• English
  • Login / Register

மாருதி சுசுகி இக்னிஸ்: உள்ளும் புறமும்

published on பிப்ரவரி 09, 2016 05:31 pm by nabeel for மாருதி இக்னிஸ்

  • 11 Views
  • ஒரு கருத்தை எழுதுக

டில்லியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆட்டோ எக்ஸ்போவில் மாருதி நிறுவனத்திற்கு எக்கச்சக்கமான பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. இத்தகைய வெற்றிக்கு முக்கிய காரணம், மாருதியின் சமீபத்திய சப்-காம்பாக்ட் SUV பிரிவில் உருவாக்கப்பட்டுள்ள விட்டாரா பிரேஸ்ஸா. கண்காட்சியின் முதல் பாதியில் விட்டாரா பிரேஸ்ஸாவின் புகழை அனைவரும் பாடினர், ஆனால், இரண்டாவது பாதியில் விட்டாராவின் இடத்தை இக்னிஸ் கான்செப்ட் கார் பிடித்துக் கொண்டது. இக்னிஸ் கார், மாருதி நிறுவனத்தின் நம்பகத்தன்மை மற்றும் நவீன ஹாட்ச்பேக் கார்களின் நன்மைகளை ஒருசேரப் பெற்றுள்ள மைக்ரோ SUV -யாகத் திகழ்கிறது. இந்திய வாகன சந்தையைக் கவரும் விதத்தில் இந்த காரில் இடம்பெற்றுள்ள சிறப்பம்சங்களைப் பற்றிய விவரங்களை மேலும் வாசித்து, நீங்கள் தெரிந்து கொள்ளலாம். 

வெளிப்புறத் தோற்றம்

இக்னிஸ் காரின் பிரம்மாண்டமான தோற்றத்தைப் பார்த்த பார்வையாளர்கள் அனைவரும் பிரமிப்புடன் நின்றுவிட்டனர். கம்பீரமான உயரம் மற்றும் ஆஜானுபாகுவான தோற்றம் என்ற இரண்டு பிரமிப்பூட்டும் அம்சங்களையும் பெற்ற இக்னிஸ் நிச்சயமாக அனைவரையும் வசீகரிக்கும் தோற்றத்தில் உள்ளது. அது மட்டுமல்ல, மாருதி நிறுவனம் இதன் நேர்த்தியை மேம்படுத்த பானேட் மற்றும் C-பில்லர் பகுதிகளில் மீது ஏர் ஸ்கூப்களைப் பொருத்தி, இந்த காருக்கு ஸ்போர்டியான தோற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. நிமிர்ந்த உயரமான தோற்றம் மற்றும் காரின் மேல் உள்ள ரூஃப்-ரெயில்ஸ் ஆகியவை SUV போன்ற தோற்றத்தை இந்த மைக்ரோ-SUV காருக்குப் பெற்றுத் தருகிறது. மேலும், புதிதாக வடிவமைக்கப்பட்ட ஹெட் லாம்ப் க்லஸ்டரில், கவர்ச்சிகரமான U வடிவ DRL விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. வித்தியாசமான இந்த க்லஸ்டரை, மக்கள் விரும்புவர் அல்லது வெறுப்பர். இந்த இரண்டு பிரிவில், நாம் முதல் பிரிவில் வருகிறோம். இக்னிஸ் மாடலின் பின்புறத்தில், 2 ஸ்பாய்லர்கள் இடம்பெற்றுள்ளன. பின்புற விண்ட்ஸ்கிரீனுக்கு மேல் உள்ள ஸ்பாய்லர், இந்த காரின் ஸ்போர்டி தோற்றத்திற்கு மேலும் வலுவூட்டுகிறது. அதே நேரத்தில், விண்ட்ஸ்கிரீனுக்கு கீழே பொருத்தப்பட்டுள்ள ஸ்பாய்லர், இந்த காரின் கம்பீரத்தை மேலும் உயர்த்திக் காட்டுகிறது.  

உட்புறத் தோற்றம்

இக்னிஸ் காரின் உட்புறத் தோற்றம் புத்துணர்ச்சி தரும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது. வழக்கமாக மாருதி கார்களில் உள்ள உட்புறத் தோற்ற அமைப்பை உடைத்தெறிந்து, டாஷ்போர்டின் மேல்-மையத்தில் அலங்காரமான டச் ஸ்கிரீன் அமைப்பு பொருத்தப்பட்டு வருகிறது. புதிய லேஅவுட்டில், AC ஸ்விட்ச் மற்றும் பிற கட்டுப்பட்டுக் கருவிகளும் இடம்பெற்றுள்ளன. மாருதி நிறுவனத்தினர், கிளைமேட் கண்ட்ரோல் டிஸ்ப்ளே அமைப்பிலும் புதுமையை புகுத்தியுள்ளனர். ஏனெனில், இந்தியாவிலேயே முதல் முறையாக இந்த டிஸ்ப்ளே அமைப்பு கேப்ஸ்யூல் வடிவத்தில் வருகிறது. ஆடியோ மற்றும் அழைப்புகளுக்கான கட்டுப்பாடுகளை தன்னகத்தே கொண்ட ஸ்டியரிங் வீலும் அசத்தலாக உள்ளது. மத்தியில் செவ்வக வடிவில் உள்ள AC துளைகள், இன்ஃபோடைன்மெண்ட் ஸ்கிரீனின் வடிவத்துடன் அழகாக பொருந்தி உள்ளன. அதே சமயம், ஓரங்களில் உள்ள AC துளைகளை வட்ட வடிவத்தில் அமைத்து, காரின் உட்புறத்தில் இடம்பெறும் ஏனைய வட்ட வடிவத்தில் உள்ள கருவிகளுடன் சரியாகப் பொருந்தும் விதத்தில் நேர்த்தியாக வடிவமைத்துள்ளனர். மொத்தத்தில், இந்த காரை வடிவமைக்க ஏராளமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவை அனைத்தும், இந்த காரின் தோற்றத்தில் அழகாக பிரதிபலிக்கின்றன. 

இஞ்ஜின்

இக்னிஸ் கார் இந்தியாவில் வெளிவரும்போது, 74 bhp சக்தி மற்றும் 190 Nm டார்க்கையும் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட 1.3 லிட்டர் மல்டி ஜெட் டீசல் இஞ்ஜின் பொருத்தப்பட்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது மட்டுமல்ல, காஸோலின் ரசிகர்களையும் குதூகலப் படுத்தும் விதத்தில், மாருதி நிறுவனம் இக்னிஸ் காரில் 1.2 லிட்டர் VTVT இஞ்ஜின் பொருத்தியுள்ளது. இதன் பெட்ரோல் வெர்ஷனில் மட்டும் கூடுதல் ஆப்ஷனாக CVT ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் இணைக்கப்படும். ஆனால், மற்ற அனைத்து இஞ்ஜின்களும் 5 ஸ்பீட் மேனுவல் ட்ரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்படும்.  
பிரேஸ்ஸா மற்றும் இக்னிஸ் கார்களின் அறிமுகம் மிக நெருங்கிக் கொண்டிருப்பதால், மாருதி நிறுவனம் தனது டீலர்ஷிப் ஷோரூம்களில் உள்ள தளங்களை வலுப்படுத்த வேண்டும், ஏனெனில், இந்த வசீகரமான கார்கள் அறிமுகமானதும், இப்பகுதிகளில் எக்கச்சக்கக் கூட்டம் அலை மோதப் போவது உறுதி!

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment on Maruti இக்னிஸ்

Read Full News

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending ஹேட்ச்பேக் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
  • க்யா syros
    க்யா syros
    Rs.9 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: மார, 2025
  • பிஒய்டி seagull
    பிஒய்டி seagull
    Rs.10 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: ஜனவ, 2025
  • எம்ஜி 3
    எம்ஜி 3
    Rs.6 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: பிபரவரி, 2025
  • நிசான் லீஃப்
    நிசான் லீஃப்
    Rs.30 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: பிபரவரி, 2025
  • மாருதி எக்ஸ்எல் 5
    மாருதி எக்ஸ்எல் 5
    Rs.5 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: செப, 2025
×
We need your சிட்டி to customize your experience