Mahindra XUV300 Facelift: காரில் என்ன எதிர்பார்க்கலாம் ?
ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட XUV300 கார் மார்ச் மாதத்தில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை ரூ. 8.5 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) இருந்து தொடங்கலாம்.
2019 ஆம் ஆண்டு முதல் விற்பனை தொடங்கியது முதல் தற்போது மஹிந்திரா XUV300 -காரில் எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை. இப்போது விரைவில் ஃபேஸ்லிஃப்ட் பதிப்பில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இது பல முறை சோதனையின் போது படம் பிடிக்கப்பட்டுள்ளது, மிட்லைஃப் அப்டேட்டில் நிறைய வசதிகள் சேர்க்கப்படும் என்பதை ஓரளவு ஸ்பை புகைப்படங்கள் மூலமாக தெரிந்து கொள்ள முடிகின்றது. ஒரு வேளை XUV300 ஃபேஸ்லிஃப்ட் காருக்காக நீங்கள் காத்திருந்தால் அதில் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படும் விஷயங்கள் இங்கே:
புதிய வடிவமைப்பு
மஹிந்திரா தனது வரவிருக்கும் பார்ன் எலக்ட்ரிக் (BE) கார்களுக்கு ஏற்ப ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட XUV300 -க்கு ஒரு புதிய வடிவமைப்பை கொடுக்கவுள்ளது. பல்வேறு ஸ்பை ஷாட்களின் அடிப்படையில், ஃபாங் வடிவ LED DRL -களை முன்னால் இருப்பதை பார்க்க முடிந்தது மற்றும் கனெக்டட் டெயில்லைட்கள் BE.05 கான்செப்ட் காரில் உள்ளதை போலவே இருந்தன. வெளிப்புறத்தில் உள்ள பிற மாற்றங்களில் புதிய வடிவிலான அலாய் வீல்கள் மற்றும் ட்வீக் செய்யப்பட்ட பம்ப்பர்களும் ஆகியவை அடங்கும்.
புதிய கேபின்
XUV300 -யின் உட்புறத்தில் புதிய வடிவிலான சென்ட்ரல் ஏசி வென்ட்கள், பின்புற ஏசி வென்ட்கள் கொண்ட புதிய கிளைமேட் கன்ட்ரோல் பேனல் மற்றும் இரண்டு புதிய டிஸ்ப்ளேக்கள் (ஒன்று இன்ஃபோடெயின்மென்ட்டுக்காகவும் மற்றொன்று இன்ஸ்ட்ரூமெண்டேஷனுக்காகவும்) கொண்ட புதுப்பிக்கப்பட்ட டாஷ்போர்டுடன் வரும். ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட XUV300 -யில் மஹிந்திரா புதிய இருக்கை அமைப்பையும் வழங்கும் என்று எதிர்பார்க்கலாம்.
மேலும் படிக்க: ஜனவரி 2024 மாத மிட்சைஸ் எஸ்யூவி விற்பனையில் ஆதிக்கம் செலுத்திய Mahindra Scorpio மற்றும் XUV700 கார்கள்
புதிய வசதிகள்
மேலே குறிப்பிட்டுள்ளபடி, 2024 XUV300 கார் இரண்டு புதிய பெரிய டிஜிட்டல் டிஸ்ப்ளேக்களை (ஒவ்வொன்றும் 10.25-இன்ச்) பெற வாய்ப்புள்ளது. XUV400 EV மற்றும் அநேகமாக இந்த பிரிவில்-முதல் பனோரமிக் சன்ரூஃப் ஆக இருக்கும். போர்டில் உள்ள மற்ற அம்சங்களில் வென்டிலேட்டட் முன் இருக்கைகள், டூயல் ஜோன் ஏசி, க்ரூஸ் கன்ட்ரோல், வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங் மற்றும் புஷ்-பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப் ஆகியவை அடங்கும்.
பாதுகாப்பை பொறுத்தவரை, மஹிந்திரா 360 டிகிரி கேமரா மற்றும் அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) உடன் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதுப்பிக்கப்பட்ட SUV ஆனது ஆறு ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக), ஒரு டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS) மற்றும் எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் (ESC) ஆகியவற்றைப் பெறலாம்.
ஹூட்டின் கீழ் என்ன இருக்கும் ?
மஹிந்திரா புதிய XUV300 மாடலை ஏற்கனவே இருக்கும் அதே பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களுடன் வழங்கும். இதில் 1.2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் (110 PS/200 Nm) மற்றும் 1.5-லிட்டர் டீசல் இன்ஜின் (117 PS/300 Nm) ஆகியவை அடங்கும். இரண்டுமே 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது 6-ஸ்பீடு AMT -யுடன் கொடுக்கப்படலாம்.
XUV300 ஆனது T-GDi (நேரடி-இன்ஜெக்ஷன்) டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் (130 PS/250 Nm வரை), 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது. மஹிந்திரா தற்போதைய AMTக்கு பதிலாக ஆட்டோமெட்டிக் ஆப்ஷன் உடன் ஒரு டார்க் கன்வெர்ட்டரை உடன் இதை கொடுக்கும் என நாங்கள் நினைக்கிறோம்.
எதிர்பார்க்கப்படும் வெளியீடு, விலை மற்றும் போட்டியாளர்கள்
ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட மஹிந்திரா XUV300 இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் விற்பனைக்கு வரும் என்று நாங்கள் நம்புகிறோம். இதன் விலை ரூ.8.5 லட்சத்தில் இருந்து (எக்ஸ்-ஷோரூம்) எதிர்பார்க்கப்படுகிறது. புதிய XUV300 டாடா நெக்ஸான், மாருதி பிரெஸ்ஸா, கியா சோனெட், மற்றும் ஹூண்டாய் வென்யூ போன்றவற்றுடன் அதன் போட்டியை தொடரும்.
மேலும் படிக்க: மஹிந்திரா XUV300 AMT
Write your Comment on Mahindra எக்ஸ்யூவி 3XO
Will the boot space be increased to carry luggage? Thats one of the biggest drawbacks in XUV300
Can we expect hill hold assist in lower MT variants of XUV300, as peers are providing the same.
What will be the tyre size and ground clearance of new XUV300 facelift 2025?