• English
  • Login / Register

Nissan Magnite Facelift வேரியன்ட் வாரியான விவரங்கள்

published on அக்டோபர் 08, 2024 05:33 pm by anonymous for நிசான் மக்னிதே

  • 51 Views
  • ஒரு கருத்தை எழுதுக

நிஸான் நிறுவனம் 2024 மேக்னைட்டை 6 வேரியன்ட்களில் விற்பனை செய்கிறது. மேலும் 2 இன்ஜின் ஆப்ஷன்கள் உள்ளன.

Nissan Magnite

சமீபத்தில் அப்டேட்டட் நிஸான் மேக்னைட் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. வெளிப்புறத்திலும் உட்புறத்திலும் சிறிய ஸ்டைலிங் மாற்றங்கள் இந்த காரில் இருந்ததன. 2024 மேக்னைட்டின் விலை ரூ.5.99 லட்சத்தில் தொடங்கி ரூ.11.50 லட்சம் வரை (அறிமுக எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா) வரை உள்ளது. இது விசியா, விசியா பிளஸ், ஆக்ஸென்டா, என்-கனெக்டா, டெக்னா மற்றும் டெக்னா பிளஸ் என 6 வேரியன்ட்களில் கிடைக்கிறது. இந்த அறிக்கையில் பேஸ்-ஸ்பெக் விசியா வேரியன்ட்டில் தொடங்கி, ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட மேக்னைட்டின் ஒவ்வொரு வேரியன்ட்டின் வசதிகளையும் இங்கே பார்க்கலாம்.

நிஸான் மேக்னைட் விசியா வேரியன்ட்

வெளிப்புறம்

இன்ட்டீரியர்

இன்ஃபோடெயின்மென்ட்

கம்ஃபோர்ட் மற்றும் வசதி

பாதுகாப்பு

  • ஹாலோஜன் ஹெட்லைட்கள் மற்றும் டெயில் லைட்ஸ்

  • குரோம் ஃபினிஷ்டு டோர் ஹேண்டில்ஸ் கைப்பிடிகள்

  • 16 இன்ச் எஃகு வீல்ஸ்

  • ஃபன்ஷனல் ரூஃப் ரெயில்ஸ் (50 கிலோ சுமை தாங்கும் திறன் கொண்டது)

  • ரூஃப் ஃபிட்டட் பின்புற ஸ்பாய்லர் 

  • ஃபேப்ரிக் அப்ஹோல்ஸ்டரியுடன் கூடிய அனைத்து பிளாக் கேபின் தீம்

  • கப் ஹோல்டர்களுடன் பின்புற ஆர்ம்ரெஸ்ட்

  • பின் இருக்கைகளுக்கு 60:40 பிளவு செயல்பாடு

  • அட்ஜெஸ்ட்டபிள் ஹெட்ரெஸ்ட்கள்

  • பகல்/இரவு ஐஆர்விஎம்

  • முன் மற்றும் பின்புற கேபின் லைட்ஸ்

  • விவரம் இல்லை.

  • செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர்

  • மேனுவல் ஏசி

  • அனைத்து பவர் விண்டோஸ்

  • 12 V பவர் அவுட்லெட்

  • PM2.5 ஏர் ஃபியூரிபையர் 

  • ஸ்டீயரிங் வீலுக்கான டில்ட் அட்ஜெஸ்ட்மென்ட் 

  • 6 ஏர்பேக்ஸ்

  • அனைத்து பயணிகளுக்கும் 3-பாயிண்ட் சீட் பெல்ட் 

  • ISOFIX சைல்டு சீட் ஆங்கரேஜ்கள்

  • ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட்

  • EBD உடன் ABS

  • டயர் அழுத்த மானிட்டரிங் சிஸ்டம் (TPMS)

  • பின்புற பார்க்கிங் சென்சார்கள்

Nissan Magnite Visia gets halogen headlights
Nissan Magnite Visia gets black interior theme

2024 மேக்னைட்டின் பேஸ் விசியா வேரியன்ட்டுடன் ஸ்டாண்டர்டாக ISOFIX சைல்டு சீட் மவுண்ட்கள் மற்றும் 6 ஏர்பேக்குகள் கிடைக்கும். இது 16-இன்ச் ஸ்டீல் வீல்கள், ஹாலோஜன் ஹெட்லைட்கள் மற்றும் குரோம்-ஃபினிஷ் செய்யப்பட்ட டோர் ஹேண்டில்ஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. நிஸான் ஃபேப்ரிக் சீட் அப்ஹோல்ஸ்டரியுடன் ஆல் பிளாக் கேபின் தீம் -ஐ இந்த காருக்கு வழங்கியுள்ளது. இதில் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா கிடைக்காது.

நிஸான் மேக்னைட் விசியா பிளஸ் வேரியன்ட்

விசியா வேரியன்ட்டுக்கு ஒரு படி மேலே உள்ள பேஸ் விசியா பிளஸ் வேரியன்ட் பின்வருவனவற்றைப் பெறுகிறது: 

வெளிப்புறம்

இன்ட்டீரியர்

இன்ஃபோடெயின்மென்ட்

கம்ஃபோர்ட் மற்றும் வசதி

பாதுகாப்பு

  • ஷார்க் ஃபின் ஆண்டெனா

  • விவரம் இல்லை.

  • வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ உடன் 9-இன்ச் டச் ஸ்கிரீன்

  • புளூடூத் இணைப்பு

  •  4-ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டம்

  • விவரம் இல்லை.

  • ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா

  • பின்புற துடைப்பான் மற்றும் வாஷர்

  • பின்புற டிஃபோகர்

என்ட்ரி லெவல் வேரியன்ட்டின் மீது கூடுதலாக ரூ. 50,000 செலுத்தினால் விசியா பிளஸ் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 4-ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டம் மற்றும் ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா ஆகியவற்றை வழங்குகிறது. இது வாஷர், ரியர் டிஃபோகர் மற்றும் ஷார்க் ஃபின் ஆண்டெனாவுடன் கூடிய பின்புற வைப்பர் உடன் வருகிறது. சிசியா பிளஸ் டிரிம் 72 PS 1-லிட்டர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜினுடன் மட்டுமே கிடைக்கிறது. 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனுடன் மட்டுமே இணைக்கப்பட்டுள்ளது.

நிஸான் மேக்னைட் ஆக்ஸென்டா வேரியன்ட்

மேக்னைட் ஆக்ஸென்டா வேரியன்ட் விசியா பிளஸ் வேரியன்ட்டின் கீழே குறிப்பிடப்பட்ட வசதிகளை பெறுகிறது:

வெளிப்புறம்

இன்ட்டீரியர்

இன்ஃபோடெயின்மென்ட் 

கம்ஃபோர்ட் மற்றும் வசதி

பாதுகாப்பு

  • முன் மற்றும் பின்புற ஸ்கிட் பிளேட்கள்

  • ORVM-லோடட் LED டர்ன் இண்டிகேட்டர்ஸ்

  • பாடி கலர்டு ORVMகள்

  • வீல் கவர்கள்

  • விவரம் இல்லை.

  • விவரம் இல்லை

  • ஹெயிட் அட்ஜஸ்ட்டபிள் ஓட்டுநர் இருக்கை

  • ரிமோட் இன்ஜின் ஸ்டார்ட் (டர்போ வேரியன்ட்கள் மட்டும்)

  • ஆட்டோ ஏசி

  • கீலெஸ் என்ட்ரி

  • புஷ் பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப் (டர்போ வேரியன்ட்கள் மட்டும்)

  • ஸ்டீயரிங் பொருத்தப்பட்ட கன்ட்ரோல்கள்

  • எலக்ட்ரிக்கலி அட்ஜெஸ்ட்டபிள் மற்றும் ஃபோல்டபிள் ORVMகள்

  • ஆட்டோ அப்/டவுன் டிரைவரின் சைடு விண்டோ

  • தெஃப்ட் அலாரம்

மிட்-ஸ்பெக் ஆக்சென்டா வேரியன்ட், கீலெஸ் என்ட்ரி, ஆட்டோ ஏசி மற்றும் ஸ்டீயரிங்-மவுண்டட் ஆடியோ கன்ட்ரோல்களை உள்ளடக்கிய லோயர்-ஸ்பெக் வேரியன்ட்களில் பல கம்ஃபோர்ட் மற்றும் வசதி விஷயங்கள் உள்ளன. மேக்னைட்டின் டர்போ வேரியன்ட்களில் ரிமோட் இன்ஜின் ஸ்டார்ட், புஷ்-பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப் மற்றும் வாகனம் அருகில் இருப்பதை உணரும்போதெல்லாம் வாகனத்தை லாக்/அன்லாக் செய்யும் பிரீமியம் கீ போன்ற கூடுதல் வசதிகளுடன் வருகிறது. 1-லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் இன்ஜினுடன் 2024 மேக்னைட்டை உள்ளமைக்க ஆக்ஸென்டா வேரியன்ட் உங்கள் என்ட்ரி பாயிண்ட்யாகும். 

மேலும் பார்க்க: 2024 நிஸான் மேக்னைட்  மற்றும் போட்டியாளர்கள்: விலை ஒப்பீடு பகுதி 2

நிஸான் மேக்னைட் N-கனெக்டா வேரியன்ட்

ஆக்ஸென்டா வேரியன்ட்டின் மீது, உயர்-ஸ்பெக் N-கனெக்டா வேரியன்ட் பெறுகிறது:

வெளிப்புறம்

இன்ட்டீரியர்

இன்ஃபோடெயின்மென்ட்

கம்ஃபோர்ட் மற்றும் வசதி

பாதுகாப்பு

  • 16-இன்ச் அலாய் வீல்கள்

  • LED DRLகள்

  • சில்வர் இன்செர்ட்களுடன் பாடி கலர்டு கிளாடிங்

  • டாஷ்போர்டில் மென்மையான டச் லெதரெட் எலமென்ட்கள்

  • ஆட்டோ டிம்மிங் IRVM

  • இல்லுமினேட்டட் க்ளோவ்

  • பின்புற பார்சல் டிரே

  • வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ உடன் 8-இன்ச் ஃபுளோட்டிங் டச் ஸ்கிரீன்

  • 6-ஸ்பீக்கர் ARKAMYS சவுண்ட் சிஸ்டம்

  • வாய்ஸ் ரெக்கனைசேஷன்

  • பின்புற ஏசி வென்ட்கள்

  • ஸ்டோரேஜ் உடன் முன் ஆர்ம்ரெஸ்ட்

  • டைப்-சி சார்ஜிங் போர்ட்கள்

  • பூட் லைட்ஸ்

  • 7-இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே

  • விவரம் இல்லை.

N-கனெக்டா வேரியன்ட் LED DRL -கள் உடன் வருகிறது, ஆனால் இன்னும் ஆல் LED ஹெட்லைட் செட்டப் இல்லை. இது 16-இன்ச் அலாய் வீல்கள் மற்றும் சில்வர் இன்செர்ட்டுகளுடன் பாடி சைடு கிளாடிங்குடன் வருகிறது. முழு பிளாக் கேபின் தீம் தக்கவைக்கப்பட்டுள்ளது, ஆனால் டாஷ்போர்டில் லெதரெட் பூச்சு உள்ளது. 7-இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, டைப்-சி சார்ஜிங் போர்ட்கள் மற்றும் பிரீமியம் 6-ஸ்பீக்கர் ARKAMYS சவுண்ட் சிஸ்டம் ஆகியவை உள்ளன.

நிஸான் மேக்னைட் டெக்னா வேரியன்ட்

N-கனெக்டா வேரியன்ட்டுடன் ஒப்பிடும்போது ​​இரண்டாவது ஒன் அபோவ் டெக்னா வேரியன்ட் கீழே பட்டியலிடப்பட்ட விஷயங்களை கூடுதலாக பெறுகிறது:

வெளிப்புறம்

இன்ட்டீரியர்

இன்ஃபோடெயின்மென்ட் 

கம்ஃபோர்ட் மற்றும் வசதி

பாதுகாப்பு

  • LED வால் லைட்ஸ்

  • ஆட்டோ-எல்இடி ப்ரொஜெக்டர் ஹெட்லைட்கள்

  • LED ஃபாக் லைட்ஸ்

  • LED டேர்ன் இண்டிகேட்டர்ஸ்

  • டூயல் டோன் பிளாக் மற்றும் கிரே கேபின் தீம்

  • டேஷ்போர்டு மற்றும் ஸ்டீயரிங் மீது ஆரஞ்சு ஸ்டிச்

  • டோர் பேடுகளில் சாஃப்ட் டச் எலமென்ட்ஸ் 

  • செமி லெதரெட் சீட் அப்ஹோல்ஸ்டரி 

  • விவரம் இல்லை.

  • குரூஸ் கன்ட்ரோல்

  • கூல்டு க்ளோவ்

  • 360 டிகிரி கேமரா செட்டப்

இரண்டாவது முதல் டாப் டெக்னா வேரியன்ட்டுடன், நீங்கள் LED ஹெட்லைட் மற்றும் டெயில் லைட் அமைப்புகளைப் பெறுவீர்கள். இது டூயல்-டோன் லைட் க்ரே மற்றும் பிளாக் கேபினுடன் செமி-லெதர் சீட் அப்ஹோல்ஸ்டரியையும் கொண்டுள்ளது. க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் கூல்டு க்ளோவ்பாக்ஸ் ஆகியவை மட்டுமே கூடுதல் கம்ஃபோர்ட் மற்றும் வசதி மட்டுமல்லாமல் அதன் பாதுகாப்பு கிட் 360 டிகிரி கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது.

நிஸான் மேக்னைட் டெக்னா பிளஸ் வேரியன்ட்

டெக்னா வேரியன்ட்டின் மீது, முழுமையாக ஏற்றப்பட்ட டெக்னா பிளஸ் வேரியன்ட் பின்வரும் உபகரணங்களைக் கொண்டுள்ளது:

வெளிப்புறம்

இன்ட்டீரியர்

இன்ஃபோடெயின்மென்ட்

கம்ஃபோர்ட் மற்றும் வசதி

பாதுகாப்பு

  • விவரம் இல்லை.

  • லெதர் சீட் அப்ஹோல்ஸ்டரியுடன் டூயல்-டோன் பிளாக் மற்றும் ஆரஞ்சு கேபின் தீம் 

  • டாஷ்போர்டில் ஆரஞ்சு நிறத்தில் ஃபினிஷ் செய்யப்பட்ட லெதரெட் எலமென்ட்கள் 

  • 4-கலர் ஆம்பியன்ட் லைட்ஸ்

  • விவரம் இல்லை.

  • விவரம் இல்லை.

  • விவரம் இல்லை.

Nissan Magnite front
Nissan Magnite dashboard

டாப்-ஸ்பெக் டெக்னா பிளஸ் வேரியன்ட் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியிருந்தாலும், 4-கலர் ஆம்பியன்ட் லைட்ஸ் தவிர, டெக்னா வேரியன்ட்டின் மீது எந்தச் கூடுதல் விஷயங்களும் இல்லை. கேபினுக்குள் இருக்கும் மாற்றங்கள் அழகுக்காகவும் உள்ளன, லெதர் சீட் அப்ஹோல்ஸ்டரியுடன் டூயல்-டோன் ஆரஞ்சு மற்றும் பிளாக் இன்ட்டீரியரை கொண்டுள்ளது.

பவர்டிரெய்ன் விவரங்கள்

2024 நிஸான் மேக்னைட்டுடன் வழங்கப்படும் 2 இன்ஜின் ஆப்ஷன்களின் பவர்டிரெய்ன் விவரங்கள் கீழே உள்ளன:

இன்ஜின் 

1-லிட்டர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல்

1-லிட்டர் டர்போ-பெட்ரோல்

பவர்

72 PS

100 PS

டார்க்

96 Nm

160 Nm (MT), 152 Nm (CVT)

டிரான்ஸ்மிஷன்

5-ஸ்பீடு MT/5-ஸ்பீடு AMT

5-ஸ்பீடு MT/CVT

கிளைம்டு மைலேஜ்

19.4 கிமீ/லி (MT), 19.7 கிமீ/லி (AMT)

19.9 கிமீ/லி (MT), 17.9 கிமீ/லி (CVT)

2024 நிஸான் மேக்னைட்டுடன் கூடிய விரிவான வேரியன்ட் வாரியான இன்ஜின் மற்றும் கலர் ஆப்ஷன்கள் உள்ளன. அதை நீங்கள் இங்கே பார்க்கலாம் 

2024 நிஸான் மேக்னைட் போட்டியாளர்கள்

புதுப்பிக்கப்பட்ட மேக்னைட் சப்-4m எஸ்யூவி பிரிவில் ரெனால்ட் கைகர், டாடா நெக்ஸான், ஹூண்டாய் வென்யூ, கியா சோனெட் மற்றும் மஹிந்திரா XUV 3XO போன்ற கார்களுடன் போட்டியிடுகிறது. மேலும் மாருதி ஃபிரான்க்ஸ் மற்றும் டொயோட்டா டெய்சர் போன்ற சப்-4m கிராஸ்ஓவர்களுடனும் போட்டியிடுகிறது.

கார் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகளை பெற வேண்டுமா? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.

மேலும் படிக்க: நிஸான் மேக்னட் ஏஎம்டி

was this article helpful ?

Write your Comment on Nissan மக்னிதே

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
  • க்யா syros
    க்யா syros
    Rs.9.70 - 16.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    பிபரவரி, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • டாடா சீர்ரா
    டாடா சீர்ரா
    Rs.10.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    செப, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • பிஒய்டி sealion 7
    பிஒய்டி sealion 7
    Rs.45 - 49 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • டாடா பன்ச் 2025
    டாடா பன்ச் 2025
    Rs.6 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    செப, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • நிசான் பாட்ரோல்
    நிசான் பாட்ரோல்
    Rs.2 சிஆர்கணக்கிடப்பட்ட விலை
    அக்ோபர், 2025: அறிமுக எதிர்பார்ப்பு
×
We need your சிட்டி to customize your experience