விட்டாரா, ஹோண்டா எலிவேட், எம்ஜி ஆஸ்டர், மற்றும் சிட்ரோன் C3 ஏர்கிராஸ் போன்ற காம்பாக்ட் எஸ்யூவி -களுக்கு போட்டியாக இருக்கும்.
லேட்டஸ்ட் கார் அப்டேட்களுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்
0 out of 0 found this helpful