• English
  • Login / Register

Mahindra XUV 3XO மற்றும் Hyundai Venue: விவரங்கள் ஒப்பீடு

published on மே 08, 2024 02:08 pm by rohit for மஹிந்திரா எக்ஸ்யூவி 3XO

  • 119 Views
  • ஒரு கருத்தை எழுதுக

மஹிந்திரா XUV 3XO மற்றும் ஹூண்டாய் வென்யூ ஆகிய இரண்டு கார்களுமே டீசல் ஆப்ஷன் உட்பட மூன்று இன்ஜின்களை கொண்டுள்ளன. மேலும் சிறப்பான பல வசதிகளுடன் வருகின்றன.

Mahindra XUV 3XO vs Hyundai Venue: specification comparison

புதிய சப்-4எம் எஸ்யூவியை நீங்கள் வாங்க முடிவு செய்திருந்தால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட மஹிந்திரா XUV 3XO காரும் உங்கள் பட்டியலில் இருக்கலாம். (அடிப்படையில் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட XUV300). அதன் முக்கிய போட்டியாளர்களில் ஒன்றாக ஹூண்டாய் வென்யூ இருக்கின்றது. இது பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்களை பொறுத்தவரையில் ஒரே மாதிரியான ஆப்ஷன் மற்றும் பிரீமியம் வசதிகளை கொண்டுள்ளன. இந்த இரண்டு மாடல்களில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க நீங்கள் திட்டமிட்டிருந்தால் நீங்கள் சரியான காரை தேர்வு செய்ய உதவும் விரிவான ஒப்பீடு இங்கே.

அளவுகள்

விவரங்கள்

மஹிந்திரா XUV 3XO

ஹூண்டாய் வென்யூ

நீளம்

3990 மி.மீ

3995 மி.மீ

அகலம்

1821 மி.மீ

1770 மி.மீ

உயரம்

1647 மி.மீ

1617 மிமீ (ரூஃப் ரெயில்களுடன்)

வீல்பேஸ்

2600 மி.மீ

2500 மி.மீ

பூட் ஸ்பேஸ்

364 லிட்டர்

350 லிட்டர்

Mahindra XUV 3XO

  • இரண்டுக்கும் இடையே இங்கு அனைத்து விதத்திலும் பெரியது மஹிந்திரா எஸ்யூவி -தான்.

  • XUV 3XO -ன் 100 மிமீ நீளமான வீல்பேஸ், இடத்தை விட கேபினுக்குள் அதிக லெக் ரூம் கொண்டதாக இருக்க வேண்டும்.

  • XUV 3XO கூடுதல் 14 லிட்டர் பூட் ஸ்பேஸையும் கொண்டுள்ளது.

பவர்டிரெய்ன் விவரங்கள்

விவரங்கள்

மஹிந்திரா XUV 3XO

ஹூண்டாய் வென்யூ

இன்ஜின்

1.2-லிட்டர் டர்போ-பெட்ரோல்/ 1.2-லிட்டர் TGDi டர்போ-பெட்ரோல்

1.5 லிட்டர் டீசல்

1.2-லிட்டர் N/A பெட்ரோல்/ 1-லிட்டர் டர்போ-பெட்ரோல்

1.5 லிட்டர் டீசல்

பவர்

112 PS/ 130 PS

117 PS

83 PS/ 120 PS

116 PS

டார்க்

200 Nm/ 250 Nm வரை

300 Nm

115 Nm/ 172 Nm

250 Nm

டிரான்ஸ்மிஷன் 

6-ஸ்பீடு MT, 6-ஸ்பீடு AT

6-ஸ்பீடு MT, 6-ஸ்பீடு AMT

5-ஸ்பீடு MT/ 6-ஸ்பீடு MT, 7-ஸ்பீடு DCT

6-ஸ்பீடு MT

கிளம்டு மைலேஜ் (ARAI)

18.89 கிமீ/லி, 17.96 கிமீ/லி/ 20.1 கிமீ/லி, 18.2 கிமீ/லி

20.6 கிமீ/லி, 21.2 கிமீ/லி

விவரம் இல்லை

விவரம் இல்லை

  • இரண்டு சப்காம்பாக்ட் எஸ்யூவிகளிலும் 1.5 லிட்டர் டீசல் பவர்டிரெய்ன் உட்பட மூன்று இன்ஜின் ஆப்ஷன்கள் கிடைக்கும்.

Mahindra XUV 3XO engine

  • நீங்கள் எந்த எரிபொருள் வகை அல்லது இன்ஜினை தேர்வு செய்தாலும் சரி, மஹிந்திரா XUV 3XO இரண்டு எஸ்யூவி -களுக்கு இடையில் அதிக பவர் மற்றும் டார்க் அவுட்புட்டை கொண்டதாக இருக்கின்றது. 

  • XUV 3XO அதன் பெட்ரோல் இன்ஜின்களுடன் ஒரு புதிய 6-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமெட்டிக் ஆப்ஷனை கொண்டுள்ளது, ஹூண்டாய் எஸ்யூவி அதன் டர்போசார்ஜ் செய்யப்பட்ட யூனிட் உடன் 7-ஸ்பீடு DCT (டூயல்-கிளட்ச் டிரான்ஸ்மிஷன்) உடன் வருகிறது.

  • மஹிந்திரா XUV 3XO -யை அதன் டீசல் இன்ஜினுடன் 6-ஸ்பீடு AMT ஆப்ஷனுடன் வழங்குகிறது, அதே நேரத்தில் வென்யூவின் டீசல் யூனிட் உடன் ஆட்டோமெட்டிக் கியர்பாக்ஸ் கொடுக்கப்படவில்லை.

மேலும் படிக்க: மஹிந்திரா XUV 3XO மற்றும் Kia Sonet: விவரங்கள் ஒப்பீடு

இரண்டு கார்களிலும் உள்ள வசதிகள்

வசதிகள்

மஹிந்திரா XUV 3XO

ஹூண்டாய் வென்யூ

வெளிப்புறம்

  • பை-LED ஆட்டோமெட்டிக் புரொஜெக்டர் ஹெட்லைட்கள்

  • LED DRL -கள்

  • LED முன் ஃபாக் லைட்ஸ் 

  • 17 இன்ச் அலாய் வீல்கள்

  • கனெக்டட் LED டெயில் விளக்குகள்

  • ஆட்டோ-LED புரொஜெக்டர் ஹெட்லைட்கள்

  • LED DRL -கள்

  • 16-இன்ச் டூயல்-டோன் அலாய் வீல்கள்

  • கார்னரிங் லைட்ஸ் 

  • கனெக்டட் LED டெயில் விளக்குகள்

  • ரெட் பிரேக் காலிப்பர்கள் (நைட் எடிஷன்)

உட்புறம்

  • டூயல் டோன் கேபின் தீம்

  • லெதரைட் அப்ஹோல்ஸ்டரி

  • 60:40 பிளவு-மடிப்பு பின் இருக்கைகள்

  • சேமிப்பகத்துடன் கூடிய முன்பக்க சென்டர் ஆர்ம்ரெஸ்ட்

  • கப்ஹோல்டர்களுடன் பின்புற சென்டர் ஆர்ம்ரெஸ்ட்

  • டூயல் டோன் கேபின் தீம்

  • லெதரைட் அப்ஹோல்ஸ்டரி

  • பெடல்களுக்கான மெட்டல் ஃபினிஷ் (நைட் எடிஷன்)

  • 60:40 ஸ்பிளிட்-ஃபோல்டு பின் இருக்கைகள்

  • 2-ஸ்டெப் ரிக்ளைனிங் பின் இருக்கை

  • ஸ்டோரேஜ் உடன் கூடிய முன்பக்க சென்டர் ஆர்ம்ரெஸ்ட்

கம்ஃபோர்ட் மற்றும் வசதி

  • பனோரமிக் சன்ரூஃப்

  • பின்புற வென்ட்களுடன் கூடிய டூயல் ஜோன் ஏசி

  • கூல்டு க்ளோவ் பாக்ஸ்

  • வயர்லெஸ் ஃபோன் சார்ஜர்

  • உயரத்தை சரிசெய்யக்கூடிய ஓட்டுநர் இருக்கை

  • புஷ்-பொத்தான் தொடக்கம்/நிறுத்தும்

  • பவர்-ஃபோல்டிங் மற்றும் பவர்-அட்ஜஸ்டபிள் ORVMகள்

  • ஆட்டோ டிம்மிங் IRVM

  • க்ரூஸ் கன்ட்ரோல்

  • டிரைவிங் மோட்கள் (பெட்ரோல்-ஏடி மட்டும்)

  • சன்ரூஃப்

  • பின்புற வென்ட்களுடன் கூடிய ஆட்டோ ஏசி

  • கூல்டு க்ளோவ் பாக்ஸ்

  • வயர்லெஸ் ஃபோன் சார்ஜர்

  • 4-வே பவர்டு அட்ஜஸ்ட்டபிள் ஓட்டுனர் இருக்கை

  • ஆம்பியன்ட் லைட்ஸ் 

  • பேடில் ஷிஃப்டர்கள் 

  • புஷ்-பட்டன்  ஸ்டார்ட்/ஸ்டாப்

  • ஆட்டோ டிம்மிங் IRVM

  • க்ரூஸ் கன்ட்ரோல்

  • பவர்-அட்ஜஸ்டபிள் மற்றும் பவர்-ஃபோல்டிங் ORVMகள்

  • ஏர் ஃபியூரிபையர் 

  • டிரைவிங் மோட்கள் (DCT மட்டும்)

இன்ஃபோடெயின்மென்ட்

  • 10.25-இன்ச் டச் ஸ்கிரீன்

  • டிரைவருக்கான 10.25-இன்ச் டிஜிட்டல் டிஸ்ப்ளே

  • 7-ஸ்பீக்கர் ஹர்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டம்

  • வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே

  • கனெக்டட் கார் டெக்னாலஜி

  • 8 இன்ச் டச் ஸ்கிரீன்

  • செமி டிஜிட்டல் டிரைவருக்கான டிஸ்பிளே 

  • கனெக்டட் கார் டெக்னாலஜி

  • 6-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம்

  • வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே

பாதுகாப்பு

  • 6 ஏர்பேக்ஸ்ர் (ஸ்டாண்டர்டு)

  • எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் (ESC)

  • 360 டிகிரி கேமரா

  • ஆல் வீல் டிஸ்க் பிரேக்குகள்

  • பின்புற வைப்பர் மற்றும் வாஷர்

  • பின்புற டிஃபாகர்

  • EBD உடன் கூடிய ABS

  • முன் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள்

  • டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம்

  • (TPMS)

  • ஆட்டோ ஹோல்டுடன் கூடிய எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக்

  • ISOFIX சைல்டு சீட் ஆங்கரேஜ்கள்

  • லெவல்-2 ADAS (அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல், ட்ராஃபிக் சைன் அறிதல், லேன் கீப் அசிஸ்ட், அட்டானமஸ் எமர்ஜென்சி பிரேக்கிங் )

  • 6 ஏர்பேக்ஸ்ர் (ஸ்டாண்டர்டு)

  • ESC

  • பின்புற வைப்பர் மற்றும் வாஷர்

  • பின்புற டிஃபாகர்

  • EBD உடன் கூடிய ABS

  • ரிவர்சிங் கேமரா

  • TPMS

  • ISOFIX சைல்டு சீட் ஆங்கரேஜ்கள்

  • லெவல்-1 ADAS (முன்னோக்கி மோதல் எச்சரிக்கை, லேன்-கீப் உதவி, ஓட்டுனர் கவனிப்பு எச்சரிக்கை போன்றவை)

Mahindra XUV 3XO panoramic sunroof

  • வசதிகள் மற்றும் காரிலுள்ள தொழில்நுட்பத்தைப் பொறுத்தவரை XUV 3XO முன்னிலையில் உள்ளது, இது இந்த பிரிவின் முதல் பனோரமிக் சன்ரூஃப், டூயல்-ஜோன் ஏசி மற்றும் பெரிய 10.25-இன்ச் டிஸ்ப்ளேக்கள் போன்ற கூடுதல் வசதிகளை கொண்டுள்ளது.

Hyundai Venue 4-way powered driver seat

  • ஏர் ப்யூரிஃபையர் மற்றும் 4-வே பவர்-அட்ஜஸ்டபிள் டிரைவர் சீட் உள்ளிட்ட தனித்துவமான கருவிகளை வென்யூ கொண்டுள்ளது.

  • பாதுகாப்பைப் பொறுத்தவரை இரண்டு மாடல்களும் நன்கு பொருத்தப்பட்டுள்ளன, ஏனெனில் இரண்டும் 6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டு), ESC, TPMS மற்றும் அடிப்படை ADAS வசதிகளைப் பெறுகின்றன. இருப்பினும் XUV 3XO 360 டிகிரி கேமரா, ஆட்டோ ஹோல்டுடன் கூடிய எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் மற்றும் வலுவான ADAS தொகுப்பு ஆகியவற்றால் சற்று முன்னிலையில் உள்ளது..

  • ADAS வசதியை பெற்ற முதல் சப்-4m எஸ்யூவி -யான வென்யூ லேன்-கீப் அசிஸ்ட், ஃபார்வர்ட் கொலிஷன் வார்னிங்  மற்றும் ஹை-பீம் அசிஸ்ட் போன்ற வசதிகளைப் பெறுகிறது.

விலை 

 

மஹிந்திரா XUV 3XO

ஹூண்டாய் வென்யூ

விலை

ரூ.7.49 லட்சம் முதல் ரூ.15.49 லட்சம் (அறிமுகம்)

ரூ.7.94 லட்சம் முதல் ரூ.13.48 லட்சம்

  • XUV 3XO ஆனது வென்யூவை விட ஒப்பீட்டளவில் குறைந்த தொடக்க விலையில் கிடைக்கின்றது.

Mahindra XUV 3XO rear
Hyundai Venue rear

  • இருப்பினும் இது வென்யூவின் டாப் வேரியன்ட் ஆகும். இது XUV 3XO -ன் ஒப்பீட்டுக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட வேரியன்ட்டை விட சுமார் ரூ. 2 லட்சம் வரை குறைவானது.

  • மாருதி பிரெஸ்ஸா, டாடா நெக்ஸான் மற்றும் கியா சோனெட் ஆகியவை இந்த சப்காம்பாக்ட் எஸ்யூவிகளுக்கு மற்ற போட்டியாளர்களாக உள்ளன.

விலை விவரங்கள் அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் டெல்லி -க்கானவை

மேலும் படிக்க: மஹிந்திரா XUV 3XO AMT

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment on Mahindra எக்ஸ்யூவி 3XO

Read Full News

explore similar கார்கள்

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience