- + 9படங்கள்
மஹிந்திரா be 09
change carbe 09 சமீபகால மேம்பாடு
மஹிந்திரா XEV 9e -ன் லேட்டஸ்ட் அப்டேட் என்ன?
முன்பு மஹிந்திரா XUV.e9 என்று அழைக்கப்பட்ட மஹிந்திரா XEV 9e காரின் முதல் டீஸர் வெளியிடப்பட்டுள்ளது.
XEV 9e எப்போது வெளியிடப்படும் மற்றும் அதன் விலை என்னவாக இருக்கும் ?
XUV.e8 கான்செப்ட்டின் கூபே பதிப்பு (இது மஹிந்திரா XUV700 -ன் எலக்ட்ரிக் வெர்ஷன்) நவம்பர் 26, 2024 அன்று வெளியிடப்படும். இது ஏப்ரல் 2025 இல் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது, இதன் விலை ரூ. 38 லட்சத்தில் இருந்து தொடங்கலாம் (எக்ஸ்-ஷோரூம்) .
மஹிந்திரா XEV 9e என்ன வசதிகளைப் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது?
XEV 9e 3 இன்டெகிரேட்டட் டிஸ்பிளேக்கள் (டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், டச் ஸ்கிரீன் மற்றும் பயணிகள் பக்க டிஸ்பிளே), மல்டி ஜோன் ஆட்டோமெட்டிக் ஏசி, வென்டிலேஷன் மற்றும் பவர்டு முன் இருக்கைகள், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் மற்றும் பிரீமியம் சவுண்ட் சிஸ்டம் ஆகியவற்றைக் கொண்டிருக்கலாம்.
XEV 9e உடன் என்ன இருக்கை ஆப்ஷன்கள் வழங்கப்படும்?
மஹிந்திரா XEV 9e 5 சீட்கள் கொண்ட அமைப்பில் வழங்கப்படும்.
XEV 9e என்ன பவர்டிரெய்ன் ஆப்ஷன்களை கொண்டிருக்கும்?
சரியான எலக்ட்ரிக் பவர்டிரெய்ன் விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை என்றாலும் கூட மஹிந்திரா XEV 9e ஐ INGLO கட்டமைப்பு தளத்தில் இதை உருவாக்கும் என்பது ஏற்கனவே தெரிந்த விஷயம். இது 60 kWh முதல் 80 kWh வரையிலான பேட்டரிகளுக்கு இடமளிக்கும் வகையில் இருக்கும். இது 500 கி.மீ வரை கிளைம்டு ரேஞ்சை கொடுக்கலாம்.
இந்த கட்டமப்பு தளம் ரியர் வீல் டிரைவ் (RWD) மற்றும் ஆல்-வீல் டிரைவ் (AWD) செட்டப்களுக்கு ஏற்ப மாற்றியமைக்கப்படலாம். மஹிந்திராவை பொறுத்தவரையில் இது 175 kW வரையிலான ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்யும். 0-80 சதவிகிதம் சார்ஜிங் நேரம் வெறும் 30 நிமிடங்கள் ஆக மட்டுமே இருக்கும்
XEV 9e எவ்வளவு பாதுகாப்பாக இருக்கும்?
INGLO கட்டமைப்பு தளம், 5 ஸ்டார் குளோபல் NCAP க்ராஷ் மதிப்பீட்டை மனதில் வைத்து கட்டமைக்கப்பட்டுள்ளது என்று மஹிந்திரா கூறுகிறது. எவ்வாறாயினும் XEV 9e -ன் க்ராஷ் டெஸ்ட் சோதனை முடிவுகளுக்காக நாம் காத்திருக்க வேண்டும்.
பாதுகாப்பைப் பொறுத்தவரையில் இதில் 6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக), எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம் (ESP) மற்றும் டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (TPMS) ஆகியவை இருக்க வாய்ப்புள்ளது. லேன்-கீப் அசிஸ்ட், ஃபார்வர்ட் கொலிஷன் வார்னிங் மற்றும் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் போன்ற மேம்பட்ட அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) தொழில்நுட்பத்தைப் கொண்டிருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
இதற்கான மாற்று கார்கள் என்ன இருக்கின்றன ?
மஹிந்திரா XEV 9e ஆனது வரவிருக்கும் டாடா ஹாரியர் EV மற்றும் டாடா சஃபாரி EV போன்ற கார்களுக்கு போட்டியாக இருக்கும்.
மஹிந்திரா be 09 விலை பட்டியல் (மாறுபாடுகள்)
அடுத்து வருவதுbe 09 | Rs.45 லட்சம்* |