• English
  • Login / Register

ஒரே வருடத்தில் 20 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்து சாதனை படைத்த மாருதி நிறுவனம்

மாருதி எர்டிகா க்காக டிசம்பர் 17, 2024 09:02 pm அன்று shreyash ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

  • 60 Views
  • ஒரு கருத்தை எழுதுக

ஹரியானாவில் உள்ள மானேசர் தொழிற்சாலையில் இருந்து 20 லட்சமாவது ( 2000000 ) வாகனமாக மாருதி எர்டிகா வெளியே வந்தது.

  • 2024 ஆம் ஆண்டில் மாருதி பலேனோ, ஃபிரான்க்ஸ், எர்டிகா, வேகன் ஆர் மற்றும் பிரெஸ்ஸா ஆகிய கார்கள் தயாரிக்கப்பட்டன.

  • 20 லட்சம் யூனிட்களில் கிட்டத்தட்ட 60 சதவீதம் ஹரியானாவில் உள்ள மாருதியின் மானேசர் ஆலையில் உற்பத்தி செய்யப்பட்டதாகும் .

  • இந்தியாவில் தற்போது மாருதியிடம் 3 உற்பத்தி ஆலைகள் உள்ளன : ஹரியானாவில் இரண்டு மற்றும் குஜராத்தில் ஒன்று.

  • தற்போது ​​இந்த ஆலைகளின் மொத்த ஒருங்கிணைந்த ஆண்டு உற்பத்தி திறன் 23.5 லட்சம் யூனிட்களாக உள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய வாகன உற்பத்தியாளரான மாருதி சுஸூகி ஆனது ஒரு காலண்டர் ஆண்டில் சாதனை நேரத்தில் 20 லட்சம் வாகனங்கள் உற்பத்தி இமாலய மைல்கல்லை எட்டியுள்ளது. மாருதி எர்டிகா ஹரியானாவில் உள்ள மாருதியின் மானேசர் தொழிற்சாலையில் இருந்து வெளியிடப்பட்ட 2000000 -வது வாகனமாக ஆனது. மாருதி அக்டோபர் 2006 ஆண்டில் இந்த ஆலையில் கார்களை உற்பத்தி செய்யத் தொடங்கியது. மேலும் மாருதி அதன் வரலாற்றில் இந்த முக்கிய அடையாளத்தை அடைந்தது இதுவே முதல் முறை ஆகும்.

இந்த மைல்கல்லை பற்றிய கூடுதல் விவரங்கள்

Maruti Suzuki logo

2024 ஆண்டில் மொத்த தயாரிக்கப்பட்ட 20 லட்சம் கார்களில் கிட்டத்தட்ட 60 சதவீதம் ஹரியானாவிலும், மீதமுள்ள 40 சதவீதம் குஜராத்திலும் உற்பத்தி செய்யப்பட்டவை ஆகும். மாருதி பலேனோ, ஃபிரான்க்ஸ், எர்டிகா, வேகன் ஆர் மற்றும் பிரெஸ்ஸா ஆகியவை 2024 காலண்டர் ஆண்டில் தயாரிக்கப்பட்ட டாப் 5 வாகனங்கள் ஆகும்.

இந்த குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியது குறித்து, மாருதி சுஸூகி இந்தியா லிமிடெட் இன் நிர்வாக இயக்குநர் மற்றும் CEO திரு. ஹிசாஷி டேகுச்சி, “இந்த 2 மில்லியன் உற்பத்தி மைல்கல் இந்தியாவின் உற்பத்தி திறன் மற்றும் ‘மேக் இன் இந்தியா’ முயற்சிக்கான எங்கள் அர்ப்பணிப்புக்கு சான்றாகும். இந்தச் சாதனையானது எங்களின் சப்ளையர்கள் மற்றும் டீலர் கூட்டமைப்பாளார்களுடன் இணைந்து பொருளாதார வளர்ச்சிக்கு உந்துதலாக தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கும், இந்தியாவின் ஆட்டோமொபைல் துறையை தற்சார்பு மற்றும் உலகளவில் போட்டித்தன்மையுடையதாக மாற்றுவதற்கும் எங்களின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது. எங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்கள் மற்றும் மதிப்புச் சங்கிலி கூட்டாளர்களின் தொடர்ச்சியான ஆதரவிற்காகவும் இந்த வரலாற்றுப் பயணத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக இருப்பதற்கும் எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் ” என தெரிவித்துள்ளார்.

மேலும் பார்க்க: 2024 ஆண்டில் இந்தியாவில் வெளியிடப்பட்ட அனைத்து எஸ்யூவி -களின் விவரங்களும் இங்கே

இந்தியாவில் உள்ள மாருதியின் உற்பத்தி ஆலைகள்

Maruti Wagon R

இந்தியாவில் தற்போது மாருதி நிறுவனம் 3 உற்பத்தி ஆலைகளை நிர்வகித்து வருகிறது  : ஹரியானாவில் இரண்டு (மானேசர் மற்றும் குருகிராம்) மற்றும் குஜராத்தில் (ஹன்சல்பூர்). ஹரியானாவில் அமைந்துள்ள மானேசர் ஆலை 600 ஏக்கருக்கு மேல் உள்ளது. உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளுக்கு வாகனங்கள் அங்கே உற்பத்தி செய்யப்படுகின்றன. மானேசர் வசதியில் உற்பத்தி செய்யப்படும் கார்கள் லத்தீன் அமெரிக்கா, மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவின் அண்டை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தற்போது இந்த ஆலைகள் 23 லட்சம் யூனிட்களுக்கு மேல் ஆண்டு உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை.

மாருதி ஹரியானாவின் கர்கோடாவில் ஒரு ஆலையை அமைத்து வருகிறது. இது 2025 ஆண்டில் செயல்படத் தொடங்கும். ஆலை செயல்பாட்டுக்கு வந்தவுடன் இந்த ஆண்டுக்கு 10 லட்சம் யூனிட்களை அங்கே உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மாருதி தனது வரவிருக்கும் EVகளை குஜராத்தில் உள்ள தொழிற்சாலையில் தயாரிக்கத் தொடங்கும். 

மாருதியில் இருந்து எதிர்பார்க்கப்படும் கார்கள் என்ன ?

Maruti Suzuki eVX

மாருதி தற்போது இந்தியாவில் 17 மாடல்களை விற்பனை செய்கிறது. 9 மாடல்களை அதன் அரீனா லைன்அப் மூலமாகவும், 8 கார்களை அதன் நெக்ஸா டீலர்ஷிப் நெட்வொர்க் மூலமாகவும் விற்பனை செய்கிறது. 2031 ஆம் ஆண்டிற்குள் மாருதி அதன் இந்திய போர்ட்ஃபோலியோவை eVX எஸ்யூவி மற்றும் EVகள் உட்பட 18 முதல் 28 மாடல்களுக்கு விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. 

ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகள் வேண்டுமா ? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.

மேலும் படிக்க: எர்டிகா ஆன் ரோடு விலை

was this article helpful ?

Write your Comment on Maruti எர்டிகா

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

டிரெண்டிங் எம்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience