சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

மஹிந்திரா XUV.e9 மற்றும் மஹிந்திரா XUV.e8 ஆகிய கார்கள் ஒரே மாதியான கேபினை பகிர்ந்து கொள்கின்றன

மஹிந்திரா எக்ஸ்இவி 9இ க்காக நவ 23, 2023 01:05 pm அன்று ansh ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

எலக்ட்ரிக் XUV700 -ன் கூபே ஸ்டைல் வெர்ஷன் சமீபத்தில் படம் பிடிக்கப்பட்டுள்ளது, இப்போது அதன் கேபினை பற்றிய ஒரு பார்வை கிடைத்தது.

  • கேபினில் இன்டெகிரேட்டட் டிரிபிள்-ஸ்கிரீன் செட்டப் மற்றும் புதிய இரண்டு ஸ்போக் ஸ்டீயரிங் உள்ளது.

  • தற்காலிக லைட்டிங் செட்டப் உடன் பெரிதும் மறைக்கப்பட்ட வெளிப்புறமானது கூபே பாடி ஸ்டைலை மட்டுமே காட்டுகிறது.

  • எஸ்யூவி -யானது 450 கிமீ தூரம் வரை செல்லக்க் கூடியதாக இருக்கும், ரியர் வீல் டிரைவ் மற்றும் ஆல்-வீல் டிரைவ் ஆகிய இரண்டு ஆப்ஷன்கள் கொடுக்கப்படலாம்.

  • 38 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் ஏப்ரல் 2025 -க்குள் அறிமுகப்படுத்தப்படலாம்.

மஹிந்திரா XUV.e9 என்பது இந்திய கார் தயாரிப்பாளரான மஹிந்திர நிறுவனம் வெளியிடவுள்ள புதிய தலைமுறை எலக்ட்ரிக் எஸ்யூவி -களின் அடுத்த தொகுதிகளில் ஒன்றாக இடம்பெறக்கூடும். கூபே-ஸ்டைலில் இருக்கும் இந்த காரானது அதன் உற்பத்திக்குத் தயாராக இருப்பதை போல தெரிகிறது. ஆகவே அவ்வப்போது சோதனை செய்து பார்க்கப்படுகிறது. XUV.e9 சோதனை காரில் சமீபத்திய ஸ்பை ஷாட்கள், உட்புறத்திலும் முதல் பார்வையை நமக்குத் தருகின்றன, இதன் கேபின் மஹிந்திரா XUV.e8 (எலக்ட்ரிக் வெர்ஷன் மஹிந்திரா XUV700) காரில் இருந்ததை போலவே தெரிகிறது, அதுவும் சமீபத்தில் படம் பிடிக்கப்பட்டுள்ளது. நமக்கு தெரிய வரும் விவரங்கள் இங்கே.

டேஷ்போர்டு முழுவதும் இருக்கும் ஸ்கிரீன்

ஸ்பை ஷாட்டில் நீங்கள் கவனிக்கும் முதல் விஷயம் மிகப்பெரிய ஸ்கிரீன் அமைப்பாகும், இது டாஷ்போர்டின் ஒரு விளிம்பிலிருந்து மற்றொன்று வரை கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டிஸ்பிளே அமைப்பில் மூன்று இன்டெகிரேட்ட டிஸ்பிளேக்கள் இருக்கும்: டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் பயணிகளுக்கான டிஸ்ப்ளே. முதல் கான்செப்ட்டை விட இதில் கவனிக்கக் கூடிய விஷயம் புதிய டூ-ஸ்போக் ஸ்டீயரிங் வீல் ஆகும்.

இதையும் பாருங்கள்: மஹிந்திரா ஸ்கார்பியோ N காரை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள பிக்அப்பை சோதனை செய்து வரும் மஹிந்திரா நிறுவனம்

சென்டர் கன்சோலில் உள்ள சிறிய ஏசி வென்ட்கள், XUV.e9 புரோட்டோடைப்பில் காணப்படும் அதே கியர் ஷிப்ட் லீவர் மற்றும் டிரைவ் மோடுகளை மாற்றுவதற்குப் பயன்படுத்தக்கூடிய டயல் ஆகியவற்றுடன் டாஷ்போர்டின் எஞ்சிய பகுதிகள் மிகவும் வழக்கமானதாகவே இருக்கின்றன. மேலும், இருக்கைகள் முழுமையாகத் தெரியவில்லை என்றாலும், அப்ஹோல்ஸ்டரி துணி மற்றும் தோல் இரண்டின் கலவையாக இருப்பதைக் பார்க்க முடிகிறது.

அம்சங்கள் மற்றும் பாதுகாப்பு

மஹிந்திரா XUV.e8 -ன் உட்புறத்தின் படம் எடுத்துக்காட்டுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது

பிரீமியம் சலுகையாக, மஹிந்திரா XUV.e9 மல்டி-ஜோன் கிளைமேட் கன்ட்ரோல், (அடாப்டிவ்) க்ரூஸ் கன்ட்ரோல், வென்டிலேட்டட் மற்றும் பவர்டு முன் இருக்கைகள், வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங் மற்றும் பிரீமியம் சவுண்ட் சிஸ்டம் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எலக்ட்ரிக் மாடலாக இருப்பதால், இது மல்டி-லெவல் ரீஜென் மற்றும் வெஹிகிள் டூ வெஹிகிள் (V2L) தொழில்நுட்பங்களையும் பெறலாம்.

மேலும் படிக்க: இந்திய அறிமுகத்தை நெருங்கும் மஹிந்திரா குளோபல் பிக் அப்... வடிவமைப்பு காப்புரிமைக்காக விண்ணப்பிக்கப்பட்டுள்ளது

பாதுகாப்பு அம்சங்களைப் பொறுத்தவரை, மஹிந்திரா இதில் 6 ஏர்பேக்குகள், EBD உடன் ABS, எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (TPMS) மற்றும் லேன் கீப் அசிஸ்ட் மற்றும் ஆட்டோ எமர்ஜென்சி பிரேக்கிங் போன்ற ADAS அம்சங்களுடன் பொருத்தலாம். குளோபல் NCAP கிராஷ் டெஸ்ட்டில் XUV700 -ன் செயல்திறனின் அடிப்படையில், பாரத் NCAP -ல் கிராஷ் டெஸ்ட் செய்யும் போது மஹிந்திரா XUV.e9 சிறந்த மதிப்பெண்ணை பெறும் என எதிர்பார்க்கலாம்.

பவர்டிரெய்ன் விவரங்கள்

XUV.e9 மஹிந்திராவின் INGLO கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்டது, இது 60 kWh மற்றும் 80 kWh பேட்டரி பேக்குகளுக்கு இடமளிக்கும். இந்த கட்டமைப்பு, இந்த பேட்டரி பேக்குகளுடன், ரியர் வீல் டிரைவ் மற்றும் ஆல்-வீல் டிரைவ் செட்டப் கொடுக்கப்படலாம், மேலும் எஸ்யூவி -க்கு 500 கிமீ வரை உரிமை கோரப்பட்ட வரம்பைக் கொடுக்க முடியும்.

மஹிந்திராவை பொறுத்தவரை, இது 175 kW வரையிலான சார்ஜிங் ஆப்ஷனை கொடுக்கலாம், 0-80 சதவிகிதம் சார்ஜிங் செய்வதற்கான நேரம் வெறும் 30 நிமிடங்கள் ஆகும்.

அறிமுகம் விலை

மஹிந்திரா XUV.e9, XUV.e8 (எலக்ட்ரிக் XUV700) -ஐ தொடர்ந்து 2024 ஆம் ஆண்டின் இறுதியில் வரவிருக்கிறது. இதன் ஆரம்ப விலை ரூ. 38 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வரவிருக்கும் டாடா ஹாரியர் EV மற்றும் சஃபாரி EV ஆகியவற்றுக்கு போட்டியாக இருக்கலாம்.

பட ஆதாரம்

Share via

Write your Comment on Mahindra எக்ஸ்இவி 9இ

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

Enable notifications to stay updated with exclusive offers, car news, and more from CarDekho!

டிரெண்டிங் எலக்ட்ரிக் கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை