• English
  • Login / Register

இந்தியாவில் வெளியிடப்பட்டது Mercedes-AMG C 63 S E Performance கார்

published on நவ 12, 2024 07:20 pm by dipan

  • 81 Views
  • ஒரு கருத்தை எழுதுக

புதிய AMG C 63 S ஆனது அதன் V8 காரை ஃபார்முலா-1-இன்பயர்டு 2-லிட்டர் 4-சிலிண்டர் இன்ஜின் உடன் வருகிறது. இது உலகின் மிகவும் சக்திவாய்ந்த புரடெக்‌ஷன்-ஸ்பெக் 4 சிலிண்டர் இன்ஜின் ஆகும்.

Mercede-AMG C 63 S E Performance launched in India

  • இது ஆல்-எல்இடி லைட் செட்டப், பெரிய ஃபெண்டர்கள், ஏஎம்ஜி-க்கான கிரில் மற்றும் 20-இன்ச் ஏஎம்ஜி-ஸ்பெக் அலாய் வீல்கள் ஆகியவற்றுடன் வருகிறது.

  • AMG லோகோக்கள், MBUX இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் AMG-க்கான டிஸ்ப்ளேக்களுடன் நாப்பா லெதர் அப்ஹோல்ஸ்டரி இன்ட்டீரியரில் கொடுக்கப்பட்டுள்ளது.

  • 2-லிட்டர் 4-சிலிண்டர் இன்ஜின் மற்றும் ஒரு எலக்ட்ரிக் மோட்டார் மூலம் 680 PS மற்றும் 1,020 Nm மொத்த அவுட்புட் ஆக கிடைக்கிறது.

  • இந்த கார் 9-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் மற்றும் AWD செட்டப் மூலமாக வெறும் 3.4 வினாடிகளில் மணிக்கு 0-100 கிமீ வேகத்தை எட்டும்.

  • இதில் 6.1 kWh பேட்டரி பேக் உள்ளது. இது 13 கி.மீ வரை எலக்ட்ரிக் ரேஞ்சை கொடுக்கிறது.

  • விலை. ரூ.1.95 கோடியில் இருந்து தொடங்குகிறது (அறிமுக எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா).

மெர்சிடிஸ்-ஏஎம்ஜி சி 63 எஸ் இ பெர்ஃபாமன்ஸ் கார் மூலமாக இந்த ஆண்டு அதன் பதினான்காவது அறிமுகத்தை மெர்சிடிஸ்-பென்ஸ் நிறைவு செய்கிறது. இதன் விலை ரூ. 1.95 கோடி (அறிமுக எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா) ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மெர்சிடிஸ் நிறுவனம் இந்த சி-கிளாஸ் செடானை AMG-க்கான வடிவமைப்பு மற்றும் சிறப்பான பெர்ஃபாமன்ஸ் அப்டேட்களுடன் இதை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கிறது. இந்த பெர்ஃபாமன்ஸ் செடானுக்கான முன்பதிவுகள் இன்று தொடங்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் டெலிவரிகள் 2025 -ம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் இருந்து தொடங்கவுள்ளன. இந்த புதிய AMG மாடலின் விவரங்களை இங்கே பார்ப்போம்.

வெளிப்புறம்

புதிய மெர்சிடிஸ்-AMG C 63 S E பெர்ஃபாமன்ஸ் சி-கிளாஸ் வடிவத்தை தக்க வைத்திருக்கிறது. ஆனால் அதன் மிரட்டலான AMG வடிவமைப்புடன் தனித்து நிற்கிறது. இது ஒரு நீண்ட முன்பக்க முனை மற்றும் பரந்த ஃபெண்டர்கள் உள்ளன. இது கம்பீரமான தோற்றத்தை காருக்கு கொடுக்கிறது.

முன்புறத்தில் AMG C 63 S E பெர்ஃபாமன்ஸ் C-கிளாஸ் செடானை போலவே LED DRL -களுடன் LED ஹெட்லைட்கள் உள்ளன. ஒரு பிளாக் AMG பேட்ஜ் மற்ற AMG மாடல்களை போலவே வழக்கமான மெர்சிடிஸ் நட்சத்திரத்தை கொண்டுள்ளது. வெர்டிகல் ஸ்லேட்டுகளுடன் AMG-க்கான கிரில் மற்றும் மிகவும் ஆக்ரோஷமாக வடிவமைக்கப்பட்ட முன்பக்க பம்பரையும் கொண்டுள்ளது. கிரில்லுக்கு பின்னால் இரண்டு எலக்ட்ரிக்கலி கன்ட்ரோல்டு ஏர் டேம் இன்டேக்ஸ் மற்றும் பம்பரில் தேவைக்கேற்ப காற்றோட்டத்தை தேவைக்கேற்ப சரி செய்கிறது.

AMG C 63 S E பெர்ஃபாமன்ஸ் ஸ்போர்ட்டியான பக்கவாட்டு ஓரங்கள் மற்றும் 20-இன்ச் AMG அலாய் வீல்க: உடன் வருகிறது.

பின்புறத்தில் காரில் பிளாக் கலர் டிஃப்பியூசர், ஒவ்வொரு பக்கத்திலும் டூயல் ட்ரெப்சாய்டல் எக்ஸாஸ்ட் டிப்ஸ் மற்றும் பூட் மூடியில் பிளாக் கலர் ஸ்பாய்லர் ஒன்றும் உள்ளது. இருப்பினும் டெயில் லைட்ஸ் வழக்கமான சி-கிளாஸில் உள்ளது போலவே இருக்கும். இடதுபக்க பின்புற ஃபெண்டரில் உள்ள பிளக்-இன் சார்ஜிங் ஃபிளாப் மற்றும் ரெட் ஹைலைட்ஸ் கொண்ட மாடல் பேட்ஜ் ஆகியவை ஸ்டாண்டர்டான சி-கிளாஸிலிருந்து இந்த காரை வேறுபடுத்திக் காட்டுகின்றன.

மேலும் படிக்க: கியாவின் புதிய எஸ்யூவிக்கு சைரோஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது

இன்ட்டீரியர் மற்றும் வசதிகள்

AMG C 63 S E பெர்ஃபாமன்ஸ் ஆனது AMG ஸ்போர்ட்ஸ் இருக்கைகளுக்கான அப்ஹோல்ஸ்டரி ஆப்ஷன்களை கொடுக்கிறது. இதில் நாப்பா லெதர் மற்றும் முன் ஹெட்ரெஸ்ட்களில் AMG லோகோ பொறிக்கப்பட்டுள்ளது. மெர்சிடிஸ் கூடுதலாக AMG பெர்ஃபாமன்ஸ் இருக்கைகளை இதில் கொடுக்கிறது. டிரைவ் மோட்கள் மற்றும் சஸ்பென்ஷன் செட்டப்களுடன் செலக்ட் செய்வதற்காக ரோட்டரி டயல்களுடன் கூடிய ஏஎம்ஜி ஸ்டீயரிங் வீலும் உள்ளது.

ஸ்டாண்டர்டான சி-கிளாஸை போலவே இந்த காரும் 11.9-இன்ச் MBUX டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் AMG மற்றும் ஹைப்ரிட் என்பதை காட்டும் டிஸ்பிளேக்களை கொண்டுள்ளது. 12.3-இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே வெவ்வேறு ஸ்டைல்கள் அல்லது காட்சிகளுடன் கஸ்டமைஸ் செய்து கொள்ளலாம். மேலும் ஆப்ஷனலான ஹெட்-அப் டிஸ்ப்ளே ரேஸ் மற்றும் சூப்பர்ஸ்போர்ட் போன்ற ஏஎம்ஜி-குறிப்பிட்ட மோடுகளை மெர்சிடிஸ் கொடுக்கிறது. வென்டிலேட்டட் சீட்கள், கஸ்டமைஸபிள் ஆம்பியன்ட் லைட்ஸ் மற்றும் 15-ஸ்பீக்கர் பர்மெஸ்டர் ஆடியோ சிஸ்டம் ஆகியவை அடங்கும். பாதுகாப்புக்காக 7 ஏர்பேக்குகள், ஆக்டிவ் பிரேக் அசிஸ்ட் மற்றும் 360 டிகிரி கேமரா போன்ற வசதிகளை கொடுக்கப்பட்டுள்ளன. 

பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள்

புதிய AMG C 63 S E பெர்ஃபாமன்ஸ் அதன் பிரபலமான 4-லிட்டர் V8 இன்ஜினை ஃபார்முலா-1-பெறப்பட்ட 2-லிட்டர் 4-சிலிண்டர் ட்வின்-டர்போ பெட்ரோல் இன்ஜினுக்காக கொடுத்துள்ளது. இது 475 PS அவுட்புட்டை வழங்குகிறது. இது உலகின் மிகவும் பவர்ஃபுல்லான 4-சிலிண்டர் புரடெக்‌ஷன் ஸ்பெக் கார் என்ற சாதனையை படைத்தது. ரியர் ஆக்ஸிலில் 2-ஸ்பீடு எலக்ட்ரிக் மோட்டாருடன் இணைக்கப்பட்ட இந்த பிளக்-இன் ஹைப்ரிட் செட்டப் ஆனது 680 PS மற்றும் 1,020 Nm  அவுட்புட்டை வழங்குகிறது.

எலக்ட்ரிக் மோட்டார் 6.1 kWh பேட்டரி பேக் மூலம் இயக்கப்படுகிறது. இது ஒரு முழு சார்ஜில் 13 கிமீ வரை மட்டுமே வரம்பை வழங்குகிறது.

பவர் 9-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மூலம் ஆல்-வீல் டிரைவ் (AWD) அமைப்பிற்கு மாற்றப்படுகிறது. இது C 63 S ஆனது 3.4 வினாடிகளில் 0-100 கிமீ/மணி வேகத்தை எட்ட அனுமதிக்கிறது. த்ரில்லிங்கை தேடுபவர்களுக்கு காரில் ஒரு டிரிஃப்ட் மோடு உள்ளது மற்றும் மேம்பட்ட செயல்பாட்டுக்காக ரியர்-ஆக்சிலில் ஸ்டீயரிங் உடன் இது வருகிறது.

மேலும் படிக்க: புதிய Mahindra XEV 9e மற்றும் BE 6e இன்டீரியர் விவரங்கள் வெளியாகியுள்ளன

போட்டியாளர்கள்

ஆடி ஆர்எஸ் 5 ஸ்போர்ட்பேக் மற்றும் பிஎம்டபிள்யூ M4 ஆகிய கார்களுக்கு போட்டியாக புதிய மெர்சிடிஸ்-AMG C 63 S E பெர்ஃபாமன்ஸ் இருக்கும்.

கார்கள் தொடர்பான லேட்டஸ்ட் அப்டேட்டுகளுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your கருத்தை

Read Full News

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience