புதிய ஃபோர்ஸ் கூர்க்கா 5-டோர் இன்ட்டீரியர் டீசர் வெளியிடப்பட்டுள்ளது, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் கிடைக்கும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது

published on ஏப்ரல் 18, 2024 09:21 pm by yashein for ஃபோர்ஸ் குர்கா 5 டோர்

 • 43 Views
 • ஒரு கருத்தை எழுதுக

டீசரில் காட்டப்பட்டுள்ளபடி 3 வரிசை பயணிகளுக்கான கேப்டன் இருக்கைகள் மற்றும் அதன் 3-டோர் உடன்பிறப்பை விட சிறப்பான வசதிகள் பொறுத்தப்பட்ட கேபினை பெறுகிறது.

 • டீஸரில் 5-டோர் ஃபோர்ஸ் கூர்க்கா -வின் இன்ட்டீரியர் காட்டப்பட்டுள்ளது.

 • ஒரு பெரிய டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் மல்டி மோடு கொண்ட டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் ஆகியவற்றை கொண்டிருக்கும் என தெரிகின்றது.

 • இது மூன்றாவது வரிசை பயணிகளுக்கான கேப்டன் இருக்கைகளையும் கொண்டுள்ளது.

 • ஸ்கொயர்-அவுட் ஹெட்லைட்கள் மற்றும் 16-இன்ச் டூயல்-டோன் அலாய் வீல்கள் ஆகியவையும் கொடுக்கப்பட்டுள்ளன.

 • வரும் வாரத்தில் அறிமுகப்படுத்தப்படலாம் என என எதிர்பார்க்கப்படுகிறது; விலை ரூ.16 லட்சத்திலிருந்து (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கலாம்.

5-டோர் ஃபோர்ஸ் கூர்க்கா -வின் டீஸர் வெளியான சிறிது நேரத்திலேயே எஸ்யூவி -யின் கேபினை பற்றிய ஒரு பார்வையை வழங்கும் ஒரு டீசரை இப்போது ஃபோர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. நீளமான கூர்க்கா இரண்டு நவீன வசதிகளையும் புதிய சீட் அமைப்பையும் பெறும் என்பதை சமீபத்திய டீஸர் காட்டுகிறது.

புதிதாக என்ன இருக்கின்றது?

Gurkha 5-door

டீசரில் பார்த்தது போல் வரவிருக்கும் 5-டோர் கூர்காவில் டூயல்-டோன் லெதரெட் சீட் அப்ஹோல்ஸ்டரியுடன் ஆல் பிளாக் கேபின் இடம்பெறும். இது ஒரு பெரிய டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் டயர் பிரஷர் உட்பட பல தகவல்களைக் காட்டும் ஆல் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் உட்பட இரண்டு புதிய நவீன வசதிகளை பெறும். இந்த வசதிகளைத் தவிர, கூர்க்கா 5-டோர் மூன்றாவது வரிசை பயணிகளுக்கு கேப்டன் இருக்கைகளைப் பெறுவதைக் காணலாம், இது 7 சீட் காராக அமைகிறது. டீசரின்படி ஆஃப் ரோடு மோடுகளை கட்டுப்படுத்த எலக்ட்ரானிக் முறையில் இயக்கப்படும் 4WD நாப் கொடுக்கப்பட்டிருப்பதையும் நாம் பார்க்கலாம்.

மேலும் படிக்க: புதிய ஃபோர்ஸ் கூர்க்கா 5-டோர் காரின் டீசர் புதிய வடிவமைப்பு விவரங்களை காட்டுகின்றது

 வெளிப்புறம்

Gurkha 5-door exterior

சமீபத்திய டீஸர்கள் மற்றும் ஸ்பை ஷாட்களின்படி, 5-டோர் மாடல் அதன் வட்டமான ஹெட்லைட் வடிவமைப்பை LED DRLகள் மற்றும் LED ஹெட்லேம்ப்களுடன் அப்படியே இருக்கும் என தெரிகின்றது. தற்போதுள்ள கூர்க்கா 3-டோர் பதிப்பில் நாம் பார்த்த வழக்கமான கிரில் இதில் இடம்பெறும். இது அனைத்து நிலப்பரப்புக்க்கும் ஏற்றபடி டயர்களிலும் மூடப்பட்ட அலாய்களுக்கு புதிய வடிவமைப்பைப் பெறுகிறது. இருப்பினும் டெயில்கேட்டில் பொருத்தப்பட்ட ஸ்பேர் வீல் மற்றும் ஏணி, மற்றும் ஸ்நோர்கெல் ஆகியவை 3-டோர் கூர்க்காவில் உள்ளதை போலவே இருக்கின்றன.

வசதிகள்

Gurkha 5-door interior

பெரிய டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் யூனிட் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் தவிர, கூர்க்கா பல வென்ட்களுடன் முன் பவர் விண்டோஸ் மற்றும் மேனுவல் ஏசி ஆகியவற்றைப் பெறும்.

பாதுகாப்பைப் பொறுத்தவரை கூர்க்கா குறைந்தபட்சம் டூயல் முன் ஏர்பேக்குகள், ஏபிஎஸ், பின்புற பார்க்கிங் சென்சார்கள் மற்றும் பின்புற கேமரா ஆகியவற்றை கொண்டிருக்கும்.

பவர்டிரெய்ன்

5-டோர் கூர்க்கா நன்கு அறியப்பட்ட 2.6-லிட்டர் டீசல் இன்ஜின் மூலம் இயக்கப்படும், இது 90 PS மற்றும் 250 Nm அவுட்புட்டை கொடுக்கின்றது. இது 3-டோர் மாடல் போலவே உள்ளது. இருப்பினும் அதிகமாக ட்யூன் செய்யப்பட்டிருக்கலாம். டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களில் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் 4-வீல் டிரைவ் (4WD) மற்றும் குறைந்த அளவிலான டிரான்ஸ்மிஷன் கேஸ் ஆகியவை அடங்கும்.

விலை மற்றும் போட்டியாளர்கள்

Gurkha 5-door

கூர்க்கா 5-டோர்க்கான விலை சுமார் ரூ.16 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கும் என்று எதிர்பார்க்கிறோம். 2024 கூர்க்கா மாருதி ஜிம்னி -க்கு ஒரு பெரிய மாற்றாக இருக்கும் மற்றும் தார் 5-டோர் பதிப்பு -க்கு போட்டியாக இருக்கும். இது ஆகஸ்ட் 15, 2024 அன்று அறிமுகமாகவுள்ளது.

மேலும் படிக்க: கூர்க்கா டீசல்

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment மீது ஃபோர்ஸ் குர்கா 5 Door

Read Full News

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

 • டிரெண்டிங்கில் செய்திகள்
 • சமீபத்தில் செய்திகள்

trendingஎஸ்யூவி கார்கள்

 • லேட்டஸ்ட்
 • உபகமிங்
 • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience