மாருதி ஜிம்னி vs மஹிந்திரா தார் பெட்ரோல் - எரிபொருள் சிக்கன புள்ளிவிவரங்கள் ஒப்பீடு

published on மே 24, 2023 06:37 pm by tarun for மாருதி ஜிம்னி

  • 21 Views
  • ஒரு கருத்தை எழுதுக

ஜிம்னி நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜினை பெறுகிறது, அதே சமயம் தார் இதை விட பெரிய மற்றும் டர்போ-பெட்ரோல் யூனிட்டை பெறுகிறது.

Maruti Jimny Vs Mahindra Thar

மாருதி ஜிம்னி கூடிய விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இது நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட, 5-கதவு, சப்காம்பாக்ட் லைஃப்ஸ்டைல் எஸ்யூவி. ஆட்டோ எக்ஸ்போ 2023 -வில் இது அறிமுகமானது முதல்  ஏற்கனவே 30,000 க்கும் மேற்பட்ட முன்பதிவுகள் இந்தக் காருக்கு கிடைத்துள்ளன. மஹிந்திரா தார் விரும்பிகளுக்கு  நேரடி போட்டியாளராக பெட்ரோல்-ஆப்ஷன் மட்டும் கொண்டதாக வரவிருக்கும் இந்தக் கார் ,  பெட்ரோல் மற்றும் டீசல் பவர் ட்ரெய்ன்களின் தேர்வு மற்றும் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்களுடன் வழங்கப்படுகிறது.

அவற்றின் அம்சங்கள் மற்றும் அனைத்து விவரக்குறிப்புகளையும் நாங்கள் ஒப்பிட்டுப் பார்த்தாலும், அவற்றின் பெட்ரோல் 4X4 எடிஷன்களுக்கான எரிபொருள் சிக்கன திறன் புள்ளிவிவரங்களுக்கு இடையே விரைவான ஒப்பீடு இதோ:


விவரக்குறிப்பு


ஜிம்னி


தார்


இன்ஜின்


1.5 லிட்டர் நேச்சுரல் ஆஸ்பிரேட்டட் பெட்ரோல்


2-லிட்டர் டர்போ-பெட்ரோல்


ஆற்றல்

105PS

152PS

Torque
டார்க்

134Nm

Up to 320Nm


டிரான்ஸ்மிஷன்


5-வேக MT/  4-வேக AT


6-வேக MT/  6-வேக AT


எரிபொருள் சிக்கனம்


16.94கிமீ/லி / 16.39கிமீ/லி (உரிமை கோரப்பட்டது)


12.4கிமீ/லி (உரிமை கோரப்பட்டது) / 10.67கிமீ/லி* (சோதனை செய்யப்பட்டது)

குறிப்பு: தார் பெட்ரோல் ஆட்டோமேட்டிக்கின் ARAI உரிமைகோரல் எரிபொருள் சிக்கனம் கிடைக்காது , எனவே எங்கள் சாலை சோதனைகளில் கிடைத்த புள்ளிவிவரங்களைப் பயன்படுத்தியிருக்கிறோம்.

Maruti Jimny

டேக் அவேஸ்:  

  • ஜிம்னியை விட 47PS மற்றும் 186Nm அதிகமான ஆற்றலை உருவாக்குவதால், தார் மிகவும் சக்திவாய்ந்த இன்ஜினைப் பெறுகிறது. இது சுமார் 50 சதவீதம் அதிக ஆற்றல் மற்றும் 100 சதவீதம் அதிக டார்க்கை குறிக்கிறது. இது மாருதி ஜிம்னி போல் சிக்கனமானது அல்ல என்பதில் ஆச்சரியமில்லை.

  • ஜிம்னி பெட்ரோல்-MT கிட்டத்தட்ட 17 கிமீ/லிக்கு உரிமை கோருகிறது, இது தார் கூறும் பெட்ரோல்-MT செயல்திறனை விட 3.5 கிமீ/லி அதிகம். அதன் பழைய 4-ஸ்பீடு ஆட்டோமேட்டிக்  சற்று குறைவான செயல்திறன் கொண்டது, இன்னும் 16கிமீ/லி க்கு மேல் இருக்கும் என உறுதியளிக்கிறது.

Maruti Jimny Vs Mahindra Thar

  • எங்கள் சாலை சோதனைகளில், தார் பெட்ரோல் ஆட்டோமேட்டிக் சராசரியாக 10.67 கிமீ/லி வழங்கியது. ARAI புள்ளிவிவரத்தின்படி, ஜிம்னியின் ஆட்டோமேட்டிக் ஆப்ஷன் இங்கு கணிசமாக சிக்கனமானது. இருப்பினும், நடைமுறையில், மாருதி இன்னும் சிக்கனமாக இருப்பதால் இடைவெளி குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

மேலும் படிக்கவும்: 5-கதவு மாருதி ஜிம்னி மற்றும் மஹிந்திரா தார் கார்களுக்கு இடையிலான 7 முக்கிய வேறுபாடுகள் இதோ 

4WD ஸ்டாண்டர்டு மாடல் மாருதி ஜிம்னியின் விலை ரூ.10 லட்சத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம் (எக்ஸ்-ஷோரூம்) தாரைப் பொறுத்தவரை, இதன் விலை ரூ.9.99 லட்சத்தில் இருந்து தொடங்கும், 4WD வேரியன்ட்களில் ரூ.13.87 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம் விலை) விலை தொடங்குகிறது. பிந்தைய 2WD கார் வேரியன்ட்கள் ஜிம்னியின் விலைகளுடன் பொருந்தலாம்.

மேலும் படிக்கவும்: மஹிந்திரா தார் டீசல்

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment மீது மாருதி ஜிம்னி

Read Full News

explore similar கார்கள்

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trendingஎஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience