• English
  • Login / Register

முதல் நாளிலேயே 1,500 வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யப்பட்ட Mahindra XUV 3XO கார்

published on மே 28, 2024 07:20 pm by shreyash for மஹிந்திரா எக்ஸ்யூவி 3XO

  • 41 Views
  • ஒரு கருத்தை எழுதுக

மஹிந்திரா XUV 3XO ஏப்ரல் 2024 இறுதியில் வெளியிடப்பட்டது. காருக்கான டெலிவரி மே 26, 2024 அன்று தொடங்கியது.

Mahindra XUV 3XO

  • மஹிந்திரா 3XO காரின் முன்பதிவுகளை  மே 15, 2024 அன்று திறந்தது. முன்பதிவு தொடங்கிய ஒரு மணி நேரத்தில் 50,000 முன்பதிவுகளை பெற்றது.

  • மொத்த முன்பதிவுகளில் பெட்ரோல் வேரியன்ட்கள் மட்டும் கிட்டத்தட்ட 70 சதவிகிதம் ஆகும்.

  • XUV 3XO பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்கள் இரண்டின் தேர்வுடன் வருகிறது.

  • 10.25-இன்ச் டச் ஸ்கிரீன், டூயல்-ஜோன் ஏசி, பனோரமிக் சன்ரூஃப் மற்றும் ADAS ஆகியவை இதிலுள்ள வசதிகள் ஆகும்.

  • இதன் அறிமுக விலை ரூ.7.49 லட்சம் முதல் ரூ.15.49 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா) வரை இருக்கும்.

2024 ஏப்ரலில் மஹிந்திரா XUV 3XO காருக்கான விலை விவரங்கள் அறிவிக்கப்பட்டன. இது XUV300 சப்காம்பாக்ட் எஸ்யூவி -யின் ஃபேஸ்லிஃப்ட் பதிப்பாக அறிமுகப்படுத்தப்பட்டது. புதிய வடிவமைப்பு, புதிய உபகரணங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு ஆகியவற்றை இது கொண்டுள்ளது. மஹிந்திரா XUV 3XO -க்கான முன்பதிவுகளை மே 15 அன்று ஏற்கத் தொடங்கினார், இதன் டெலிவரி 2024 மே 26 -இல் தொடங்கியது. 

1,500 XUV 3XO கார்கள் முதல் நாளில் டெலிவரி செய்யப்பட்டன

டெலிவரியின் முதல் நாளில் மஹிந்திரா இந்தியா முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு XUV 3XO -வின் 1,500 யூனிட்களை வழங்கியது. மஹிந்திரா வாடிக்கையாளர்களிடமிருந்து அபரிமிதமான வரவேற்பைப் பெற்றது. ஆகவே ஒரு மணி நேரத்திற்குள் 50,000 க்கும் மேற்பட்ட முன்பதிவுகள் இந்த காருக்கு கிடைத்தன . மொத்த முன்பதிவுகளில் பெட்ரோல் வேரியன்ட்கள் மட்டுமே கிட்டத்தட்ட 70 சதவிகிதம் என மஹிந்திரா தெரிவித்திருந்தது.

மேலும் பார்க்க: Mahindra XUV 3XO AX7 L மற்றும் Volkswagen Taigun Highline: எந்த எஸ்யூவியை வாங்குவது சரியானது?

என்ன வசதிகள் இந்த காரில் உள்ளன

Mahindra XUV 3XO cabin

மஹிந்திரா XUV 3XO காரில் டூயல் 10.25-இன்ச் டிஸ்ப்ளேக்கள் (ஒன்று இன்ஃபோடெயின்மென்ட்க்கு மற்றொன்று இன்ஸ்ட்ரூமென்டேஷன்க்கு), 7-ஸ்பீக்கர் ஹர்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டம் மற்றும் செக்மென்ட்-ஃபர்ஸ்ட் பனோரமிக் சன்ரூஃப் போன்ற வசதிகளுடன் வருகிறது. இது க்ரூஸ் கன்ட்ரோல், டூயல் ஜோன் ஏசி மற்றும் வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் போன்ற வசதிகளையும் பெறுகிறது.

இதன் பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டு), எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS) மற்றும் 360 டிகிரி கேமரா ஆகியவை உள்ளன. இது அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல், அட்டானமஸ் எமர்ஜென்சி பிரேக்கிங் மற்றும் லேன்-கீப் அசிஸ்ட் போன்ற அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) -களின்  முழு தொகுப்புடனும் வருகிறது.

இன்ஜின் & டிரான்ஸ்மிஷன்

XUV 3XO முன்பு இருந்த அதே இன்ஜின் ஆப்ஷன்களை பயன்படுத்துகிறது. அவற்றின் விவரங்கள் கீழே உள்ளன:

இன்ஜின்

1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல்

1.2-லிட்டர் T-GDi (டர்போ-பெட்ரோல்)

1.5 லிட்டர் டீசல்

பவர்

112 PS

130 PS

117 PS

டார்க்

200 Nm

230 Nm

300 Nm

டிரான்ஸ்மிஷன்

6-ஸ்பீடு MT, 6-ஸ்பீடு AT

6-ஸ்பீடு MT, 6-ஸ்பீடு AT

6-ஸ்பீடு MT, 6-ஸ்பீடு AMT

XUV 3XO இப்போது 6-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டரின் ஆப்ஷனை டர்போ-பெட்ரோல் இன்ஜின் தேர்வுகளுடன் பெறுகிறது. 112 PS 1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் முன்பு 6-ஸ்பீடு AMT உடன் வழங்கப்பட்டது.

விலை & போட்டியாளர்கள்

மஹிந்திரா XUV 3XO விலை ரூ. 7.49 லட்சம் முதல் ரூ. 15.49 லட்சம் (அறிமுகம், எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா) வரை உள்ளது. இது டாடா நெக்ஸான், மாருதி பிரெஸ்ஸா, ஹூண்டாய் வென்யூ, கியா சோனெட், மற்றும் நிஸான் மேக்னைட் போன்றவற்றுடன் போட்டியிடுகின்றது. 

மேலும் படிக்க: மஹிந்திரா XUV 3XO AMT

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment on Mahindra எக்ஸ்யூவி 3XO

Read Full News

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience