மாருதி ஃபிராங்க்ஸ் -ன் விலை ரூ. 7.46 லட்சத்திலிருந்து தொடங்குகின்றது
published on ஏப்ரல் 24, 2023 05:09 pm by tarun for மாருதி fronx
- 33 Views
- ஒரு கருத்தை எழு துக
இந்த ஹேட்ச்பேக் கிராஸ்ஓவர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் மற்றும் டர்போ-பெட்ரோல் இன்ஜின்கள் இரண்டு ஆப்ஷன்களிலும் கிடைக்கின்றன.
-
ஃபிராங்க்ஸ் ரூ 7.46 லட்சம் தொடங்கி ரூ. 13.14 வரை உள்ளது
-
சிக்மா, டெல்டா, டெல்டா +, ஜெட்டா மற்றும் ஆல்பா வேரியன்ட்களில் கிடைக்கின்றன.
-
9 இன்ச் டச் ஸ்கிரீன் சிஸ்டம், ஹெட்ஸ் அப் டிஸ்பிளே , வயர்லெஸ் சார்ஜர் மற்றும் பேடில் ஷிப்ஃடர்கள் ஆகிய அம்சங்கள் இதில் இருக்கின்றன.
-
பாதுகாப்பைப் பொறுத்தவரையில் ஆறு ஏர்பேக்குகள், 360 -டிகிரி கேமரா. இஎஸ்பி மற்றும் ஹில் ஹோல்டு அசிஸ்ட் ஆகிய அம்சங்கள் இருக்கின்றன.
-
இது மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் கொண்ட 1.2 -லிட்டர் பெட்ரோல் மற்றும் 1-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின்களால் பவரைப் பெறுகிறது
-
சப்காம்பாக்ட் எஸ்யூவி மற்றும் பிரீமியம் ஹேட்ச்பேக் செக்மென்ட்டுக்கு போட்டியாக இது இருக்கும்.
பலேனோ -வை அடிப்படையாக கொண்ட ஃபிராங்க்ஸ் எஸ்யூவியின் விலைகளை மாருதி வெளியிட்டுள்ளது. இந்த ஹேட்ச்பேக்-எஸ்யூவி கிராஸ்ஓவர் இப்போது ரூ. 7.46 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சிக்மா, டெல்டா, டெல்டா+, ஜெட்டா மற்றும் ஆல்பா ஆகிய ஐந்து டிரிம்களில் வாடிக்கையாளர் தேர்வு செய்யும்ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. வேரியன்ட் வாரியான விலைகள் இங்கே:
விலை விவரங்கள்
வேரியன்ட் |
1.2-லிட்டர் பெட்ரோல்-எம்டீ |
1.2-லிட்டர் பெட்ரோல்-ஏஎம்டீ |
1-லிட்டர் டர்போ-பெட்ரோல் எம்டீ |
1-லிட்டர் டர்போ-பெட்ரோல் ஏடீ |
சிக்மா |
ரூ 7.46 லட்சம் |
- |
- |
- |
டெல்டா |
ரூ 8.33 லட்சம் |
ரூ 8.88 லட்சம் |
- |
- |
டெல்டா+ |
ரூ 8.73 லட்சம் |
ரூ 9.28 லட்சம் |
ரூ 9.73 லட்சம் |
- |
ஜெட்டா |
- |
- |
ரூ 10.56 லட்சம் |
ரூ 12.06 லட்சம் |
ஆல்பா |
- |
- |
ரூ 11.48 லட்சம் |
ரூ 12.98 லட்சம் |
ஆல்பா டிடீ |
- |
- |
ரூ 11.64 லட்சம் |
ரூ 13.14 லட்சம் |
சிக்மா வேரியன்ட் 1.2-லிட்டர் பெட்ரோல்-எம்டீ காம்பினேஷனைப் பெறுகிறது. டெல்டா+ வேரியன்ட் இரண்டு பவர் டிரெய்ன்களுடனும் ஒரே ஆப்ஷனைக் கொண்டிருக்கிறது அதேசமயம் டர்போ-பெட்ரோல் AT தேர்வைத் தவிர்க்கிறது. டர்போ ஆட்டோமெட்டிக் வேரியன்ட்கள் மற்றும் மேனுவல் வகைகளில் ரூ 1.5 லட்சம் வரை இருக்கின்றன. ஏஎம்டீ வகைகளைப் பொறுத்தவரை, மேனுவல் டிரிம்களை விட ரூ. 55,000 விலை அதிகம்.
தொடர்புடையவை: மாருதி ஃப்ரான்க்ஸ் Vs பிரீமியம் ஹேட்ச்பேக் போட்டியாளர்கள்: எரிபொருள் சிக்கன திறன் ஒப்பீடு
அளவுகள்
நீளம் |
3995மிமீ |
அகலம் |
1765மிமீ |
உயரம் |
1550மிமீ |
வீல்பேஸ் |
2520மிமீ |
கிரவுண்ட் கிளியரன்ஸ் |
190மிமீ |
ஃப்ராங்க்ஸ் என்பது மாருதி பலேனோவை அடிப்படையாக கொண்ட சப் நான்கு மீட்டர் காராக இருக்கிறது. பலேனோவுடன் ஒப்பிடுகையில், சன்கியான பம்பர்கள், ரூஃப் ரெயில்கள் மற்றும் பாடி கிளாடிங் காரணமாக இது சற்று பெரியதாக தோற்றமளிக்கிறது. ஆனால் இதன் பெரிய பரிமாணங்கள் ஹேட்ச்பேக்கை விட கூடுதலான கேபின் இடத்தைக் கொடுப்பதில்லை.
அம்சங்கள்
மாருதி ஃபிராங்க்ஸ் -ன் அம்சங்களில் சில சிறப்பான பிரீமியம் கொண்ட பட்டியல் இருக்கிறது :
-
ஆட்டோமெட்டிக் எல்இடி ஹெட்லேம்புகள்
-
வயர்லெஸ் சார்ஜர்
-
பேடில் ஷிப்டர்கள்(ஏடீ -க்கு மட்டும்)
-
இன்ஜின் புஷ் ஸ்டார்ட்-ஸ்டாப் பட்டன்
-
பின்பக்க ஏசி வென்ட்கள்
-
9-இன்ச் ஸ்மார்ட்பிளே புரோ+ டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட்
-
வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே
-
க்ரூஸ் கண்ட்ரோல்
-
ஹெட்ஸ்-அப் டிஸ்பிளே
இவற்றையும் படிக்க: மாருதி ஃபிராங்க்ஸ் -ன் ஃபர்ஸ்ட் டிரைவ்: வழியில் நாம் தெரிந்து கொண்ட 5 விஷயங்கள்
பாதுகாப்பு
பாதுகாப்பு அம்சங்கள் என்று வரும் போது ஃபிராங்க்ஸ் கீழ்கண்ட அம்சங்களைப் பெற்றிருக்கிறது:
-
எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம் (ஸ்டாண்டர்டு)
-
ஹில் ஹோல்டு அசிஸ்ட் (ஸ்டாண்டர்டு)
-
அனைத்து பயணிகளுக்கும் த்ரீ-பாயிண்ட் சீட் பெல்ட்கள் (ஸ்டாண்டர்டு)
-
ISOFIX ஆங்கரேஜ்கள் (ஸ்டாண்டர்டு)
-
அதிகபட்சமாக ஆறு ஏர்பேக்குகள்
-
360-டிகிரி கேமரா
-
ஆட்டோ-டிம்மிங் IRVM கள்
பவர்டிரெயின்கள்
பலேனோ -வின் 1.2-லிட்டர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் , தற்போது நிறுத்தப்பட்டுள்ள பலேனோ -வின்’ பூஸ்டர் ஜெட் டர்போ-பெட்ரோல் மோட்டார் ஆகியவற்றுடன் மாருதி ஃபிராங்க்ஸை கொடுக்கிறது . இந்த இரண்டு பவர்டிரெய்ன்களும் வெவ்வேறு ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வுடன் கிடைக்கின்றன. இதன் விவரக்குறிப்புகள் இங்கே:
இன்ஜின் |
1.2-லிட்டர் பெட்ரோல் |
1-லிட்டர் டர்போ-பெட்ரோல் |
பவர் / டார்க் |
90PS / 113நிமீ |
100பிஎஸ் / 148நிமீ |
டிரான்ஸ்மிஷன் |
5-ஸ்பீடு எம்டீ / 5-ஸ்பீடு ஏஎம்டீ |
5-ஸ்பீடு எம்டீ / 6-ஸ்பீடு ஏடீ |
மைலேஜ் |
21.79கிமீ/லி / 22.89கிமீ/லி |
21.5கிமீ/லி / 20.1கிமீ/லி |
போட்டியாளர்கள்
இதற்கு போட்டியைப் பற்றி பார்க்கையில், மாருதி ஃபிராங்க்ஸுக்கு பல போட்டியாளர்கள் உள்ளனர். இது ஹூண்டாய் வென்யூ மற்றும் டாடா நெக்ஸான் போன்ற சப்காம்பாக்ட் எஸ்யூவிகளுக்கு எதிராக போட்டியிடுகிறது, அதே நேரத்தில் ஹூண்டாய் ஐ20 மற்றும் டாடா அல்ட்ராஸ் போன்ற பிரீமியம் ஹேட்ச்பேக்குகளுடனும் போட்டியிருகிறது. இந்த கிராஸ்ஓவர் அதன் சொந்த ஸ்டேபிள் மேட்களான பலேனோ மற்றும் பிரெஸ்ஸா போன்ற கார்களில் விலை ரேஞ்ச் -ல் உள்ளது.
இதைப் பற்றி மேலும் படிக்க: ஃபிராங்க்ஸ் -ன் ஆன் ரோடு விலைகள்
0 out of 0 found this helpful