Hyundai Creta போட்டியாளரான Tata Curvv காரின் வெளிப்புற வடிவமைப்பு 7 படங்களில் விளக்கப்பட்டுள்ளது
published on ஜூலை 19, 2024 06:47 pm by rohit for டாடா கர்வ்
- 130 Views
- ஒரு கருத்தை எழுதுக
உற்பத்திக்கு தயாராக உள்ள டாடா கர்வ்வ் ICE காரின் வெளிப்புறமானது நெக்ஸான் மற்றும் ஹாரியர் உள்ளிட்ட தற்போது விற்பனையில் உள்ள டாடா எஸ்யூவி -களில் இருந்து வடிவமைப்புக்கான உத்வேகத்தை பெற்றுள்ளது.
நீண்ட காத்திருப்புக்குப் பிறகு டாடா கர்வ்வ் காரின் விவரங்கள் தற்போது இறுதியாக வெளியாகியுள்ளன. இது ஹூண்டாய் கிரெட்டா மற்றும் மாருதி கிராண்ட் விட்டாரா போன்றவற்றுக்கு ஒரு ஸ்டைலான மாற்றாக இது இருக்கும். மேலும் இது இந்திய மார்க்கெட்டின் முதல் விலை குறைவான எஸ்யூவி-கூபே காராக இருக்கும். டாடா கர்வ்வ் காரின் ஆல்-எலக்ட்ரிக் பதிப்பையும் வெளியிடும் இதுவே முதலில் விற்பனைக்கு வரும். இந்தக் கட்டுரையில் கர்வ்வ் ICE -காரின் வெளிப்புறத்தை 7 படங்களில் பார்க்கலாம்:
முன்பக்கம்
புதிய நெக்ஸான் மற்றும் ஹாரியர்-சஃபாரி டியோவில் காணப்படுவது போல் முன்பக்கத்தில் ஸ்பிளிட்-லைட் செட்டப், கனெக்டட் LED DRL - ஸ்டிரிப் மற்றும் க்ரில் மற்றும் பம்பரின் கீழ் பகுதியில் குரோம் பதிக்கப்பட்ட பாகஙத்துடன் வருகிறது. கிரில்லின் கீழ் பாதியில் கொடுக்கப்பட்டுள்ளன முன்பக்க கேமராவையும் நீங்கள் கவனிக்கலாம்.
ஹெட்லைட்கள்
வெர்டிகலாக கொடுக்கப்பட்டுள்ள LED ஹெட்லைட்கள் மற்றும் ஃபாக் லைட்ஸ் ஒவ்வொரு முனையிலும் ஒரு முக்கோண ஹவுஸிங்கில் வைக்கப்பட்டுள்ளன. டாடா கர்வ்வ் ICE -க்கு க்ரூவ்களுடன் கூடிய குறுகிய ஏர் கர்ட்டெயினையும் வழங்கியுள்ளது, அவை சிறந்த ஏர்ஃபுளோ மற்றும் ஏரோடைனமிக்ஸ் -க்கிற்கு உகந்ததாக இருக்கலாம்.
பக்கவாட்டு தோற்றம்
கர்வ்வ் ICE காரில் உள்ள கண்ணைக் கவரும் மிகப்பெரிய விஷயம் அதன் கூபே போன்ற கூரை ஆகும். இது முன்பக்கத்தில் இருந்து உயரமான பின்புறத்துக்கு செல்கிறது. ஃப்ளஷ் டைப் டோர் ஹேண்டில்கள் உள்ளதையும் நீங்கள் கவனிக்கலாம். இது முதல் முறையாக டாடா காரில் பொருத்தப்பட்டுள்ளது மற்றும் காம்பாக்ட் எஸ்யூவி பிரிவில் கொடுக்கப்பட்டுள்ளது. ORVM பொருத்தப்பட்ட பக்க கேமராவையும் நீங்கள் கவனிக்கலாம், இது 360 டிகிரி அமைப்பின் ஒரு பகுதியாக இருக்கும்.
அலாய் வீல்கள்
2024 பாரத் மொபிலிட்டி எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்ட மாடலில் காணப்படும் அதே பெட்டல் போன்ற வடிவமைப்பைக் கொண்ட டூயல்-டோன் அலாய் வீல்களுடன் தயாரிப்புக்கு தயாரான உள்ள கர்வ்வ் ICE -யை டாடா பெற்றுள்ளது. இது காருக்கு அதிக பிரீமியம் மற்றும் ஸ்போர்ட்டியான தோற்றத்தை கொடுக்கிறது.
பின்புறம்
டாடா எஸ்யூவி-கூபேயின் பின்புறம் உயரமாக தோற்றுகிறது மற்றும் பூட் லிட் போனட்டை விட மிக அதிகமாக உயரத்தில் இருக்கிறது. இது காரில் லக்கேஜ் இடத்தை அதிகரிக்க உதவுகிறது (422 லிட்டர் பூட் ஸ்பேஸ் கிளைம் செய்யப்பட்டுள்ளது).
டெயில் லைட்ஸ்
இங்கே அதன் முக்கிய ஸ்டைலிங் விவரம் ஃபோல்டிங் மற்றும் கனெக்டட் LED டெயில் லைட்ஸ் ஆகும். உயரமான பம்பர் - கீழே சில்வர் ஃபினிஷ் உட்ன ஒரு ஃபாக்ஸ் ஸ்கிட் பிளேட்டை கொண்டுள்ளது - ஸ்பிளிட்-ஹெட்லைட் செட்டப்பை இது பிரதிபலிக்கிறது. இது இங்கே பிரதிபலிப்பான்கள் மற்றும் ரிவர்சிங் விளக்குகளால் மாற்றப்ப்பட்டுள்ளது.
பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள்
டாடா நிறுவனம் கர்வ்வ் ICE -யை பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களுடன் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவற்றின் விவரங்கள் இங்கே:
விவரங்கள் |
1.2 லிட்டர் TGDi (டர்போ-பெட்ரோல்) இன்ஜின் |
1.5 லிட்டர் டீசல் |
பவர் |
125 PS |
115 PS |
டார்க் |
225 Nm |
260 Nm |
டிரான்ஸ்மிஷன் |
6-ஸ்பீடு MT, 7-ஸ்பீடு DCT* |
6-ஸ்பீடு MT |
*DCT- டூயல் கிளட்ச் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன்
மேலும் படிக்க: Tata Nexon EV -யிடம் இருந்து இந்த 10 விஷயங்களை Tata Curvv பெறக்கூடும்
எதிர்பார்க்கப்படும் வெளியீடு, விலை மற்றும் போட்டியாளர்கள்
டாடா கர்வ்வ் ICE ஆனது 2024 செப்டம்பர் மாதம் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் கர்வ்வ் EV ஆகஸ்ட் 7 ஆம் தேதி முதல் வரவிருக்கிறது. கர்வ்வ் ICE ஆனது சிட்ரோன் பசால்ட் உடன் நேரடியாக போட்டியிடும். இது ஹூண்டாய் கிரெட்டா, மாருதி கிராண்ட் விட்டாரா, கியா செல்டோஸ், ஹோண்டா எலிவேட், மற்றும் ஸ்கோடா குஷாக் போன்ற போன்ற சிறிய எஸ்யூவி -களுக்கு ஒரு ஸ்டைலான மாற்றாக இருக்கும்.
லேட்டஸ்ட் கார் அப்டேட்களுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்து கொள்ளவும்
மேலும் படிக்க: ஹூண்டாய கிரெட்டா ஆன்ரோடு விலை