இந்தியாவில் MG Windsor EV இந்த தேதியில் அறிமுகமாகும்
published on ஆகஸ்ட் 13, 2024 06:52 pm by shreyash for எம்ஜி விண்ட்சர் இவி
- 60 Views
- ஒரு கருத்தை எழுதுக
MG விண்ட்ஸர் இவி என்பது ஒரு எலக்ட்ரிக் கிராஸ்ஓவர் மற்றும் சர்வதேச சந்தைகளில் விற்கப்படும் வூலிங் கிளவுட் இவி -யின் பெயர் மாற்றப்பட்ட பதிப்பாகும்.
-
விண்ட்சர் இவி ஆனது ZS இவி மற்றும் காமெட் இவி -க்குப் பிறகு MG விற்பனைக்கு கொண்டு வரும் மூன்றாவது ஆல்-எலக்ட்ரிக் கார் ஆகும்.
-
இது கிராஸ்ஓவர் பாடிஸ்டைலை கொண்டுள்ளது. மற்றும் சிறிய மற்றும் தெளிவான டிஸைனை இது கொண்டிருக்கும்.
-
உள்ளே இது புரோன்ஸ் மற்றும் வுடன் இன்செர்ட்களுடன் ஆல் பிளாக் டேஷ்போர்டுடன் வரும்.
-
15.6-இன்ச் டச் ஸ்கிரீன், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், 6 ஏர்பேக்குகள் மற்றும் ADAS ஆகிய வசதிகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
அதன் குளோபல் ஸ்பெக் காரில் இருப்பதை போன்றே 50.6 kWh பேட்டரி பேக்கை பயன்படுத்த வாய்ப்புள்ளது.
-
விலை ரூ.20 லட்சத்திலிருந்து (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் MG ZS இவி மற்றும் எம்ஜி காமெட் இவி ஆகிய கார்களுக்கு பிறகு எம்ஜியின் எலக்ட்ரிக் கார் வரிசையில் மூன்றாவது கார் ஆக எம்ஜி வின்ட்சர் இவி இருக்கும். MG ஏற்கனவே அதன் எலக்ட்ரிக் கிராஸ் ஓவர் காரில் டீசர்களை வெளியிட்டுள்ளது. இப்போது விண்ட்சர் செப்டம்பர் 11 ஆம் தேதி அறிமுகமாகும் என்பதை நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. விண்ட்சர் இவி ஆனது சர்வதேச சந்தைகளில் வுலிங் பேட்ஜின் கீழ் விற்கப்படும் கிளவுட் இவியின் மறுபெயரிடப்பட்ட பதிப்பாகும்.
கிராஸ்ஓவர் பாடிஸ்டைல்
அதன் முந்தைய டீஸர்கள் மூலம் வின்ட்சர் இவி ஒரு எஸ்யூவி -யின் நடைமுறைத்தன்மையுடன் செடானின் வசதியை சேர்ந்து பெறும் என்று MG தெரிவித்துள்ளது. இது அதன் வடிவமைப்பிலும் பிரதிபலிக்கிறது. வின்ட்சர் இவி ஆனது அதன் சர்வதேச இணையான வூலிங் கிளவுட் இவி போன்ற கிராஸ்ஓவர் பாடிஸ்டைலை கொண்டுள்ளது. பக்கவாட்டு மற்றும் பின்புறத்தில் இருந்து விண்ட்ஸர் இவி ஒரு குறைந்தபட்ச மற்றும் தெளிவான வடிவமைப்பைக் கொண்டிருக்கும். அதே நேரத்தில் முன் மற்றும் பின்புறத்தில் கனெக்டட் LED லைட்டிங் எலமென்ட்கள் அதிநவீன தோற்றத்தை காருக்கு கொடுக்கும்.
மேலும் பார்க்க: 2024 கியா கார்னிவல் மற்றும் கியா இவி9 இந்த தேதியில் வெளியிடப்படும்
இன்ட்டீரியர் மற்றும் எதிர்பார்க்கப்படும் வசதிகள்
வின்ட்சர் இவியின் சமீபத்திய டீஸர்களில் ஒன்று அதன் பின் சீட்கள் பிளாக் கலர் லெதரெட்டில் இருப்பதை காட்டுகின்றன. இந்த சீட்களில் 135-டிகிரி ரிக்ளனிங் செய்து கொள்ளலாம். மற்றும் சென்டர் ஆர்ம்ரெஸ்ட்டும் உள்ளது. வின்ட்சர் இவி இன் டேஷ்போர்டு க்ளவுட் இவி -யை போலவே இருக்கும். இதில் ஆல் பிளாக் தீம் மற்றும் புரோன்ஸ் மற்றும் வுடன் இன்செர்ட்கள் இருக்கும். 15.6-இன்ச் டச் ஸ்கிரீன், 8.8-இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, வயர்லெஸ் போன் சார்ஜிங், எலக்ட்ரிக்கல் அட்ஜெஸ்ட்டெபிள் முன் இருக்கைகள் மற்றும் எலக்ட்ரிக் டெயில்கேட் போன்ற வசதிகளுடன் எம்ஜி தனது எலக்ட்ரிக் கிராஸ்ஓவரை கொடுக்கலாம்.
பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), 360 டிகிரி கேமரா மற்றும் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், லேன் கீப் அசிஸ்ட் மற்றும் அட்டானமஸ் எமர்ஜென்சி பிரேக்கிங் உள்ளிட்ட அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) ஆகியவை கொடுக்கப்படலாம்.
எலக்ட்ரிக் பவர்டிரெய்ன் விவரங்கள்
விண்ட்ஸர் இவி ஆனது கிளவுட் இவி போன்ற அதே பேட்டரி பேக்கை பயன்படுத்தும். விவரங்கள் கீழே உள்ளன:
பேட்டரி பேக் |
50.6 kWh |
எலக்ட்ரிக் மோட்டார் எண்ணிக்கை |
1 |
டிரைவ் டைப் |
ஃபிரன்ட் வீல் டிரைவ் (FWD) |
பவர் |
136 PS |
டார்க் |
200 Nm |
கிளைம்டு ரேஞ்ச் (CLTC) |
460 கி.மீ |
CLTC - சீனா லைட் டியூட்டி வெஹிகிள் டெஸ்ட் சைக்கிள்
இந்தியா-ஸ்பெக் மாடலுக்கு கிளைம்டு ரேஞ்ச் அவுட்புட் விவரங்கள் மாறுபடலாம்.
எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்
MG விண்ட்ஸர் இவி -யின் விலை ரூ. 20 லட்சத்தில் இருந்து (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கலாம். இது ஆகஸ்ட் 2024 -ல் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது MG ZS இவி -க்கு விலை குறைவான மாற்றாக இருக்கும். மேலும் டாடா நெக்ஸான் இவி மற்றும் மஹிந்திரா XUV400 ஆகியவற்றுக்கு எலக்ட்ரிக் கிராஸ்ஓவர் பிரீமியம் மாற்றாக இருக்கும்.
கார் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகளை பெற வேண்டுமா? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.
0 out of 0 found this helpful