Maruti Fronx கார் 10 மாதங்களுக்குள் 1 லட்சம் விற்பனை என்ற மைல்கல்லை எட்டியுள்ளது
published on ஜனவரி 29, 2024 01:52 pm by sonny for மாருதி fronx
- 65 Views
- ஒரு கருத்தை எழ ுதுக
விற்பனையில் உள்ள நான்கு ஃபிரான்க்ஸ் யூனிட்களில் ஒன்று ஒரு ஆட்டோமெட்டிக் வேரியன்ட் ஆகும், இன்ஜினை பொறுத்து 5-ஸ்பீடு AMT மற்றும் 6-ஸ்பீடு AT ஆப்ஷன் கிடைக்கும்.
மாருதி ஃப்ரான்க்ஸ் ஏப்ரல் 2023 -ன் பிற்பகுதியில் சந்தையில் நுழைவதற்கு முன்பே ஜனவரி மாதம் ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் உலகளவில் அறிமுகமானது. ஒன்பது மாதங்களில், இது ஏற்கனவே 1 லட்சம் விற்பனை மைல்கல்லைக் கடந்துள்ளது. ஃபிரான்க்ஸ் காரானது பலேனோ -வின் அடிப்படையிலான பிரீமியம் ஹேட்ச்பேக் ஆகும். மேலும் இதில் காம்பாக்ட் எஸ்யூவி -யான கிராண்ட் விட்டாரா -வில் இருந்தும் ஸ்டைலிங்கிற்கான குறிப்புகள் பெறப்பட்டுள்ளன. இது மாருதி நெக்ஸா வரிசையில் உள்ள அந்த இரண்டு மாடல்களுக்கு இடையில் இது விற்பனையில் உள்ளது.
மாருதியின் புதிய மாடல் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் இங்கே.
ஃபிரான்க்ஸ் அம்சங்கள்
மாருதி ஃப்ரான்க்ஸ் சுற்றிலும் LED லைட்ஸ், டூயல்-டோன் கேபின் மற்றும் பிரீமியம் அம்சங்களுடன் வருகிறது. இது வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளேயுடன் கூடிய 9 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே, வயர்லெஸ் சார்ஜர் மற்றும் 360 டிகிரி வியூ கேமரா ஆகியவற்றை பெறுகிறது. ஆட்டோ ஏசி பின்புற வென்ட்கள், க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் கனெக்டட் கார் டெக்னாலஜி ஆகிய வசதிகள் கிடைக்கும்.
தொடர்புடையது: மாருதி பலேனோ vs மாருதி ஃப்ரான்க்ஸ்
ஃப்ரான்க்ஸ் இன்ஜின்கள் மற்றும் டிரான்ஸ்மிஷன்கள்
ஃபிரான்க்ஸ் மாருதி நெக்ஸா மாடல்களில் இரண்டு இன்ஜின் ஆப்ஷன்கள் கிடைக்கும்: 1-லிட்டர் டர்போ-பெட்ரோல் (100 PS/ 148 Nm) மற்றும் 1.2-லிட்டர் பெட்ரோல் (90 PS/ 113 Nm). அவை இரண்டும் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளன: முதலாவது 5-ஸ்பீடு AMT ஆப்ஷனை பெறுகிறது, மற்றொன்று பேடில் ஷிஃப்டர்களுடன் 6-ஸ்பீடு AT ஆப்ஷனை பெறுகிறது. 1.2 லிட்டர் பெட்ரோல் கூடுதலான மைலேஜ் கொடுப்பதற்காக CNG ஆப்ஷனையும் பெறுகிறது.
ஃபிரான்க்ஸ் காரின் விற்பனையில் 24 சதவீத ஆட்டோமெட்டிக் வேரியன்ட்கள் பங்கு வகிக்கின்றன என்ற விவரத்தையும் மாருதி வெளியிட்டுள்ளது.
விலை மற்றும் போட்டியாளர்கள்
மாருதி சுஸூகி ஃபிரான்க்ஸ் தற்போது ரூ.7.46 லட்சம் முதல் ரூ.13.13 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) வரை விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு நேரடி போட்டியாளர்கள் இல்லை ஆனால் டாடா பன்ச், ரெனால்ட் கைகர் போன்ற பிரீமியம் ஹேட்ச்பேக்குகளுக்கும், நிஸான் மேக்னைட் போன்ற சப் காம்பாக்ட் எஸ்யூவி -களுக்கும் மாற்றாக இருக்கிறது.
மேலும் படிக்க: ஃபிரான்க்ஸ் AMT
0 out of 0 found this helpful