Facelifted Audi Q7 காருக்கான முன்பதிவுகள் தொடங்கியுள்ளன
- 19 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட Q7 காரின் வடிவமைப்பில் உள்ள மாற்றங்கள் மிகக் குறைவாகவே இருக்கும். கேபினில் எந்த மாற்றங்களையும் எதிர்பார்க்க முடியாது. பழைய மாடலில் இருந்த அதே 345 PS 3-லிட்டர் V6 டர்போ-பெட்ரோல் இன்ஜின் பயன்படுத்தப்படும்.
-
வெளிப்புறத்தில் புதிய கிரில் மற்றும் புதிய 19-இன்ச் அலாய் வீல்கள் ஆகியவை ஸ்டாண்டர்டாக கிடைக்கும்.
-
பழைய மாடலில் உள்ள அதே டேஷ்போர்டு செட்டப் கிடைக்கும். டூயல் டிஜிட்டல் டிஸ்ப்ளேக்கள் உள்ளன.
-
பனோரமிக் சன்ரூஃப், 4-ஜோன் ஏசி மற்றும் ஏடிஏஎஸ் ஆகிய வசதிகள் கிடைக்கும்.
-
பழைய மாடலின் 3-லிட்டர் V7 டர்போ-பெட்ரோல் இன்ஜினை (345 PS/500 Nm) ஃபேஸ்லிப்டட் மாடலும் பயன்படுத்துகிறது.
-
8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் மூலம் சக்தி நான்கு சக்கரங்களுக்கும் அனுப்பப்படுகிறது.
-
விலை ரூ.90 லட்சத்திலிருந்து (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டாவது ஃபேஸ்லிஃப்டைப் பெற ஆடி Q7 தயாராக உள்ளது. இது நவம்பர் 28 அன்று விற்பனைக்கு வெளியிடப்படவுள்ளது. இப்போது ஆடி நிறுவனம் புதிய காருக்கான பிரீ ஆர்டர்கள் தொடங்கியுள்ளன. ரூ. 2 லட்சம் செலுத்தி காரை முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் சத்ரபதி சம்பாஜி நகரில் (முன்பு அவுரங்காபாத்) உள்ள ஆலையில் புதிய எஸ்யூவி -யை அசெம்பிள் செய்யத் தொடங்கியுள்ளது. பழைய காரில் இருந்த அதே 3-லிட்டர் V6 டர்போ-பெட்ரோல் இன்ஜின் மூலம் தொடர்ந்து இயக்கப்படுகிறது. ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட Q7 -ல் இருக்கும் மாற்றங்களை இன்னும் விரிவாகப் பார்ப்போம்:
வடிவமைப்பில் நுட்பமான மாற்றங்கள்
ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட Q7 காரின் வடிவமைப்பில் பெரிதாக எந்த விதமான மாற்றங்களும் இல்லாமல் இருக்கும். வடிவமைப்பில் உள்ள அப்டேட்கள் மிகவும் நுட்பமானவை. இருப்பினும் குரோம் கார்னிஷ் உடன் அப்டேட்டட் கிரில்லின் காரணமாக முன்பக்கம் புதியது போல தோற்றமளிக்கின்றது. புதிய HD Matrix LED ஹெட்லைட்கள், டிஜிட்டல் சிக்னேச்சர் LED DRL -கள் மற்றும் புதிய ஏர் இன்டேக்குகள் உடன் புதிய பம்பரையும் பெறுகிறது.
மற்றபடி Q7 ஃபேஸ்லிஃப்ட்டின் ஒட்டுமொத்த தோற்றத்தில் எந்த மாற்றங்களும் இல்லை. அதே நேரத்தில் பின்புறத்தில் பெரிய வடிவமைப்பு மாற்றங்கள் உள்ளன. டெயில் லைட்ஸ், LED லைட் எலமென்ட் ஆகியவற்றில் சிறிய மாற்றங்கள் இருக்கும். புதிய இந்தியா-ஸ்பெக் Q7 கார் சாகிர் கோல்ட், வைட்டோமோ ப்ளூ, மைத்தோஸ் பிளாக், சாமுராய் கிரே மற்றும் கிளேசியர் ஒயிட் என 5 எக்ஸ்ட்டீரியர் கலர் ஆப்ஷன்களில் கிடைக்கும்:
மேலும் படிக்க: இந்தியாவில் வெளியிடப்பட்டது Mercedes-AMG C 63 S E Performance கார்
கேபின் லேஅவுட்டில் மாற்றமில்லை
புதிய Q7 -ன் கேபினுக்குள் பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லை. மேலும் இது பழைய பதிப்பைப் போலவே தோற்றமளிக்கிறது. ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட Q7 ஆனது சிடார் பிரவுன் மற்றும் சைகா பெய்ஜ் ஆகிய இரண்டு இன்ட்டீரியர் கலர் ஆப்ஷன்களுடன் கிடைக்கும்.
Q7 ஃபேஸ்லிஃப்ட் அதே ட்ரை-ஸ்கிரீன் செட்டப்பை பெறுகிறது. இதில் 10.1-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 12.3-இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே மற்றும் கிளைமேட் கன்ட்ரோல் பேனலுடன் இன்ஃபோடெயின்மென்ட்டுக்கு கீழே மற்றொரு டிஸ்ப்ளே உள்ளது. ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட Q7 ஆனது 19-ஸ்பீக்கர் பேங் & ஓலுஃப்சென் ஆடியோ சிஸ்டம், 4-ஜோன் கிளைமேட் கன்ட்ரோல், பனோரமிக் சன்ரூஃப் மற்றும் அதன் பழைய பதிப்பை போலவே பார்க் அசிஸ்ட் உடன் கூடிய 360 டிகிரி கேமரா போன்ற வசதிகளையும் கொண்டிருக்கும்.
அதே 3-லிட்டர் V6 டர்போ-பெட்ரோல் இன்ஜின் பயன்படுத்தப்படலாம்
ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட Q7 -க்கான வெளிச்செல்லும் மாடலில் இருந்து அதே 3-லிட்டர் V6 டர்போ-பெட்ரோல் இன்ஜினை ஆடி தக்க வைத்துக் கொள்ளும். இந்த இன்ஜின் 345 PS மற்றும் 500 Nm பவர் அவுட்புட்டை கொடுக்கிறது. மேலும் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் மூலம் பவர் 4 சக்கரங்களுக்கும் டெலிவரி செய்யப்படுகிறது.
எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்
2024 ஆடி Q7 காரின் விலை ரூ. 90 லட்சத்தில் இருந்து தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தற்போதைய மாடலின் விலை வரம்பான ரூ.88.66 லட்சம் முதல் ரூ.97.84 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா) விட சற்று அதிகம் ஆகும். புதிய Q7 ஆனது மெர்சிடிஸ்-பென்ஸ் GLE, BMW X5, மற்றும் வோல்வோ XC90 ஆகிய கார்களுக்கு போட்டியாக இருக்கும்.
கார்கள் தொடர்பான லேட்டஸ்ட் அப்டேட்டுகளுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.
மேலும் படிக்க: ஆடி Q7 ஆட்டோமெட்டிக்
0 out of 0 found this helpful