சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

டிஎஸ்ஜி மற்றும் தானியங்கி முறையிலான செலுத்துதல் விருப்பங்கள் இரண்டையும் வழங்கும் கார்களுடன் ஸ்கோடா-விடபிள்யூ க்ரெட்டா போட்டியிடுகிறது

published on மார்ச் 24, 2020 05:47 pm by sonny for ஸ்கோடா குஷாக்

வோக்ஸ்வாகன் டைகுன் மற்றும் ஸ்கோடா விஷன் ஐ‌என்-அடிப்படையிலான காம்பாக்ட் எஸ்யூவிகள் புதிய டர்போ-பெட்ரோல் இயந்திரங்களினால் மட்டுமே இயக்கப்படுகின்றன

  • விடபிள்யூ டைகுன் மற்றும் ஸ்கோடா விஷன் ஐ‌என் ஆகியவை 2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகம் செய்வதாக உறுதிசெய்துள்ளன.

  • இரண்டு எஸ்யூவிகளும் 1.0 லிட்டர் மற்றும் 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் இயந்திர விருப்பங்களைப் பகிர்ந்து கொள்கின்றன.

  • 1.0-லிட்டர் டிஎஸ்ஐ 6 வேக எம்டி அல்லது 6-வேக ஏடி விருப்பத்துடன் டைகுன் மற்றும் விஷன் ஐ‌என் ஆகியவற்றில் வழங்கப்படும்.

  • 7-வேக டிஎஸ்ஜி (இரு உரசிணைப்பி தானியங்கி முறை) 1.5 லிட்டர் டிஎஸ்ஐ மட்டுமே வழங்குகிறது. 1.5-லிட்டர் டிஎஸ்ஐக்கு கைமுறை கிடையாது.

இந்தியாவில் காம்பாக்ட் எஸ்யூவி பிரிவை சேர்ந்த ஸ்கோடா மற்றும் வோக்ஸ்வாகன் 2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகமாகவிருக்கிறது. அவை புதிய 1.0 லிட்டர் மற்றும் 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் இயந்திரங்களால் இயக்கப்படும் என்று முன்னர் உறுதி செய்யப்பட்டிருந்தாலும், செலுத்துதல் விவரங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை. எனினும், சமீபத்திய விடபிள்யூ அறிமுகங்களின் அடிப்படையில், இரு இயந்திரங்களும் அவற்றின் தானியங்கி விருப்பங்களைப் பெற வேண்டும்.

1.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் இயந்திரம் பிஎஸ்6 போலோ மற்றும் வென்டோவில் அறிமுகமானது, அதே போல் 6 வேகக் கைமுறை அல்லது 6 வேக முறுக்கு திறன் மாற்றி தானியங்கி முறை ஆகிய விருப்பத் தேர்வுகள் வழங்கப்படுகிறது. இதற்கிடையில், புதிய 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் இயந்திரம் புதிய டி-ரோக் உடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, அதே போல் 7 வேக டிஎஸ்ஜி தானியங்கி முறை மூலம் மட்டுமே வழங்கப்படுகிறது. வோக்ஸ்வாகன் டைகுன் மற்றும் உற்பத்தி-சிறப்பம்சம் கொண்ட ஸ்கோடா விஷன் ஐ‌என் ஆகியவற்றில் ஒரே செலுத்துதல் விருப்பங்கள் இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம், அவை அதே இரண்டு இயந்திரங்களால் இயக்கப்படும்.

டைகுன் மற்றும் ஸ்கோடா எஸ்யூவிகள் வி‌டபில்யு குழுமத்தின் எம்‌க்யூ‌பி ஏ0 ஐஎன் உள்ளூர்மயமாக்கப்பட்ட இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கும். இதன் தயாரிப்பில் டீசல் இயந்திரத்தை வழங்காது. ஹூண்டாய் க்ரெட்டா மற்றும் கியா செல்டோஸ் போன்ற போட்டி கார்களுக்கு ஏற்றவகையில் இதன் விலை இருக்கும், ஸ்கோடா-விடபிள்யூ 6-வேக ஏடி விருப்பத்தை 1.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் இயந்திரத்துடன் மிகவும் மலிவு விலையில் வழங்குவது அர்த்தமுள்ளதாக இருக்கும். புதிய க்ரெட்டாவும் ஹூண்டாய் செய்ததைப் போலவே, உயர்-சிறப்பம்சம் பொருந்திய வகைகளில் மிகவும் சுத்திகரிக்கப்பட்ட மற்றும் மேம்பட்ட 7-வேக டிஎஸ்ஜியுடன் மிகவும் ஆற்றல் மிக்க 1.5-லிட்டர் டர்போ இயந்திரத்தையும் வழங்கும். ஹூண்டாய் தனது 115 பிஎஸ் உள் எரிப்பு பெட்ரோல் இயந்திரத்தை 6-வேகக் கைமுறை மற்றும் சிவிடி தானியங்கி முறை விருப்பத்துடன் வழங்குகிறது, அதே சமயத்தில் 140 பிபிஎஸ் டர்போ-பெட்ரோல் 7-வேக இரு உரசிணைப்பி தானியங்கி முறை மூலம் மட்டுமே க்ரெட்டாவின் உயர்-குறிப்பிட்ட வகைகளில் வழங்கப்படுகிறது.

இதுவரை, போலோ மற்றும் வென்டோவில் 1.0 லிட்டர் டிஎஸ்ஐ 110பி‌எஸ் / 175என்‌எம் வெளியீட்டுடன் நிலையாக வழங்கப்படுகிறது. இதற்கிடையில், டி-ரோக்கில் 1.5 லிட்டர் டிஎஸ்ஐ 150 பிஎஸ் ஆற்றல் மற்றும் 250 என்எம் முறுக்கு திறன் என மதிப்பிடப்பட்டுள்ளது. வோக்ஸ்வாகன் டைகுன் மற்றும் ஸ்கோடா விஷன் ஐ‌என்-பெறப்பட்ட எஸ்யூவி இரு இயந்திரங்களிலிருந்து ஒரே செயல்திறனை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹூண்டாய் கிரெட்டா, க்யா செல்டோஸ், நிசான் கிக்ஸ் மற்றும் ரெனால்ட் கேப்டூர் போன்ற காம்பாக்ட் எஸ்யூவி பிரிவில் மற்ற விலை உயர்வுக்கு எதிராக 2021 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் அவை அறிமுகப்படுத்தப்பட உள்ளன. விடபிள்யூ மற்றும் ஸ்கோடா காம்பாக்ட் எஸ்யூவி விலை ரூபாய் 10 லட்சம் முதல் ரூபாய் 17 லட்சம் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

s
வெளியிட்டவர்

sonny

  • 33 பார்வைகள்
  • 0 கருத்துகள்

Write your Comment மீது ஸ்கோடா குஷாக்

Read Full News

trendingஎஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
பேஸ்லிப்ட்
Rs.67.65 - 71.65 லட்சம்*
Rs.11.39 - 12.49 லட்சம்*
Rs.20.69 - 32.27 லட்சம்*
Rs.13.99 - 21.95 லட்சம்*
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை