சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

ரீகால் செய்யப்படும் மாருதி எஸ்-பிரஸ்ஸோ மற்றும் ஈகோவின் 87,000க்கும் மேற்பட்ட யூனிட்கள்

shreyash ஆல் ஜூலை 26, 2023 03:11 pm அன்று பப்ளிஷ் செய்யப்பட்டது
55 Views

2021 ஜூலை 5ஆம் தேதி மற்றும் 2023 பிப்ரவரி 15, ஆம் தேதிக்கு இடையில் தயாரிக்கப்பட்ட இந்த இரண்டு மாடல்களின் கார்கள் திரும்பப் பெறுதல் தொடர்புடையது.

  • இந்த வாகனங்களின் ஸ்டீயரிங் ராட் டையின் ஒரு பகுதியில் ஏற்படக்கூடிய பிரச்சினை காரணமாக திரும்ப அழைக்கப்பட்டது.

  • குறைபாடுள்ள பகுதி உடையலாம் அல்லது வாகனத்தைக் கையாளுவதை பாதிக்கலாம்

  • பாதிக்கப்பட்ட யூனிட்களின் உரிமையாளர்களை மாருதி ஆய்வு நடத்த அழைக்கும்.

  • குறைபாடுள்ள பகுதி இலவசமாக மாற்றித் தரப்படும்.

மாருதி சுஸூகி இந்தியா நிறுவனம், ஸ்டியரிங் டை ராடின் ஒரு பகுதியில் ஏற்பட்ட குறைபாடு காரணமாக மாருதி எஸ்-பிரஸ்ஸோ மற்றும் மாருதி ஈகோவின் 87,599 கார்களை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது என்ட்ரி-லெவல் கார்களின் இந்த யூனிட்கள் 2021 ஜூலை 5, ஆம் தேதி மற்றும் 2023 பிப்ரவரி 15, ஆம் தேதிக்கு இடையில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளில் தயாரிக்கப்பட்டன.

பிராண்டின் டீலர்ஷிப்கள் பாதிக்கப்பட்ட கார்களின் உரிமையாளர்களை அழைத்து அவர்களின் வாகனங்களில் உள்ள பிரச்சனைக்குரிய கூறுகளை எந்த கட்டணமும் இன்றி ஆய்வு செய்து மாற்றித் தருவார்கள். உற்பத்தியாளரின் அறிவிப்பின்படி, ஸ்டீயரிங் டை ராட்டின் குறைபாடுள்ள பகுதி வாகனத்தின் கையாளுதல் மற்றும் திரும்பும் திசையை பாதிக்கலாம், மேலும் அரிதான சந்தர்ப்பங்களில் அது உடைந்தும்போகலாம்.

முன்பு திரும்பப் அழைக்கப்பட்டவை

இந்த இரண்டு வாகனங்களும், எஸ்-பிரெஸ்ஸோ மற்றும் ஈக்கோ ஆகியவை, ஏர்பேக் கட்டுப்பாட்டு மாட்யூலில் சந்தேகத்திற்குரிய பிரச்சினை காரணமாக, 2023 ஜனவரி மாதத்தில் அழைக்கப்பட்டன, இது முந்தைய திரும்பப்பெறுதலின் ஒரு பகுதியாகும். மாருதி அந்த சிக்கலையும் இலவசமாக சரிசெய்தது.

மேலும் படிக்கவும்: மாருதி பிரெஸ்ஸா ஆட்டோமேட்டிக் மேனுவல் வேரியன்ட்டை விட கூடுதல் செயல்திறனைக் கொண்டுள்ளது

View this post on Instagram

A post shared by CarDekho India (@cardekhoindia)

எஸ்-பிரெஸ்ஸோ மற்றும் ஈக்கோ கார்கள் என்ன வழங்குகின்றன?

எஸ்-பிரஸ்ஸோ மாருதி வரிசையில் ஆல்டோவுக்கு சற்று மேல்நிலையில் உள்ளது இது 1-லிட்டர் பெட்ரோல் இன்ஜினுடன் மட்டுமே வழங்கப்படும் (68PS/90Nm), ஐந்து-வேக மேனுவல் அல்லது ஐந்து-வேக AMT ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது. அதே இன்ஜின் CNG உடன் வழங்கப்படுகிறது, இது 56.69PS மற்றும் 82Nm -யின் குறைக்கப்பட்ட வெளியீடு மற்றும் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் மட்டுமே இணைக்கப்பட்டுள்ளது.

மறுபுறம் ஈக்கோ MPV ஆனது 81PS மற்றும் 104.4Nm வழங்கும் 1.2-லிட்டர் பெட்ரோல் இன்ஜினுடன் வழங்கப்படுகிறது. அதே யூனிட் CNG யிலும் வருகிறது, இதன் வெளியீடு 72PS மற்றும் 95Nm ஆக குறைகிறது. பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி இரண்டும் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளன.

விலைகள்

மாருதி எஸ்-பிரெஸ்ஸோ தற்போது ரூ. 4.26 லட்சம் முதல் ரூ.6.12 லட்சம் வரையிலும், ஈக்கோ ரூ.5.27 இலட்சம் முதல் ரூ.6.53 லட்சம் வரை விலையில் கிடைக்கிறது. எஸ்-பிரெஸ்ஸோ நேரடியாக ரெனால்ட் க்விட் -க்கு போட்டியாக உள்ளது, அதேசமயம் ஈக்கோவுக்கு இந்தியாவில் நேரடி போட்டியாளர்கள் இல்லை.

மேலும் படிக்கவும்: எஸ்-பிரஸ்ஸோ ஆன்ரோடு விலை

Share via

Write your Comment on Maruti எஸ்-பிரஸ்ஸோ

explore similar கார்கள்

மாருதி இகோ

4.3296 மதிப்பீடுகள்இந்த காரை ரேட்டிங் செய்ய
சிஎன்ஜி26.78 கிமீ / கிலோ
பெட்ரோல்19.71 கேஎம்பிஎல்
ட்ரான்ஸ்மிஷன்மேனுவல்

மாருதி எஸ்-பிரஸ்ஸோ

4.3454 மதிப்பீடுகள்இந்த காரை ரேட்டிங் செய்ய
சிஎன்ஜி32.73 கிமீ / கிலோ
பெட்ரோல்24.76 கேஎம்பிஎல்
ட்ரான்ஸ்மிஷன்மேனுவல்/ஆட்டோமெட்டிக்
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

Enable notifications to stay updated with exclusive offers, car news, and more from CarDekho!

டிரெண்டிங் ஹேட்ச்பேக் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
புதிய வேரியன்ட்
Rs.6.23 - 10.19 லட்சம்*
புதிய வேரியன்ட்
Rs.4.70 - 6.45 லட்சம்*
எலக்ட்ரிக்புதிய வேரியன்ட்
Rs.7 - 9.84 லட்சம்*
எலக்ட்ரிக்
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை