காமெட் EV யை ரூ.7.98 லட்சம் விலையில் அறிமுகப்படுத்திய எம்ஜி; டாடா டியாகோ EV யை விட விலை குறைவாக கிடைக்கும்
modified on ஏப்ரல் 26, 2023 04:37 pm by tarun for எம்ஜி comet ev
- 26 Views
- ஒரு கருத்தை எழுதுக
இது விரிவாக மாற்றியமைத்துக் கொள்ளும் ஆப்ஷன்களுடன் சிங்கிள் ஃபுல்லி லோடட் டிரிம்மில் கிடைக்கிறது
எம்ஜி காமெட் EV -யின் விலைகள் வெளியாகியுள்ளன ! இரண்டு கதவுகள் கொண்ட அல்ட்ரா-காம்பாக்ட் எலக்ட்ரிக் ஹேட்ச்பேக் ரூ.7.98 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படவுள்ளது (எக்ஸ்-ஷோரூம் டெல்லி சிறப்பு அறிமுக விலை). இப்போதைக்கு ஆரம்ப விலைகள் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளன, அதே நேரத்தில் வேரியன்ட் வாரியான விலைகள் மே மாதத்தில் வெளியிடப்படும். மே 15 முதல் முன்பதிவு தொடங்கும் மற்றும் ஏப்ரல் 27 முதல் டெஸ்ட் டிரைவ்க்கு கார்கள் கிடைக்கும்.
அளவீடுகள்
நீளம் |
2974மிமீ |
அகலம் |
1505மிமீ |
உயரம் |
1640மிமீ |
வீல்பேஸ் |
2010மிமீ |
காமெட் EV என்பது சப்-3-மீட்டர் காராகும், இது இன்று நீங்கள் வாங்கக்கூடிய மிகச் சிறிய புதிய காராகவும், நகரத்தில் ஓட்டுவதற்கு ஏற்றதாகவும் இருக்கும். இது நான்கு பேர் அமரக்கூடிய இரண்டு கதவுகள் கொண்ட ஹேட்ச்பேக். குறிப்பாக, அதன் நீளம் டாடா நானோவை விட (3099மிமீ) சிறியது ஆனால் ஆல்டோ 800 (1490மிமீ) விட அகலமானது. தனியாக பூட் எதுவும் இந்தக் காரில் இல்லை, ஆனால் பின் இருக்கைகளை தேவைப்படும் போது மடக்கினால் சில லக்கேஜ்களை வைக்க இடம் கிடைக்கும் .
பேட்டரி, ரேஞ்ச் மற்றும் இதர விவரங்கள்
பேட்டரி |
17.3கிவா/மணி |
ரேஞ்ச் (கிளைம் செய்யப்பட்டது) |
230 கிலோமீட்டர்கள் |
எலக்ட்ரிக் மோட்டார் |
42பிஎஸ் |
டார்க் |
110நிமீ |
0-100 சதவிகித சார்ஜ் 3.3கிவா சார்ஜரை பயன்படுத்தும் போது |
7 மணி நேரம் |
10-80 சதவிகித சார்ஜ் 3.3கிவா சார்ஜரை பயன்படுத்தும் போது |
5 மணி நேரம் |
காமெட் EV ஆனது ஒரு பேட்டரி பேக்குடன் கிடைக்கிறது, இது 230 கிலோமீட்டர்கள் வரை ரேஞ்ச் -ஐ கிளைம் செய்கிறது. இதில் பின்பக்க ஆக்ஸிலில் பொருத்தப்பட்ட மோட்டார் உள்ளது, இது 42பிஎஸ் வரை ஆற்றலை கொடுக்கும். சுமார் ஏழு மணி நேரத்தில் 3.3 கிவா சார்ஜர் மூலம் 100 சதவீதம் வரை சார்ஜ் செய்ய முடியும். அதே சார்ஜர் 10-80 சதவீதம் சார்ஜ் செய்ய ஐந்து மணிநேரம் எடுக்கிறது. இது ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியைப் பெறவில்லை, ஆனால் குறைந்த கெபாசிட்டி கொண்ட பொது ஸ்டேஷன்களில் நீங்கள் இதை சார்ஜ் செய்யலாம்.
அம்சங்கள்
இதில் உள்ள அம்சங்களைப் பொறுத்தவரை, இந்த எலெக்ட்ரிக் ஹேட்ச்பேக் மற்ற அனைத்து எம்ஜிகளைப் போலவே கூடுதலானவற்றைப் பெற்றுள்ளது. இதில் கிடைப்பவை:
-
எல்இடி ஹெட்லேம்புகள் மற்றும் டெயில் லேம்புகள்
-
டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் டிரைவர்ஸ் டிஸ்பிளே ஆகியவற்றுக்காக டூயல் 10.25-இன்ச் டிஸ்பிளேக்கள்
-
வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே
-
55 கனெக்டட் கார் ஃபியூச்சர்கள் - வாய்ஸ் கமான்ட், ரிமோட் ஆபரேசன், டிஜிட்டல் கீ, மற்றும் பல
-
ரிமோட் சென்ட்ரல் லாக்கிங்
-
கீலெஸ் எண்ட்ரி
-
டில்ட் அட்ஜஸ்ட்மென்டுடன் கூடிய தோலால் சுற்றப்பட்ட ஸ்டீயரிங்
-
ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் கூடிய 3 யூஎஸ்பி போர்ட்கள்
-
பவர் அட்ஜஸ்டபிள் ORVM கள்
காமெட் EV -யிலும் 'இன்டர்நெட் இன்சைட்' பிராண்டிங் இருக்கிறது, இது ஹிங்கிலிஷ் வாய்ஸ் கமாண்ட், ஆன்லைன் மியூசிக் ஆப்ஸ், டிஜிட்டல் கீ, ரிமோட் மூலம் ஏசி ஆன்/ஆஃப் மற்றும் மேம்பட்ட டெலிமாடிக்ஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
பாதுகாப்பு வசதிகள்
இந்த காரில் பயணிகளின் பாதுகாப்பு இவற்றின் மூலமாக உறுதி செய்யப்படுகிறது:
-
டூயல் ஃபிரன்ட் ஏர்பேக்ஸ்
-
ஏபிஎஸ் வித் இபிடி
-
IP67 பேட்டரி
-
ரியர் பார்க்கிங் கேமரா
-
எல்இடி ரியர் ஃபாக் லேம்ப்
-
டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம்
-
சீட் பெல்ட் ரிமைன்டர் மற்றும் நான்கு கார்களுக்கும் த்ரீ-பாயிண்ட் சீட் பெல்ட்கள்
-
ISOFIX சைல்டு சீட் மவுண்ட்கள்
-
மேனுவல் டே/நைட் IRVM
நிறங்கள்
எம்ஜி காமெட் EV -யை ஐந்து அடிப்படை வண்ணங்களில் வழங்குகிறது - ஆப்பிள் கிரீன் வித் ஸ்டார்ரி பிளாக் ரூஃப், கேண்டி வைட் வித் ஸ்டார்ரி பிளாக் ரூஃப், ஸ்டாரி பிளாக், அரோரா சில்வர் மற்றும் கேண்டி ஒயிட். உங்கள் ஸ்டைல் ஸ்டேட்மென்ட் க்கு ஏற்ப பல ஸ்டிக்கர்கள், கிராபிக்ஸ் மற்றும் மாற்றம் செய்வதற்கான பேக்குகளையும் நீங்கள் தேர்வு செய்து செய்யலாம்.
போட்டியாளர்கள்
காமெட் EV -க்கு நேரடி போட்டியாளர்கள் இல்லை, ஏனெனில் இது விற்பனையில் உள்ள சிறிய EV ஆகும். இருப்பினும், விலையைப் பொறுத்தவரை, இது டாடா டியாகோ EV மற்றும் சிட்ரோன் eC3 ஆகியவற்றுக்கு மாற்றாக உள்ளது.
0 out of 0 found this helpful