இந்திய அறிமுகத்தை நெருங்கும் மஹிந்திரா குளோபல் பிக் அப்... வடிவமைப்பு காப்புரிமைக்காக விண்ணப்பிக்கப்பட்டுள்ளது
published on நவ 09, 2023 07:46 pm by rohit for mahindra global pik up
- 43 Views
- ஒரு கருத்தை எழுதுக
விண்ணப்பிக்கப்பட்டுள்ள காப்புரிமை ஆகஸ்ட் 2023-இல் வெளியிடப்பட்ட ஸ்கார்பியோ N அடிப்படையிலான பிக் அப் -ன் அதே வடிவமைப்பை கொண்டுள்ளது.
-
மஹிந்திரா நிறுவனம் ஆகஸ்ட் 2023 -ல் குளோபல் பிக் அப்பை அறிமுகம் செய்தது.
-
உலகளாவிய மாடலில், சாத்தியமான சந்தைகள் பட்டியலில் இந்தியாவும் இருந்தது.
-
இது 2026 ஆம் ஆண்டு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது, இதன் விலை ரூ.25 லட்சம் முதல் இருக்கும் (எக்ஸ்-ஷோரூம்)
-
காப்புரிமை விண்ணப்பத்தின் படத்தில், ஹெட்லைட் மற்றும் ஆஃப்-ரோடிங்க் அம்சங்கள் உள்ளிட்ட அதே வடிவமைப்பு விவரங்கள் உள்ளன.
-
இதில் மேம்பட்ட 4 X 4 உடனான 2.2 லிட்டர் டீசல் பவர்டிரைன் கொண்ட புதுப்பிக்கப்பட்ட ஸ்கார்பியோ N மாடல் வரும் என எதிர்பார்க்கபப்டுகிறது.
ஆகஸ்ட் 2023 -ல் தென் ஆப்ரிக்காவில் நடைபெற்ற மிகப்பெரிய மஹிந்திரா நிகழ்ச்சியில், இரண்டு புதிய கார்கள் அறிமுகப்படுத்தப்பட்டன: மஹிந்திரா குளோபல் பிக் அப் மற்றும் மஹிந்திரா தார் (இது பொதுவாக தார் EV என்றழைக்கப்படுகிறது). எலெக்ட்ரிக் தார் காரின் டிசைனை காப்புரிமை செய்த பிறகு, தற்போது மஹிந்திரா ஸ்கார்பியோ N அடிப்படையிலான பிக் அப் வடிவமைக்கப்பட்டுள்ளது.
காப்புரிமை விண்ணப்பத்தில் என்ன உள்ளது?
தென்னாப்பிரிக்காவில் மஹிந்திராவின் நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்ட அதே மாடலை காப்புரிமை செய்யப்பட்ட படம் காட்டுகிறது. அதே மாதிரியான LED ஹெட்லைட் கிளஸ்டர்கள் மற்றும் LED DRLகள், புதிதாக வடிவமைக்கப்பட்ட கிரில், டிரைவர் பக்கத்தில் உயர் ஸ்நோர்கெல் மற்றும் கூடுதல் LED விளக்குகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது அலாய் வீல்கள், முன்பக்கத்தில் பொருத்தப்பட்ட வின்ச் மற்றும் பக்கவாட்டு படிகளுக்கும் அதே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மஹிந்திரா குளோபல் பிக் அப் பற்றி அதன் ஆஃப்-ரோடிங் -க்கிற்கான பிரத்தியே விஷயங்கள் மற்றும் அதன் அறிமுக நேரத்தில் கூறப்பட்டுள்ள அம்சங்கள் உட்பட அனைத்து முக்கிய விவரங்களை ஏற்கெனவே தெரிவித்துள்ளோம்.
ஸ்கார்பியோ N பவர் டிரைன்
குளோபல் பிக் அப் மாடலில், ஸ்கார்பியோ N –இல் உள்ள அதே 2.2-லிட்டர் டீசல் இன்ஜினின் மேம்படுத்தப்பட்ட வேரியன்ட்டின் மூலம் இயக்கப்படும்.ஆஃப் ரோடிங்கில் 4 வீல் டிரைவ் (4WD) சிஸ்டம் இருக்கும் என்பதை தவிர பிக் அப் குறித்த எந்த தொழில்நுட்ப விவரங்களையும் மஹிந்திரா பகிரவில்லை. ஸ்கார்பியோ N இன் 4WD வேரியன்ட்களில் உள்ள இன்ஜின் 175 PS/400 Nm என மதிப்பிடப்பட்டுள்ளது. குளோபல் பிக் அப்க்கான புதிய யூனிட் அதே 6-ஸ்பீடு MT மற்றும் 6-ஸ்பீடு AT டிரான்ஸ்மிஷன் வேரியன்ட்களை கொண்டிருக்கலாம்.
மேலும் படிக்க: இந்த தீபாவளிக்கு அதிக தள்ளுபடிகள் வழங்கும் 7 எஸ்யூவி -கள்
இந்தியாவில் அறிமுகம் மற்றும் விலை
மஹிந்திரா குளோபல் பிக் அப் இன் அறிமுக தேதி இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை, ஆனால் இது 2026 ஆம் ஆண்டில் எங்கள் சந்தையில் அறிமுகப்படுத்தப்படலாம். எங்கள் சந்தையில் அதன் போட்டியாளர்கள் இசுஸு வி-கிராஸ் மற்றும் டொயோட்டா ஹைலக்ஸ் ஆகும், இதன் ஆரம்ப விலை ரூ.25 லட்சமாக இருக்கும் (எக்ஸ்-ஷோரூம்). இதற்கு முன்பாக நீங்கள் ஏதேனும் ஆஃப்-ரோடரை வாங்க விரும்பினால், 2024 ஆம் ஆண்டில் 5-டோர் மஹிந்திரா தார் அறிமுகமாகவுள்ளது.
மேலும் படிக்க: அக்டோபர் 2023-இல் இந்தியாவில் சிறப்பாக விற்பனையாகும் முதன்மையான 15 கார்கள் இவை
0 out of 0 found this helpful