Mahindra XUV 3XO காருக்கான முன்பதிவு தொடங்கியது, மே 26 -ம் தேதி முதல் டெலிவரி தொடங்கும்
XUV 3XO ஐந்து வேரியன்ட்களில் கிடைக்கிறது: MX1, MX2, MX3, AX5 மற்றும் AX7
-
மஹிந்திரா XUV300 -யின் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட வெர்ஷனாக XUV 3XO அறிமுகப்படுத்தப்பட்டது.
-
முன்பதிவுகள் ஆன்லைனில் மற்றும் மஹிந்திராவின் டீலர்ஷிப்களில் ரூ.21,000 -க்கு தொடங்கியுள்ளது.
-
ஆல் LED லைட்ஸ், புதிய அலாய் வீல்கள் மற்றும் புதுப்பிக்கப்பட்ட பம்ப்பர்கள் ஆகியவற்றை வெளியில் உள்ள மாற்றங்களாக பார்க்க முடிகின்றது.
-
உள்ளே டூயல்-டோன் தீம், புதிய ஸ்டீயரிங் மற்றும் அப்டேட்டட் கிளைமேட் கன்ட்ரோல் பேனல் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
-
இப்போது டூயல்-சோன் ஏசி, ADAS மற்றும் செக்மென்ட்-முதல் பனோரமிக் சன்ரூஃப் உடன் வருகிறது.
-
மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களுடன் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்கள் இரண்டையும் பெறுகிறது.
-
அறிமுக விலை ரூ.7.49 லட்சம் முதல் ரூ.15.49 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா) வரை இருக்கும்.
மஹிந்திரா XUV 3XO ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட மஹிந்திரா XUV300 2024 ஏப்ரல் மாதம் சந்தையில் அறிமுகமானது. அப்டேட்டட் எஸ்யூவி இப்போது இந்தியா முழுவதும் உள்ள பல டீலர்ஷிப்களை அடைந்துள்ளது. மேலும் அதன் முன்பதிவுகள் இப்போது அதிகாரப்பூர்வமாக (ஆன்லைன் மற்றும் மஹிந்திராவின் ஷோரூம்களில்) ரூ.21,000 -க்கு திறக்கப்பட்டுள்ளன. XUV 3XO காரில் புதிதாக என்ன இருக்கின்றது என்பதை பற்றிய விவரங்கள் இங்கே:
வெளிப்புறம் மற்றும் உட்புறத்தில் உள்ள மாற்றங்கள்
XUV 3XO ஆனது பழைய மாடலை விட மிகவும் நவீனமானக தோன்றுகிறது. ஷார்ப்பான LED ஹெட்லைட்கள் மற்றும் C-வடிவ LED DRL -கள், கிரில்லில் உள்ள பியானோ-பிளாக் அப்ளிக் மற்றும் ஆக்ரோஷமாக வடிவமைக்கப்பட்ட பம்பர் ஆகியவை அதற்கு ஒரு காரணமாக உள்ளன. மற்ற குறிப்பிடத்தக்க வடிவமைப்பு மாற்றங்களில் அப்டேட்டட் 17-இன்ச் அலாய் வீல்கள் மற்றும் கனெக்டட் LED டெயில் லைட்ஸ் ஆகியவையும் அடங்கும்.
டூயல்-டோன் தீம், புதுப்பிக்கப்பட்ட க்ளைமேட் கண்ட்ரோல் பேனல் மற்றும் டூயல் டிஜிட்டல் டிஸ்ப்ளேக்கள் ஆகியவற்றின் காரணமாக, என்ட்ரி-லெவல் மஹிந்திரா எஸ்யூவி இப்போது அதிக பிரீமியம் கேபினுடன் வருவதால், உட்புறத்தில் மாற்றங்கள் மிகவும் குறிப்பிடத்தக்கவை.
தொடர்புடையது: மஹிந்திரா XUV 3XO விமர்சனம்: ஃபர்ஸ்ட் டிரைவ்
XUV 3XO: இதில் என்ன வசதிகள் கிடைக்கும்?
மஹிந்திரா XUV 3XO காரை பனோரமிக் சன்ரூஃப் (இந்த பிரிவில் முதலாவது), டூயல்-ஜோன் ஆட்டோ ஏசி, டூயல் 10.25-இன்ச் டிஸ்ப்ளேக்கள் (ஒன்று இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் மற்றொன்று இன்ஸ்ட்ரூமென்டேஷன்), மற்றும் வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங் போன்ற பிரீமியம் வசதிகளுடன் உள்ளது.
மஹிந்திரா XUV 3XO காரின் பாதுகாப்பு -க்காக 6 ஏர்பேக்குகள் (அனைத்து வேரியன்ட்களிலும்), 360 டிகிரி கேமரா, முன்புற மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள், அட்டானமஸ் எமர்ஜென்சி பிரேக்கிங் மற்றும் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், லேன்-கீப் அசிஸ்ட் போன்ற சில அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) ஆகியவை அடங்கும்.
பவர்டிரெயின்கள் ஆஃபர்
விவரங்கள் |
1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல் |
1.2 லிட்டர் TGDi டர்போ-பெட்ரோல் |
1.5 லிட்டர் டீசல் |
பவர் |
112 PS |
130 PS |
117 PS |
டார்க் |
200 Nm |
250 Nm வரை |
300 Nm |
டிரான்ஸ்மிஷன் |
6-ஸ்பீடு MT, 6-ஸ்பீடு AT |
6-ஸ்பீடு MT, 6-ஸ்பீடு AT |
6-ஸ்பீடு MT, 6-ஸ்பீடு AMT |
கிளைம்டு மைலேஜ் |
18.89 கிமீ/லி, 17.96 கிமீ/லி |
20.1 கிமீ/லி, 18.2 கிமீ/லி |
20.6 கிமீ/லி, 21.2 கிமீ/லி |
மஹிந்திரா XUV 700 போலவே ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட சப்-4m எஸ்யூவியும் ஜிப், ஜாப் மற்றும் ஜூம் ஆகிய மூன்று டிரைவ் மோடுகளுடன் வருகிறது. ஆனால் இவை பெட்ரோல்-ஆட்டோமெட்டிக் வேரியன்ட்களுக்கு மட்டுமே.
விலை ?
மஹிந்திரா XUV 3XO காரின் விலை ரூ. 7.49 லட்சத்தில் இருந்து ரூ. 15.49 லட்சம் (அறிமுக எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா) ஆக உள்ளது. மாருதி பிரெஸ்ஸா, ஹூண்டாய் வென்யூ, டாடா நெக்ஸான், கியா சோனெட், நிஸான் மேக்னைட், ரெனால்ட் கைகர் மற்றும் சப்-4m கிராஸ்ஓவர் கார்களான மாருதி ஃபிரான்க்ஸ் மற்றும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் டெய்சர் ஆகியற்றுடன் போட்டியிடும்.
மேலும் படிக்க: XUV 3XO AMT