சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

Mahindra XUV700 AX5 செலக்ட் வேரியன்ட்கள் வெளியிடப்பட்டுள்ளன, விலை ரூ 16.89 லட்சத்திலிருந்து தொடங்குகின்றது

published on மே 22, 2024 05:36 pm by rohit for மஹிந்திரா எக்ஸ்யூவி700

புதிய AX5 செலக்ட் வேரியன்ட்கள் 7 சீட்கள் கொண்ட அமைப்பில் மட்டுமே கிடைக்கின்றன. ஆனால் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் தேர்வுகளுடன் வருகின்றன.

  • எஸ்யூவி -யின் AX3 மற்றும் AX5 டிரிம்களுக்கு இடையே புதிய AX5 செலக்ட் ஸ்லாட்டுகள் உள்ளன.

  • புதிய வேரியன்ட்களின் விலை ரூ.16.89 லட்சம் முதல் ரூ.18.99 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா)

  • இந்த புதிய வேரியன்ட்கள், AX5 வேரியன்ட்களை விட ரூ.1.40 லட்சம் வரை மலிவு விலையில் உள்ளன.

  • போர்டில் உள்ள வசதிகளில் இரட்டை 10.25-இன்ச் ஸ்கிரீன்கள், ஒரு பனோரமிக் சன்ரூஃப் மற்றும் டூயல் முன் ஏர்பேக்குகள் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.

  • எஸ்யூவி -யின் 2-லிட்டர் டர்போ-பெட்ரோல் மற்றும் 2.2-லிட்டர் டீசல் இன்ஜின்கள் இரண்டிலும். அவற்றுக்கான டிரான்ஸ்மிஷன்களுடன் கிடைக்கிறது.

மஹிந்திரா XUV700 ஒரு புதிய மிட்-ஸ்பெக் AX5 செலக்ட் (அல்லது சுருக்கமாக AX5 S) டிரிம்மை பெற்றுள்ளது. இது AX3 மற்றும் AX5 டிரிம்களுக்கு இடையில் ஸ்லாட் செய்யப்பட்டுளது. மற்றும் 7-சீட் லேஅவுட்டில் மட்டுமே கிடைக்கும். ஒப்பீட்டளவில் குறைந்த விலையை கொண்டிருக்கும் போது நெக்ஸ்ட்-இன்-லைன் AX5 டிரிமின் சில பிரீமியம் மற்றும் பயனுள்ள வசதிகளை பெறுகிறது.

வேரியன்ட் வாரியான விலை

வேரியன்ட்

AX5 செலக்ட்

AX5

வித்தியாசம்

பெட்ரோல் MT

ரூ.16.89 லட்சம்

ரூ.18.19 லட்சம்

(ரூ 1.30 லட்சம்)

பெட்ரோல் AT

ரூ.18.49 லட்சம்

ரூ.19.79 லட்சம்

(ரூ 1.30 லட்சம்)

பெட்ரோல் MT E

ரூ.17.39 லட்சம்

ரூ.18.69 லட்சம்

(ரூ 1.30 லட்சம்)

டீசல் MT (185 PS)

ரூ.17.49 லட்சம்

ரூ.18.79 லட்சம்

(ரூ 1.30 லட்சம்)

டீசல் MT E (185 PS)

ரூ.17.99 லட்சம்

டீசல் AT

ரூ.18.99 லட்சம்

ரூ.20.39 லட்சம்

(ரூ 1.40 லட்சம்)

மேலே உள்ள அட்டவணையில் உள்ளபடி புதிய AX5 செலக்ட் வேரியன்ட்கள் தொடர்புடைய AX5 வேரியன்ட்களை விட ரூ.1.40 லட்சம் வரை விலை குறைவாக உள்ளன.

போர்டில் உள்ள வசதிகள் மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்பம்

மஹிந்திரா புதிய AX5 S வேரியன்ட்களில் பனோரமிக் சன்ரூஃப், டூயல் 10.25-இன்ச் டிஸ்ப்ளேக்கள் (இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் இன்ஸ்ட்ரூமெண்டேஷனுக்காக) வயர்லெஸ் கனெக்டிவிட்டி, அலெக்சா வாய்ஸ் அசிஸ்டன்ட் மற்றும் புஷ்-பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. பாதுகாப்பைப் பொறுத்தவரை இது டூயல் முன் ஏர்பேக்குகள், ISOFIX சைல்டு சீட் ஆங்கரேஜ்கள் ஆங்கரேஜ்கள் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்களுடன் வருகின்றது.

நெக்ஸ்ட்-இன்-லைன் AX5 டிரிமுடன் ஒப்பிடும்போது, ​​AX5 S வேரியன்ட்களில் LED DRLகள் மற்றும் கார்னரிங் செயல்பாடுகள், டூயல்-டோன் அலாய் வீல்கள், ஃபாக் லேம்ப்கள், க்ரூஸ் கண்ட்ரோல், ரிவர்சிங் கேமரா மற்றும் கர்ட்டன் ஏர்பேக்குகள் கொண்ட LED ஹெட்லைட்கள் கிடைக்காது.

மேலும் பார்க்க: மஹிந்திரா BE.05 மீண்டும் சோதனையின் போது படம்பிடிக்கப்பட்டுள்ளது, இன்ட்டீரியர் விவரங்கள் வெளியாகியுள்ளன

அதே பவர்டிரெய்ன் ஆப்ஷன்களை பெறுகிறது

எஸ்யூவி -யின் இன்ஜின் மற்றும் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் எதுவும் மாறவில்லை. புதிய AX5 செலக்ட் வேரியன்ட்கள் பின்வரும் பவர்டிரெய்ன் ஆப்ஷன்களுடன் வருகின்றன:

விவரக்குறிப்பு

2-லிட்டர் டர்போ-பெட்ரோல்

2.2 லிட்டர் டீசல்

பவர்

200 PS

156 PS/ 185 PS

டார்க்

380 Nm

360 Nm/ 450 Nm

டிரான்ஸ்மிஷன்

6-ஸ்பீடு MT, 6-ஸ்பீடு AT

6-ஸ்பீடு MT/ 6-ஸ்பீடு MT, 6-ஸ்பீடு AT

எஸ்யூவியின் டாப்-ஸ்பெக் AX7 மற்றும் AX7 L டிரிம்கள் மட்டுமே டீசல் ஆட்டோமேட்டிக் பவர்டிரெய்னுடன் ஆப்ஷனலான ஆல்-வீல் டிரைவ் (AWD) செட்டப்பை பெறுகின்றன.

மஹிந்திரா XUV700 போட்டியாளர்கள்

மஹிந்திரா XUV700 கார் ஆனது MG ஹெக்டர் ப்ளஸ், டாடா சஃபாரி, மற்றும் ஹூண்டாய் அல்கஸார் ஆகியவற்றுடன் போட்டியிடுகின்றது. அதன் 5-சீட்டர் பதிப்பு டாடா ஹாரியர் மற்றும் எம்ஜி ஹெக்டர் உடன் போட்டியிடும்.

மேலும் படிக்க: மஹிந்திரா XUV700 ஆன் ரோடு விலை

r
வெளியிட்டவர்

rohit

  • 20 பார்வைகள்
  • 0 கருத்துகள்

Write your Comment மீது மஹிந்திரா எக்ஸ்யூவி700

K
karthikeyan
May 24, 2024, 12:14:40 PM

Instead of Sunroof, M&M can afford to give rear camera, Foldable ORVM, big visible rear turn indicator. M&M can think smartly to have 2 varients. One is with ADAS and other as w/o ADAS.

Read Full News

trendingஎஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை