சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

விரைவில் MG Comet EV பிளாக்ஸ்டார்ம் பதிப்பு வெளியாகவுள்ளது. என்ன எதிர்பார்க்கலாம் ?

shreyash ஆல் பிப்ரவரி 04, 2025 07:48 pm அன்று பப்ளிஷ் செய்யப்பட்டது
59 Views

இந்தியாவில் எம்ஜி -யின் வரிசையில் எம்ஜி க்ளோஸ்டர், எம்ஜி ஹெக்டர் மற்றும் எம்ஜி ஆஸ்டருக்கு பிறகு பிளாக்ஸ்டார்ம் பதிப்பை பெறும் நான்காவது மாடலாக எம்ஜி காமெட் இவி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • காமெட் EV பிளாக்ஸ்டார்ம் ரெட் கலர் ஹைலைட்ஸ் உடன் ஸ்டார்ரி பிளாக் எக்ஸ்ட்டீரியர் ஷேடில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • இது ஆல் பிளாக் சீட் அப்ஹோல்ஸ்டரி செட்டப் உடன் ரெட் கலர் டச்களுடன் ஆல் பிளாக் இன்ட்டீரியர் தீமை கொண்டிருக்கும்.

  • டூயல் 10.25-இன்ச் ஸ்கிரீன்கள் மற்றும் மேனுவல் ஏசி உட்பட வழக்கமான காமெட் -ல் உள்ள அதே வசதிகள் இருக்கும்.

  • பாதுகாப்புக்காக டூயல் முன் ஏர்பேக்குகள், பின்புற பார்க்கிங் கேமரா மற்றும் TPMS ஆகியவை அடங்கும்.

  • அதே 17.3 kWh பேட்டரி பேக்கை பயன்படுத்த வாய்ப்புள்ளது. இது 230 கி.மீ ரேஞ்சை வழங்குகிறது.

விரைவில் சிறிய 3-டோர் எலக்ட்ரிக் ஹேட்ச்பேக் எம்ஜி காமெட் இவி விரைவில் பிளாக்ஸ்டார்ம் எடிஷன் கிளப்பில் சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. காமெட் EV இந்த பதிப்பில் வரும் அதன் வரிசையில் நான்காவது MG மாடலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பதிப்பைப் பெறும் முதல் ஆல் எலக்ட்ரிக் MG ஆகவும் இது இருக்கும். தற்போதைய பிளாக்ஸ்டார்ம் பதிப்புகளை போலவே காமெட் பிளாக்ஸ்டார்ம் ரெட் ஹைலைட்ஸ் கொண்ட ஆல் பிளாக் எக்ஸ்ட்டீரியர் மற்றும் இன்ட்டீரியர் தீமை கொண்டிருக்கும். காமெட் பிளாக்ஸ்டார்ம் வெர்ஷனில் இருந்து எதிர்பார்க்கப்படும் விஷயங்கள் இங்கே.

ஆல் பிளாக் வெளிப்புறம்

ஹெக்டர், ஆஸ்டர் மற்றும் க்ளோஸ்டர் ஆகியவற்றின் பிளாக்ஸ்டார்ம் பதிப்புகளில் காணப்படுவது போல் ORVM -கள், கிரில் மற்றும் வீல் போன்ற பிளாக்-அவுட் வடிவமைப்பு எலமென்ட்களுடன் காமெட் பிளாக்ஸ்டார்ம் முழுக்க முழுக்க கருப்பு நிறத்தில் வெளிப்புறத்தைக் கொண்டிருக்கும். காமெட் ஏற்கனவே ஸ்டார்ரி பிளாக் வெளிப்புற ஷேடில் கிடைக்கிறது. இருப்பினும் பிளாக்ஸ்டார்ம் பதிப்பு பம்பர், சக்கரங்கள் மற்றும் டெயில்கேட் ஆகியவற்றில் ரெட் ஹைலைட்ஸ் உடன் இது வேறுபடுத்தி காட்டப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கேபின் அப்டேட்கள்

எம்ஜி காமெட் EV -ன் கேபின் உள்ளே இருந்து எப்படி இருக்கும் என்பதை நாம் இன்னும் தெரிய வரவில்லை. இருப்பினும் ஆஸ்டர் மற்றும் ஹெக்டரின் பிளாக்ஸ்டார்ம் பதிப்புகள் முழுக்க முழுக்க கருப்பு நிறத்தில் டாஷ்போர்டு மற்றும் கருப்பு நிறத்தில் லெதரெட் சீட் அப்ஹோல்ஸ்டரி மற்றும் ரெட் ஹைலைட்ஸ் மற்றும் ஸ்டிச் ஆகியவற்றை கொண்டிருக்கலாம். காமெட் பிளாக்ஸ்டார்ம் அதே தொகுப்பைப் பின்பற்ற வாய்ப்புள்ளது.

காமெட் பிளாக்ஸ்டார்ம் காரில் உள்ள வசதிகள் அதன் வழக்கமான பதிப்பைப் போலவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காமெட் EV -ன் வழக்கமான பதிப்பு வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளேயுடன் கூடிய 10.25-இன்ச் டச் ஸ்கிரீன், ஒரே அளவிலான டிரைவர்ஸ் டிஸ்ப்ளே மற்றும் மேனுவல் ஏசி போன்ற வசதிகளுடன் வருகிறது. இதன் பாதுகாப்புக்காக டூயல் முன் ஏர்பேக்குகள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS) மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள் உள்ளன.

இன்ஜின் ரீதியாகவும் மாற்றங்கள் இருக்காது

காமெட் EV பிளாக்ஸ்டார்ம் பதிப்பு அதன் வழக்கமான காரிலுள்ள அதே பேட்டரி பேக் ஆப்ஷன்களை பயன்படுத்தும். விவரங்கள் இங்கே:

பேட்டரி பேக்

17.3 kWh

கிளைம்டு ரேஞ்ச் (ARAI)

230 கி.மீ

பவர்

42 PS

டார்க்

110 Nm

விலை மற்றும் போட்டியாளர்கள்

MG காமெட் EV பிளாக்ஸ்டார்ம் ஆனது அதன் வழக்கமான விலையை விட சற்று கூடுதல் விலையில் வரலாம். இதன் விலை ரூ.7 லட்சம் முதல் ரூ.9.65 லட்சம் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. MG காமெட் EV, டாடா டியாகோ EV மற்றும் சிட்ரோன் eC3 -க்கு குறைவான விலை கொண்ட மாற்றாக இருக்கும்.

ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகள் வேண்டுமா ? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.

Share via

Write your Comment on M g காமெட் இவி

மேலும் ஆராயுங்கள் on எம்ஜி காமெட் இவி

எம்ஜி காமெட் இவி

4.3219 மதிப்பீடுகள்இந்த காரை ரேட்டிங் செய்ய
ட்ரான்ஸ்மிஷன்ஆட்டோமெட்டிக்
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

Enable notifications to stay updated with exclusive offers, car news, and more from CarDekho!

டிரெண்டிங் எலக்ட்ரிக் கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை