புதிய விஷயங்களை காட்டும் Nissan Magnite ஃபேஸ்லிஃப்ட்டின் லேட்டஸ்ட் டீஸர்
published on செப் 25, 2024 07:38 pm by shreyash for நிசான் மக்னிதே
- 52 Views
- ஒரு கருத்தை எழுதுக
புதிய டீஸரில் புதிய மேக்னைட்டின் டெயில் லைட்களை பார்க்க முடிகிறது. அதே நேரத்தில் கிரில் முன்பு இருந்த அதே வடிவமைப்பை தக்கவைத்துக் கொண்டது போலத் தெரிகிறது.
-
நிஸான் ஃபேஸ்லிஃப்டட் மேக்னைட்டை வரும் அக்டோபர் 4 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது.
-
புதிய முன் பம்பர் மற்றும் ஹெட்லைட்கள் ஆகியவற்றை வெளிப்புற மாற்றங்களில் பார்க்கலாம்.
-
புதிய 6-ஸ்போக் டூயல்-டோன் அலாய் வீல்களையும் பெறலாம்.
-
இது புதிய இன்டீரியர் டிரிம்கள் மற்றும் சீட் அப்ஹோல்ஸ்டரியுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
வென்டிலேட்டட் முன் இருக்கைகள் மற்றும் சன்ரூஃப் போன்ற பிரீமியம் வசதிகளுடன் நிஸான் இந்த காரை கொடுக்கலாம்.
-
பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக), 360 டிகிரி கேமரா மற்றும் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS) ஆகியவை அடங்கும்.
-
முன்பு இருந்த அதே 1-லிட்டர் நேச்சுரல் அஸ்பிரேட்டட் பெட்ரோல் மற்றும் 1-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்களைப் பயன்படுத்த வாய்ப்புள்ளது.
-
6.30 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.
நிஸான் மேக்னைட் அக்டோபர் 4 ஆம் தேதி அதன் முதல் பெரிய அப்டேட்டை பெறவுள்ளது. மேலும் இப்போது நிஸான் அப்டேட்டட் எஸ்யூவியின் டீஸர்களை வெளியிடத் தொடங்கியுள்ளது. முந்தைய டீஸர் நிஸான் எஸ்யூவிக்கான புதிய அலாய் வீல் வடிவமைப்பைக் காட்டியது. தற்போது வெளியாகியுள்ள புதிய டீஸர் புதிய கிரில் மற்றும் அப்டேட்டட் டெயில் லைட்களின் பார்வையை வழங்குகிறது.
டீசரில் பார்க்க முடிந்த விஷயங்கள் என்ன ?
புதிய வீடியோ -வில் நிஸான் மேக்னைட் ஃபேஸ்லிஃப்டில் உள்ள கிரில் வடிவமைப்பை பார்க்க முடிகிறது. இது அதன் இப்போதுள்ள பதிப்பைப் போலவே தோன்றுகிறது. இருப்பினும் முன்பு வெளியான மேக்னைட் ஃபேஸ்லிஃப்ட்டின் படம் இது பெரிய கிரில்லை பெறக்கூடும் என்று பரிந்துரைத்தது. 2024 மேக்னைட்டிற்கான டெயில் லைட்களை நாங்கள் பார்த்தோம் இது ஒரே மாதிரியான வடிவத்தைக் கொண்டுள்ளது. ஆனால் இன்டர்னல் LED லைட்டிங் எலமென்ட்கள் மாற்றப்பட்டுள்ளன.
மேக்னைட் ஃபேஸ்லிஃப்டின் முந்தைய டீஸர் 6-ஸ்போக் டூயல்-டோன் அலாய் வீல்களை மாற்றியமைக்கும் என்பதை உறுதிப்படுத்தியது. ஆனால் மேக்னைட்டின் தற்போதைய பதிப்பில் காணப்படும் அளவு 16-இன்ச் ஆகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்பார்க்கப்படும் பிற மாற்றங்கள்
ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட மேக்னைட் பாரத் என்சிஏபி கிராஷ் டெஸ்ட் வசதியிலும் தென்பட்டது. மேலும் சில காஸ்மெட்டிக் மாற்றங்கள் இருக்கும் என்பதை பரிந்துரைக்கிறது. ஸ்பைட் மாடலில் புதிய முன்பக்க பம்பர் மற்றும் புதிய ஹெட்லைட் ஹவுஸிங்கை பார்க்க முடிகிறது.
மேலும் பார்க்க: டாடா நெக்ஸான் சிஎன்ஜி -யின் ஒவ்வொரு வேரியன்ட்டிலும் கிடைக்கும் விஷயங்கள் இதுதான்
இன்ட்டீரியர் மற்றும் எதிர்பார்க்கப்படும் வசதிகள்
2024 மேக்னைட்டின் கேபினுக்குள் மாற்றங்களை நிஸான் இன்னும் வெளியிடவில்லை என்றாலும் கூட இது புதிய டிரிம்கள் மற்றும் அப்டேட்டட் சீட் அப்ஹோல்ஸ்டரியுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட மேக்னைட் வென்டிலேட்டட் முன் இருக்கைகள் மற்றும் சிங்கிள்-பேன் சன்ரூஃப் போன்ற வசதிகளைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 9-இன்ச் டச் ஸ்கிரீன் (தற்போதைய-ஸ்பெக் மாடலின் கெஸா பதிப்பில் வழங்கப்படுகிறது), 7-இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே மற்றும் வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் போன்ற வசதிகள் தக்கவைக்கப்படும்.
பாதுகாப்புக்காக இது 6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக) கொடுக்கப்படலாம். அதே சமயம் 360 டிகிரி கேமரா, டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS) மற்றும் ISOFIX சைல்டு சீட் ஆங்கரேஜ்கள் தொடர்ந்து கிடைக்கும்.
முன்பு இருந்த அதே இன்ஜின் தேர்வுகள்
தற்போதைய-ஸ்பெக் மாடலில் வழங்கப்பட்டுள்ள அதே இன்ஜின் ஆப்ஷன்களை மேக்னைட் ஃபேஸ்லிஃப்ட்டுடன் நிஸான் வைத்திருக்கும். ஆப்ஷன்களில் பின்வருவன அடங்கும்:
இன்ஜின் |
1-லிட்டர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் |
1-லிட்டர் டர்போ-பெட்ரோல் |
பவர் |
72 PS |
100 PS |
டார்க் |
96 Nm |
160 Nm வரை |
டிரான்ஸ்மிஷன் |
5-ஸ்பீடு MT, 5-ஸ்பீடு AMT |
5-ஸ்பீடு MT, CVT |
எதிர்பார்க்கப்படும் விலை & போட்டி
நிஸான் மேக்னைட் ஃபேஸ்லிஃப்ட்டின் விலை ரூ.6.30 லட்சத்தில் இருந்து (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கலாம். குறிப்புக்கு தற்போதைய பதிப்பின் விலை ரூ.6 லட்சத்தில் இருந்து ரூ.11.27 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா) இருந்து தொடங்கலாம்.இது ரெனால்ட் கைகர், டாடா நெக்ஸான், மாருதி பிரெஸ்ஸா, ஹூண்டாய் வென்யூ, மற்றும் மஹிந்திரா XUV 3XO ஆகியவை மட்டுமல்லாமல் வரவிருக்கும் ஸ்கோடா கைலாக் க்கு போட்டியாகவும் இருக்கும். மேலும் மாருதி ஃபிரான்க்ஸ் மற்றும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் டெய்சர் போன்ற சப்-4மீ கிராஸ்ஓவர்களுக்கும் மேக்னைட் போட்டியிடும்.
கார் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகளை பெற வேண்டுமா? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.
மேலும் படிக்க: நிஸான் மேக்னட் ஏஎம்டி
0 out of 0 found this helpful