Renault Kiger, Triber கார்களில் CNG வேரியன்ட்கள் அறிமுகமாகலாம்
ட்ரைபர் மற்றும் கைகருடன் இப்போது கிடைக்கும் 1-லிட்டர் நேச்சுரல் ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜினோடு தொழிற்சாலையில் பொருத்தப்பட்ட சிஎன்ஜி ஆப்ஷன் சேர்த்து வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
ரெனால்ட் கைகர் மற்றும் டிரைபர் ஆகியவற்றுக்கு சமீபத்தில் மாடல் இயர் (MY) 2025 அப்டேட்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
-
அப்டேட்கள் மூலமாக வேரியன்ட்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன, லோவர் வேரியன்ட்கள் வசதிகள் நிறைந்ததாக உள்ளன.
-
8 இன்ச் டச் ஸ்கிரீன், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் மற்றும் பவர்டு ORVM -கள் ஆகியவை உள்ளன.
-
பாதுகாப்புக்காக 4 ஏர்பேக்குகள், ஆட்டோ டிம்மிங் IVRM மற்றும் ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.
-
ரெனால்ட் கைகர் விலை ரூ.6.1 லட்சம் முதல் 10.1 லட்சம் வரை உள்ளது.
-
ரெனால்ட் ட்ரைபர் காரின் விலை ரூ.6.1 லட்சம் முதல் 8.75 லட்சம் வரை உள்ளது.
ரெனால்ட் கைகர் மற்றும் ட்ரைபர் ஆகிய இரண்டு கார்களும் விரைவில் CNG வேரியன்ட்களை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு மாடல்களும் சமீபத்தில் MY 2025 அப்டேட்களை பெற்றுள்ளன. இது வேரியன்ட்களில் சில மாற்றங்களை கொண்டு வந்தது. சில வசதிகள் மிகவும் குறைவான விலையிலேயே கிடைக்கின்றன. கிரீனர் ஃபியூல் ஆப்ஷன் உடன், வசதிகள் மற்றும் கைகர் மற்றும் ட்ரைபரின் பாதுகாப்பு கிட் போன்ற மற்ற வசதிகள் அப்படியே இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரெனால்ட் கைகர் மற்றும் ரெனால்ட் ட்ரைபர் பற்றிய விரைவான பார்வை இங்கே.
ரெனால்ட் கைகர் மற்றும் ட்ரைபர்: ஒரு பார்வை
மாடல் இயர் (MY) 2025 அப்டேட் உடன் கைகர் மற்றும் ட்ரைபரில் உள்ள இன்ஜின்கள் e20 விதிமுறைகளுக்கு இணங்கி செல்லும் வகையில் மாற்றப்பட்டுள்ளன. இரண்டு மாடல்களும் ஒரே நேச்சுரல் ஆஸ்பிரேட்டட் (NA) இன்ஜினை பகிர்ந்து கொள்கின்றன. ஆனால் கைகரில் டர்போ-பெட்ரோல் இன்ஜின் உள்ளது. இன்ஜின்களின் தொழில்நுட்ப விவரங்கள் இங்கே:
ரெனால்ட் கைகர்/ட்ரைபர் |
ரெனால்ட் கைகர் |
|
இன்ஜின் |
1 லிட்டர் NA பெட்ரோல் இன்ஜின் |
1-டர்போ பெட்ரோல் இன்ஜின் |
பவர் |
72 PS |
100 PS |
டார்க் |
96 Nm |
160 Nm வரை |
டிரான்ஸ்மிஷன் |
5-ஸ்பீடு MT*/AMT^ |
5-ஸ்பீடு MT*/CVT** |
*MT= மேனுவல் டிரான்ஸ்மிஷன்
^AMT= ஆட்டோமெட்டிக் மேனுவல் டிரான்ஸ்மிஷன்
**CVT= கன்டினியூஸ்லி வேரியபிள் டிரான்ஸ்மிஷன்
இரண்டு ரெனால்ட் கார்களிலும் CNG பை-பியூல் சேர்க்கை கொண்ட NA இன்ஜினுடன் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை என்றாலும், இந்த யூனிட் NA பெட்ரோல் இன்ஜினுடன் ஒப்பிடும் போது அவுட்புட் உடன் மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ட்ரைபர் மற்றும் கைகரின் எந்த வேரியன்ட்களில் CNG பவர்டிரெய்ன் கிடைக்கும் என்பது உறுதி செய்யப்படவில்லை. கைகர் மற்றும் ட்ரைபரின் சிறந்த வேரியன்ட்கள் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே, வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், ரிமோட் கீலெஸ் என்ட்ரி, ஏர் ஃபில்டர் மற்றும் பவர்டு ORVM -களுடன் 8 இன்ச் டச் ஸ்கிரீனை கொண்டுள்ளன. இந்த வசதிகளின் மேல் உள்ள கைகர், க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் பின்புற வென்ட்களுடன் ஆட்டோ ஏசி ஆகியவற்றை கொண்டுள்ளது.
பாதுகாப்புக்காக கைகர் மற்றும் டிரைபர் இரண்டும் 4 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் பிரேக் டிஸ்ட்ரிபியூஷன் (EBD) கொண்ட ஆன்டிலாக் பிரேக்கிங் சிஸ்டம் (ABS), டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம், ஒரு ஆட்டோ டிம்மிங் IRVM, ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் ஆகியவற்றுடன் வருகிறது.
ரெனால்ட் கைகர் மற்றும் ட்ரைபர்: விலை மற்றும் போட்டியாளர்கள்
ரெனால்ட் கைகர் விலை ரூ. 6.1 லட்சம் மற்றும் 10.1 லட்சம் வரை உள்ளது. இது மாருதி பிரெஸ்ஸா, நிஸான் மேக்னைட், டாடா நெக்ஸான் மற்றும் மஹிந்திரா XUV 3XO ஆகியவற்றுக்கு போட்டியாக இருக்கும்.
ரெனால்ட் ட்ரைபர் விலை ரூ.6.1 லட்சம் முதல் 8.75 லட்சம் வரை உள்ளது. நேரடி போட்டியாளர்கள் இல்லையென்றாலும் இது மாருதி ஸ்விஃப்ட் மற்றும் ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் போன்ற கார்களுக்கு 7 சீட்டர் மாற்றாக இருக்கும்.
அனைத்து விலை விவரங்களும் எக்ஸ்-ஷோரூம் -க்கானவை
ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து லேட்டஸ்ட் அப்டேட்டுகளுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.