அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்னரே டீலர்ஷிப்புகளுக்கு வந்தடைந்த மாருதி ஜிம்னி
SUV -இன் லைஃப்ஸ்டைல் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மற்றும் நான்கு-சக்கர டிரைவ் அமைப்பை ஸ்டாண்டர்டாகப் பெறுகிறது.
-
ஆட்டோ எக்ஸ்போ 2023 இல் ஐந்து கதவுகளைக் கொண்ட ஜிம்னி வெளிவந்தது, அப்போதிலிருந்தே புக்கிங்குகள் தொடங்கிவிட்டன.
-
அது 4WD உடன்105PS மற்றும் 134Nm -ஐ உருவாக்கும் 1.5 லிட்டர் இன்ஜினை ஸ்டாண்டர்டாக கொண்டது
-
ஒன்பது இன்ச் டச் ஸ்கிரீன் டிஸ்பிளே, குரூஸ் கண்ட்ரோல் மற்றும் ஆட்டோமெட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் போன்ற அம்சங்களை வழங்குகிறது.
-
ஐந்து கதவு கட்டமைப்பு நடைமுறைக்கு ஏற்றதாக உள்ளது. அதே நேரத்தில் நான்கு-இருக்கை கார் இன்னமும் விற்பனைக்கு வருகிறது.
-
விலை ரூ.10 இலட்சமாக (எக்ஸ் ஷோ ரூம்) நிர்ணயிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐந்து கதவைக் கொண்ட மாருதி ஜிம்னி அதன் உலகளாவிய அறிமுகத்தை ஆட்டோ எக்ஸ்போ 2023 ல் கண்டது. ஆனால் நிறுவனத்திற்கு வெளியே எவராலும் இன்னும் அது பயன்படுத்த அனுமதிக்கப்படவில்லை. SUV அறிமுகம் ஆனவுடனேயே டெஸ்ட் டிரைவ்கள் தொடங்க உள்ளன, ஜிம்னி நாடு முழுவதும் உள்ள சில டீலர்ஷிப்களை அடைந்துவிட்டது, அதைப் சோதித்துப் பார்ப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.
பவர்டிரெயின்
ஐந்து கதவுகளக் கொண்ட ஜிம்னி, 105PS மற்றும் 134Nm ஆற்றலை உருவாக்கும் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜினைப் பெறுகிறது. இந்த யூனிட் ஐந்து வேக மேனுவல் உடனோ அல்லது நான்கு வேக ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷனுடனோ இணைக்கப்பட்டுள்ளது அதன் முக்கிய போட்டியாளரைப் போல அல்லாமல், ஜிம்னி நான்கு-சக்கர டிரைவ் அமைப்பை நிலையானதாகப் பெறுகிறது. இந்திய சந்தையைத் தவிர்த்து பிறவற்றுக்காக SUV-ன் எலக்ட்ரிக் பதிப்பையும் கார் உற்பத்தியாளர் உருவாக்கியுள்ளார்.
அம்சங்கள் மற்றும் பாதுகாப்பு
இந்த ஆஃப்-ரோடர் காரில் ஸ்டாண்டர்டாக வழங்கப்படும் பல அம்சங்கள் நிறைந்திருக்கின்றன. வயர்லெஸ் ஆன்டிராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே உடன் ஒன்பது இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃப் டிஸ்பிளே, ஆட்டோமெட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், ஆட்டோ LED ஹெட்லேம்புகள் மற்றும் குரூஸ் கன்ட்ரோல் ஆகியவற்றை இது பெறுகிறது.
மேலும் படிக்க: தலைமுறைகள் தாண்டிய மாருதி ஜிம்னியின் பரிணாமம்
ஆன்போர்டு பயணிகளின் பாதுகாப்பைப் உறுதிப்படுத்த, ஆறு ஏர்பேக்குகள், EBD உடன் கூடிய ABS ஹில்-ஹோல்டு அசிஸ்ட், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம் (ESP), பிரேக் அசிஸ்ட் மற்றும் பின்புற கேமரா ஆகியவற்றை ஸ்டாண்டர்டு பாதுகாப்பு அம்சங்களாக ஜிம்னி வழங்குகிறது.
விலைகள் மற்றும் போட்டி கார்கள்
மாருதி , ஜிம்னியின் விலையை ரூ.10 இலட்சம் (எக்ஸ்ஷோ ரூம்) முதல் நிர்ணயிக்கலாம், இது அதன் போட்டியாளர்களான மஹிந்திரா தார் மற்றும் ஃபோர்ஸ் குர்கா ஆகியவற்றுக்கு எதிராக போட்டியிடும் விலை வரம்பில் வைக்கும்.