சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

Skoda Kylaq பேஸ் வேரியன்ட்டின் முதல் ஸ்பை ஷாட் வெளியாகியுள்ளது

ஸ்கோடா kylaq க்காக அக்டோபர் 24, 2024 07:08 pm அன்று shreyash ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

கைலாக்கின் பேஸ் வேரியன்ட்டில் 16 இன்ச் ஸ்டீல் வீல் இருந்தது. மேலும் பின்புற வைப்பர், பின்புற டிஃபோகர் மற்றும் டச் ஸ்கிரீன் யூனிட் ஆகியவற்றை இந்த வேரியன்ட்டில் பார்க்க முடியவில்லை.

  • கைலாக் இந்தியாவில் உள்ள ஸ்கோடா -வின் என்ட்ரி-லெவல் காராக இருக்கும்.

  • லேட்டஸ்ட் ஸ்பை படங்கள் பேஸ்-ஸ்பெக் கைலாக்கின் கேபினுக்குள் நமக்கு தெளிவான தோற்றத்தை கொடுக்கின்றன.

  • கேபின் விவரங்களில் 2-ஸ்போக் ஸ்டீயரிங் வீல், அனலாக் கிளஸ்டர் மற்றும் மேனுவல் டிரான்ஸ்மிஷன் லீவர் ஆகியவை உள்ளன.

  • படம் பிடிக்கப்பட்ட சோதனை காரில் 16 இன்ச் ஸ்டீல் வீல்களை பார்க்க முடிந்தது. மற்றும் பின்புற வைப்பர் அல்லது டிஃபோகர் ஆகியவை இல்லை.

  • 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்ட 115 PS 1-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினை பயன்படுத்தும்.

  • விலை ரூ.8.50 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) இருந்து தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நவம்பர் 6 ஆம் தேதி ஸ்கோடா கைலாக் உலகளவில் அறிமுகமாகவுள்ளது. ஸ்கோடாவின் 'இந்தியா 2.5' இன் கீழ் இந்தியாவுக்கான ஒரு புதிய தயாரிப்பாக இது இருக்கும். கைலாக் ஒரு என்ட்ரி-லெவல் கார் ஆகும். மேலும் இந்தியாவில் ஸ்கோடா -வின் மிகவும் விலை குறைவான எஸ்யூவி ஆகவும் இருக்கும். இந்த முறை கைலாக்கின் ஒரு பேஸ்-ஸ்பெக் வேரியன்ட்டில் சோதனை செய்யப்பட்ட போது படம் பிடிக்கப்பட்டுள்ளது.

ஸ்பை ஷாட்டில் என்ன பார்க்க முடிகிறது ?

லேட்டஸ்ட் ஸ்பை படங்கள் கைலாக்கின் பேஸ்-ஸ்பெக் வேரியன்ட் கேபினின் முதல் பார்வையை வழங்குகின்றன. இது 2-ஸ்போக் ஸ்டீயரிங், அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் மற்றும் ஸ்கோடா ஸ்லாவியா மற்றும் ஸ்கோடா குஷாக்கில் காணப்படும் கியர் லீவர் போன்றவற்றைக் கொண்டுள்ளது. பேஸ்-ஸ்பெக் வேரியன்ட்டாக இருப்பதால் எந்த டச் ஸ்கிரீன் யூனிட்டும் இதில் இல்லை.

இது ஒரு ஸ்பிளிட் ஹெட்லைட் செட்டப் உள்ளது, ஹெட்லைட்கள் DRL களுக்கு கீழே நிலைநிறுத்தப்பட்டுள்ளன. சோதனைக் கார் கார் பிளாக் கவர்களால் மூடப்பட்டிருந்தது மேலும் 16-இன்ச் வீல் இருந்தது. மேலும் இது ஒரு பேஸ்-ஸ்பெக் வேரியன்ட் என்பதைத் தெளிவாகக் குறிப்பிடும் வகையில் பின்புற வைப்பர் மற்றும் பின்புற டிஃபோகர் ஆகியவற்றைக் கொண்டிருக்கவில்லை.

ஹையர் வேரியன்ட்களில் எதிர்பார்க்கப்படும் வசதிகள்

ஸ்கோடா குஷாக் டச் ஸ்கிரீன் படம் எடுத்துக்காட்டுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது

ஸ்கோடாவின் சப்காம்பாக்ட் எஸ்யூவி ஆனது 10.1-இன்ச் டச் ஸ்கிரீன், 8-இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, பின்புற வென்ட்கள் கொண்ட ஆட்டோ ஏசி மற்றும் சிங்கிள்-பேன் சன்ரூஃப் ஆகியவற்றைப் பெறும். இது 6-வே அட்ஜெஸ்ட்டபிள் முன் இருக்கைகளை வென்டிலேஷன் வசதியை கொண்டிருக்கும். பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக) இருக்கும். அதே சமயம் இது எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் (ESC) மற்றும் 360 டிகிரி கேமராவை பெறும்.

எதிர்பார்க்கப்படும் பவர்டிரெய்ன்

இது 1-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் மூலம் இயக்கப்படும். இது 115 PS மற்றும் 178 Nm அவுட்புட்டை கொடுக்கக்கூடியது. இது 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது 6-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டருடன் இணைக்கப்படும்.

எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்

ஸ்கோடா கைலாக் காரின் விலை ரூ.8.50 லட்சத்தில் இருந்து தொடங்கலாம் (எக்ஸ்-ஷோரூம்). இது டாடா நெக்ஸான், மாருதி பிரெஸ்ஸா, ஹூண்டாய் வென்யூ, மஹிந்திரா XUV 3XO மட்டுமில்லாமல் சப்-4மீ கிராஸ்ஓவர்களான மாருதி ஃபிரான்க்ஸ் மற்றும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் டெய்சர் போன்ற கார்களுக்கு போட்டியாக இருக்கும்.

ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகளை பெற வேண்டுமா? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.

பட ஆதாரம்

Share via

Write your Comment on Skoda kylaq

J
jose
Oct 24, 2024, 7:11:48 PM

Pls tell them to have at least a defogger in the base variant

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

Enable notifications to stay updated with exclusive offers, car news, and more from CarDekho!

டிரெண்டிங் எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
புதிய வேரியன்ட்
Rs.15.50 - 27.25 லட்சம்*
புதிய வேரியன்ட்
Rs.15 - 26.50 லட்சம்*
புதிய வேரியன்ட்
புதிய வேரியன்ட்
Rs.6.20 - 10.51 லட்சம்*
எலக்ட்ரிக்
Rs.48.90 - 54.90 லட்சம்*
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை