• English
  • Login / Register

மாருதி பிரெஸ்ஸா கார்களில் மீண்டும் மைல்ட் ஹைப்ரிட் டெக்னாலஜி… ஆனால் ஹையர் வேரியன்ட்களுடன் மட்டுமே கிடைக்கும்

published on ஜனவரி 23, 2024 01:49 pm by rohit for மாருதி brezza

  • 124 Views
  • ஒரு கருத்தை எழுதுக

மைல்ட்-ஹைப்ரிட் தொழில்நுட்பத்தை கொண்ட எஸ்யூவி -யின் பெட்ரோல்-MT வேரியன்ட்களின் மைலேஜ் லிட்டருக்கு 17.38 கிமீ முதல் 19.89 கிமீ வரை உள்ளது.

Maruti Brezza

  • மைல்ட்-ஹைப்ரிட் தொழில்நுட்பமானது 2023 ஆம் ஆண்டின் மத்தியில் இந்த எஸ்யூவி -யின் பவர்டிரெய்ன் ஆப்ஷனில் இருந்து விலக்கப்பட்டது.

  • மாருதி தற்போது எஸ்யூவி -யின் ஹையர்-ஸ்பெக் ZXi மற்றும் ZXi+ MT வேரியன்ட்களில் தொழில்நுட்பத்தை மீண்டும் வழங்கவுள்ளது.

  • லோயர்-ஸ்பெக் LXi மற்றும் VXi MT வேரியன்ட்களில் இன்னும் மைல்டு-ஹைபிரிட் தொழில்நுட்பம் கிடைக்கவில்லை.

  • CNG வேரியன்ட்களின் கிளைம்டு மைலேஜ் 25.51 km/kg என்ற அளவில் மாற்றமில்லாமல் உள்ளது.

  • பிரெஸ்ஸா 5-ஸ்பீடு MT மற்றும் 6-ஸ்பீடு AT ஆப்ஷன்களுடன் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜினை பெறுகிறது.

  • எஸ்யூவி -யின் விலை ரூ.8.29 லட்சம் முதல் ரூ.14.14 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) உள்ளது.

2023 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் மாருதி பிரெஸ்ஸா -வின் மேனுவல்-பவர்டிரெய்ன் செட்டப்பில் கொடுக்கப்பட்டு வந்த மைல்ட்-ஹைப்ரிட் டெக்னாலஜி நிறுத்தப்பட்டது. தற்போது மாருதி அதை மீண்டும் கொண்டு வந்துள்ளது. சப்-4m எஸ்யூவி -யின் மேனுவல்-டிரான்ஸ்மிஷன் கொண்ட ஹையர்-ஸ்பெக் ZXi மற்றும் ZXi+ வேரியன்ட்களுக்கு மட்டுமே இது கிடைக்கும். இந்த தொழில்நுட்பம் இல்லாமல் லோவர்-எண்ட் மேனுவல் வேரியன்ட்களையும் வாங்கலாம்.

இந்த தொழில்நுட்பத்தால் என்ன பலன் ?

மைல்ட்-ஹைப்ரிட் செட்டப் நிறுத்தப்பட்ட போது, ​​பெட்ரோல்-MT காம்போவிற்கான எஸ்யூவி -யின் மைலேஜ் கிட்டத்தட்ட 3 கிமீ/லி குறைந்து, 17.38 கிமீ/லி ஆக இருந்தது. மைல்ட்-ஹைப்ரிட் தொழில்நுட்பத்தை மீண்டும் அறிமுகப்படுத்துவதால் இது அதிகரிக்கும். எஸ்யூவி -யின் ZXi மற்றும் ZXi+ MT வேரியன்ட்கள் இப்போது 19.89 கிமீ/லி என்ற மைலேஜை கொண்டுள்ளன, இது 2.5 கிமீ/லி கூடுதலாகும். மைல்ட்-ஹைப்ரிட் தொழில்நுட்பத்தைப் பெறாத மேனுவல் கியர் பாக்ஸ் உடன் லோயர்-ஸ்பெக் LXi மற்றும் VXi வேரியன்ட்களில் இன்னும் 17.38 கிமீ/லி கிடைக்கும்.

பெட்ரோல்-ஒன்லி வேரியன்ட் மட்டுமே விற்பனையில் உள்ளது

Maruti Brezza 6-speed automatic gearbox

மைல்ட்-ஹைப்ரிட் செட்டப் எஸ்யூவி -யின் 1.5-லிட்டர் நேச்சுரல் ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜினுடன் (103 PS/ 137 Nm), 5-ஸ்பீடு மேனுவல் அல்லது 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் வருகிறது. மாருதி அதே இன்ஜினை ஆப்ஷனலாக CNG கிட் உடன் வழங்குகிறது, (அதில் இது 88 PS/ 121.5 Nm) 5-ஸ்பீடு MT மாறுபாட்டுடன். CNG பதிப்பின் கிளைம்டு மைலேஜ் இன்னும் 25.51 km/kg ஆக உள்ளது.

இதையும் படிக்கவும்: மாருதி eVX எலக்ட்ரிக் SUV 2024 ஆம் ஆண்டின் இறுதியில் வரும் என உறுதி செய்யப்பட்டது

விலை மற்றும் போட்டியாளர்கள்

Maruti Brezza rear

மாருதி பிரெஸ்ஸாவை ரூ.8.29 லட்சம் முதல் ரூ.14.14 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விற்பனை செய்கிறது. கியா சோனெட், ரெனால்ட் கைகர், மஹிந்திரா XUV300, நிஸான் மேக்னைட், டாடா நெக்ஸான், ஹூண்டாய் வென்யூ மற்றும் சப்-4மீ கிராஸ்ஓவர் எஸ்யூவி-யான மாருதி ஃப்ரான்க்ஸ் ஆகிய கார்களுடன் இது போட்டியிடும்.

மேலும் படிக்க: மாருதி பிரெஸ்ஸா ஆன் ரோடு விலை

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment on Maruti brezza

Read Full News

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience