Mahindra XUV300 ஃபேஸ்லிஃப்ட் காருக்கு XUV 3XO என பெயரிடப்பட்டுள்ளது, முதல் டீசர் வெளியாகியுள்ளது
மஹிந்திரா எக்ஸ்யூவி 3XO க்காக ஏப்ரல் 04, 2024 05:24 pm அன்று rohit ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது
- 74 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட XUV300 இனிமேல் XUV 3XO என அழைக்கப்படும். ஏப்ரல் 29 அன்று இந்த கார் அறிமுகமாகவுள்ளது.
-
2019 ஆண்டில் எஸ்யூவி அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து கிடைக்கும் முதல் பெரிய அப்டேட் இதுவாகும்.
-
புதிய டீஸரில் கனெக்டட் LED டெயில்லைட்ஸ், புதிய ஹெட்லைட்கள் மற்றும் புதிய கிரில் ஆகியவற்றை பார்க்க முடிகின்றது.
-
கேபின் அப்டேட்டில் புதிய அப்ஹோல்ஸ்டரி மற்றும் புதிய டாஷ்போர்டு அமைப்பு ஆகியவை இருக்கலாம்.
-
டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே, 6 ஏர்பேக்குகள் மற்றும் ADAS போன்ற புதிய வசதிகளை பெற வாய்ப்புள்ளது.
-
அறிமுகப்படுத்தப்பட்ட உடனேயே விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை ரூ. 9 லட்சத்தில் இருந்து தொடங்கலாம் (எக்ஸ்-ஷோரூம்).
பலமுறை சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகு ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட மஹிந்திரா XUV300 இறுதியாக ஏப்ரல் 29 அன்று அறிமுகமாகும் என்பது உறுதியாகியுள்ளது. மேலும் இந்த அறிவிப்பை தொடர்ந்து முதல் அதிகாரப்பூர்வ டீஸரும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த டீஸரில் சில புதிய வடிவமைப்பு விவரங்களை பார்க்க முடிகிறது. குறிப்பிட்டு கூற வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால் பழைய 'XUV300' என்ற பெயருக்கு பதிலாக பதிலாக மஹிந்திரா இப்போது இந்த காருக்கு XUV 3XO என்ற புதிய பெயரை கொடுத்துள்ளது.
டீசரில் என்ன பார்க்க முடிகிறது?
டீஸர் வீடியோவில் இந்த காரில் கனெக்டட் LED டெயில்லைட்கள் உயரமான பம்பர் ஆகியவற்றை பார்க்க முடிகின்றது. மஹிந்திரா புதிய லைட்டிங் அமைப்பிற்கு ஏற்ப டெயில்கேட்டை மாற்றியமைத்துள்ளது. மேலும் இது மஹிந்திராவின் "ட்வின் பீக்ஸ்" லோகோவுடன் புதிய "XUV 3XO" என்ற பெயருக்கான எழுத்து கொடுக்கப்பட்டுள்ளது.
டீசரில் புதிய ஹெட்லைட் கிளஸ்டர்களால் சூழப்பட்ட கிரில்லில் குரோம்-கலரில் முக்கோண வடிவ எலமென்ட் கொடுக்கப்படும். முன்பக்கம் பெருமளவு மாற்றியமைக்கப்பட்டுள்ளதையும் நாம் கவனிக்கலாம். XUV 3XO காரில் ஃபாங் வடிவ LED DRL -கள் மற்றும் புரொஜெக்டர் ஹெட்லைட்கள் மற்றும் ஃபாக் லைட்ஸ் மற்றும் புதிய அலாய் வீல் ஆகியவையும் கொடுக்கப்படலாம்.
இன்ட்டீரியர் அப்டேட்கள்
இன்ட்டீரியர் அப்டேட் பற்றிய விவரங்களை முழுமையாக டீஸரில் பார்க்க முடியவில்லை. என்றாலும் கூட டீஸர் மாற்றியமைக்கப்பட்ட இருக்கை அமைப்பு மற்றும் புதிய டச் ஸ்கிரீன் யூனிட் ஆகியவற்றை பற்றிய ஒரு கண்ணோட்டத்தை அளிக்கிறது. முந்தைய ஸ்பை ஷாட்களின் அடிப்படையில் புதிய வடிவிலான டாஷ்போர்டு அமைப்பு மற்றும் புதிய டூயல் ஜோன் கிளைமேட் கன்ட்ரோல் பேனல் ஆகியவை இதில் இருக்கலாம் என எதிர்பார்க்க முடிகின்றது.
XUV400 காரின் கேபின்
XUV 3XO காரில் XUV400 போலவே டூயல் 10.25-இன்ச் டிஜிட்டல் டிஸ்ப்ளேக்கள் (ஒன்று இன்ஸ்ட்ரூமென்ட் மற்றும் இன்ஃபோடெயின்மென்ட்), வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங் மற்றும் வென்டிலேட்டட் முன் இருக்கைகள் போன்றவை கொடுக்கப்படலாம். மேலும் மஹிந்திரா இந்த காரில் பனோரமிக் சன்ரூஃபை கொடுக்கலாம் அப்படி கொடுக்கப்பட்டால் பிரிவில் அது முதலாவதாக இருக்கும். ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட XUV300 காரில் பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், 360 டிகிரி கேமரா மற்றும் சில அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) -கள் கொடுக்கப்படலாம்.
மேலும் படிக்க: மார்ச் 2024 இல் அறிமுகப்படுத்தப்பட்ட மற்றும் வெளியிடப்பட்ட அனைத்து புதிய கார்களின் விவரங்கள்
எதிர்பார்க்கப்படும் பவர்டிரெய்ன்கள் தொகுப்பு
இப்போதுள்ள XUV300 காரில் உள்ளதை பொன்றே அதே பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்களுடன் XUV 3XO காரை மஹிந்திரா வழங்கும் என்று எதிர்பார்க்கிறோம்:
விவரங்கள் |
1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல் |
1.2-லிட்டர் டர்போ-பெட்ரோல் (TGDi) |
1.5 லிட்டர் டீசல் |
பவர் |
110 PS |
130 PS |
117 PS |
டார்க் |
200 Nm |
250 Nm வரை |
300 Nm |
டிரான்ஸ்மிஷன் |
6-ஸ்பீடு MT, 6-ஸ்பீடு AMT |
6-ஸ்பீடு MT |
6-ஸ்பீடு MT, 6-ஸ்பீடு AMT |
மஹிந்திரா தற்போதைய AMT -க்கு பதிலாக ஆட்டோமெட்டிக் ஆப்ஷனில் ஒரு டார்க் கன்வெர்டர் யூனிட் உடன் இந்த காரை கொண்டு வரும் என்று நாங்கள் நினைக்கிறோம்.
எதிர்பார்க்கப்படும் வெளியீடு மற்றும் விலை
மஹிந்திரா XUV 3XO ஏப்ரல் 29 ஆம் தேதி அறிமுகமான சிறிது நேரத்திலேயே விற்பனைக்கு கொண்டு வரப்படலாம். இதன் விலை ரூ. 9 லட்சத்தில் இருந்து (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாருதி பிரெஸ்ஸா, ஹூண்டாய் வென்யூ, கியா சோனெட், டாடா நெக்ஸான், ரெனால்ட் கைகர், நிஸான் மேக்னைட் மற்றும் இரண்டு சப்-4m கிராஸ்ஓவர்களான மாருதி ஃப்ரான்க்ஸ் மற்றும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் டெய்சர் உடன் போட்டியை தொடரும்
மேலும் படிக்க: மஹிந்திரா XUV300 AMT