சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

MG Comet EV Blackstorm காரின் முதல் டீசர் வெளியிடப்பட்டுள்ளது

dipan ஆல் பிப்ரவரி 25, 2025 08:35 pm அன்று பப்ளிஷ் செய்யப்பட்டது
92 Views

வழக்கமான மாடலுடன் ஒப்பிடுகையில் ஆல் பிளாக் எக்ஸ்ட்டீரியர், உட்புற தீம் ஆகியவற்றில் மாற்றங்கள் இருக்கலாம். வேறு எந்த மாற்றங்களும் இருக்க வாய்ப்பில்லை.

  • டீஸரில் ஆல் பிளாக் எக்ஸ்ட்டீரியர் உடன் ரெட் ஆக்ஸென்ட்களை பார்க்க முடிகிறது.

  • அலாய் வீல்கள், முன்பக்க பம்பர் மற்றும் ஹூட்டில் உள்ள ‘மோரிஸ் கேரேஜஸ்’ எழுத்துக்களில் ரெட் கலர் ஆக்ஸென்ட்கள் உள்ளன.

  • உட்புற வடிவமைப்பு விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. மற்றபடி இது கார் தயாரிப்பாளரின் மற்ற பிளாக்ஸ்டார்ம் பதிப்புகளைப் போலவே ஆல் பிளாக் தீம் கொடுக்கப்பட்டிருக்கும்.

  • டூயல் 10.25-இன்ச் ஸ்கிரீன்கள் மற்றும் மேனுவல் ஏசி ஆகியவற்றுடன் வழக்கமான மாடலை போலவே இதிலும் வசதிகள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • வழக்கமான காமெட் EV உடன் வழங்கப்படும் அதே 17.3 kWh பேட்டரி பேக்குடன் ரியர்-ஆக்ஸிலில் பொருத்தப்பட்ட மோட்டார் (42 PS/110 Nm) உடன் இணைக்கப்பட்டுள்ளது.

  • வழக்கமான மாடலை விட இது சற்று கூடுதல் விலையில் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்போது வரை எம்ஜி நிறுவனம் எம்ஜி ஹெக்டர், எம்ஜி குளோஸ்டர் மற்றும் எம்ஜி ஆஸ்டர் ஆகிய கார்களுக்கு பிளாக் ஸ்டார்ம் பதிப்பை விற்பனைக்கு கொண்டு வந்தது. அதே போல எம்ஜி காமெட் இவி -க்கும் ஸ்பெஷல் எடிஷன் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்ற செய்தியை முன்பே வெளியிட்டிருந்தோம். அந்த வகையில் MG காமெட் பிளாக்ஸ்டார்ம் பதிப்பின் முதல் டீசர் முதன்முறையாக வெளியிடப்பட்டுள்ளது.

A post shared by Morris Garages India (@mgmotorin)

எம்ஜி இந்தியா நிறுவனம் ஷேர் செய்துள்ள டீசரில் நாம் காணக்கூடிய அனைத்தையும் பார்ப்போம்:

டீசரில் என்ன பார்க்க முடிகிறது ?

டீசரின் அடிப்படையில் MG காமெட் ஆனது ஆல் பிளாக் கலர் எக்ஸ்ட்டீரியர் கலர் தீம் மற்றும் பேட்டை மற்றும் பம்பரின் கீழ் பகுதியில் உள்ள மோரிஸ் காராஜெஸ் பேட்ஜிங்கில் ரெட் ஆக்ஸென்ட்கள் உள்ளன. ஸ்டீல் வீல்கள் பிளாக் கலர் கவர்களுடன் ரெட் ஸ்டார் போன்ற வடிவத்துடன் காணப்படுகின்றன.

டீஸர் கனெக்டட் LED DRL -கள் மற்றும் இல்லுமினேட்டட் MG லோகோவை கொண்டுள்ளது. இவை இரண்டும் வழக்கமான மாடலை போலவே இருக்கும்.

பின்புற வடிவமைப்பு இன்னும் வெளிவரவில்லை என்றாலும், MG காமெட் பிளாக்ஸ்டார்ம் ஆனது காமெட் பேட்ஜிங் உடன் ரெட் எலமென்ட்களை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

இன்ட்டீரியரில் எதிர்பார்க்கப்படும் மாற்றங்கள்

உட்புறத்தின் டீசர் இன்னும் வெளியிடப்படவில்லை என்றாலும் கூட ஆனால் மற்ற எம்ஜி கார்களின் பிளாக்ஸ்டார்ம் பதிப்புகள் சலுகையில் உள்ள மாற்றங்களின்படி காமெட் பிளாக் ஸ்டார்ம் பிளாக் சீட் செட்டப் உடன் ஆல் பிளாக் இன்ட்டீரியர் தீம் உடன் வரும். இருப்பினும் ஒட்டுமொத்த கேபின் அமைப்பு வழக்கமான காமெட் போலவே இருக்கும்.

மேலும் படிக்க: பாருங்கள்: MG Windsor -ல் எத்தனை ஸ்டோரேஜ் இடங்கள் உள்ளன?

வசதிகள் மற்றும் பாதுகாப்பு

காமெட் EV -யின் ஆல் பிளாக் எடிஷன் 10.25-இன்ச் டச் ஸ்கிரீன், 10.25-இன்ச் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் வழக்கமான காமெட் -ல் இருந்து மேனுவல் ஏசி போன்ற வசதிகளை பெறும். இது இரண்டு ஸ்பீக்கர்கள், எலக்ட்ரிக்கலி ஃபோல்டபிள் ORVM -கள் (வெளிப்புற ரியர்வியூ மிரரஸ்) மற்றும் கீலெஸ் என்ட்ரி ஆகியவற்றுடன் பொருத்தப்பட்டிருக்கலாம்.

இரண்டு ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக), EBD உடன் ABS, எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), ஹில்-ஹோல்ட் அசிஸ்ட், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS) மற்றும் சென்சார்கள் கொண்ட பின்புற பார்க்கிங் கேமரா உள்ளிட்ட வசதிகளுடன் பாதுகாப்புத் தொகுப்பு ஒரே மாதிரியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்ஜினில் எந்த மாற்றங்கள் இருக்காது

இந்த ஸ்பெஷல் எடிஷனில் இயந்திர ரீதியாக எந்த மாற்றங்களும் இருக்காது. இதில் 17.3 kWh பேட்டரி பேக் பொருத்தப்பட்டிருக்கும். இது 42 PS மற்றும் 110 Nm அவுட்புட்டை கொடுக்கும் ரியர்-ஆக்லில் பொருத்தப்பட்ட (RWD) எலக்ட்ரிக் மோட்டாரை கொண்டுள்ளது. இது 230 கி.மீ வரை ARAI கிளைம்டு ரேஞ்சை கொண்டுள்ளது.

விலை மற்றும் போட்டியாளர்கள்

எம்ஜி காமெட் பிளாக்ஸ்டார்ம் எடிஷன் வழக்கமான மாடலை விட சற்று கூடுதல் விலையில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை ரூ.7 லட்சத்தில் இருந்து ரூ.9.84 லட்சம் ஆக இருக்கும். இருப்பினும் காமெட் உடன் MG வழங்கும் பேட்டரி சந்தா திட்டத்தை நீங்கள் தேர்வுசெய்தால் விலை இன்னும் குறைவாக ரூ.5 லட்சம் முதல் ரூ.7.66 லட்சம் வரை இருக்கும். இருப்பினும் அத்தகைய சந்தா திட்டத்தில், பேட்டரி சந்தா செலவாக எம்ஜி -க்கு ஒரு கி.மீ.க்கு ரூ.2.5 செலுத்த வேண்டும். MG காமெட் EV -க்கு இந்தியாவில் நேரடிப் போட்டி இல்லை. ஆனால் டாடா டியாகோ EV மற்றும் சிட்ரோன் eC3 ஆகியவற்றுக்கு விலை குறைவான மாற்றாக இருக்கும்.

அனைத்து விலை விவரங்களும் எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா -வுக்கானவை

ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து லேட்டஸ்ட் அப்டேட்டுகளுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.

Share via

Write your Comment on M g காமெட் இவி

மேலும் ஆராயுங்கள் on எம்ஜி காமெட் இவி

எம்ஜி காமெட் இவி

4.3219 மதிப்பீடுகள்இந்த காரை ரேட்டிங் செய்ய
ட்ரான்ஸ்மிஷன்ஆட்டோமெட்டிக்
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

Enable notifications to stay updated with exclusive offers, car news, and more from CarDekho!

டிரெண்டிங் எலக்ட்ரிக் கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை