Mahindra XEV 9e மற்றும் BE 6e கார்களின் டீஸர் வெளியாகியுள்ளது
இரண்டு கார்களின் பெயர்களும் மாற்றப்பட்டுள்ளன. XEV 9e முன்பு XUV e9 என்ற பெயரிலும் BE 6e ஆனது BE.05 என்ற பெயரிலும் முன்பு குறிப்பிடப்பட்டன.
-
மஹிந்திராவின் புதிய கட்டமைப்பு தளமான INGLO -வை அடிப்படையாக வைத்தே XEV 9e மற்றும் BE 6e கார்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
-
XEV 9e காரானது 3 ஸ்கிரீன் செட்டப்பை கொண்டிருக்கும். BE 6e டூயல் இன்டெகிரேட்டட் ஸ்கிரீன்களை கொண்டிருக்கும்.
-
இரண்டு எலக்ட்ரிக் எஸ்யூவிகளும் மல்டி-சோன் ஏசி, வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் மற்றும் பிரீமியம் ஆடியோ சிஸ்டம் போன்ற வசதிகளை பெறலாம்.
-
பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக) மற்றும் லெவல் 2 ADAS ஆகியவையும் கொடுக்கப்படலாம்.
-
XEV 9e காரின் விலை ரூ. 38 லட்சத்தில் இருந்து தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, அதே சமயம் BE 6e காரின் விலை ரூ.24 லட்சத்தில் இருந்து தொடங்கலாம். ( விலை விவரங்கள் அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் -க்கானவை)
மஹிந்திரா XEV 9e மற்றும் BE 6e கார்களின் டீஸர் முதன்முறையாக வெளியிடப்பட்டுள்ளது, மேலும் அவற்றின் அறிமுக தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு கார்களும் வரும் நவம்பர் 26-ம் தேதி அறிமுகமாகவுள்ளன. இந்த இரண்டு எலக்ட்ரிக் எஸ்யூவி -களும் கூபே ரூஃப்லைனை கொண்டுள்ளன. மேலும் XEV மற்றும் BE பிராண்டுகளின் கீழ் முதல் EV -களாக இருக்கும். இந்த இரண்டு மாடல்களும் மஹிந்திராவின் புதிய கட்டமைப்பு தளமான INGLO -வை அடிப்படையாக வைத்து உருவாக்கப்படும்.
டீசரில் என்ன காட்டப்பட்டுள்ளது ?
வீடியோ டீஸரில் XEV 9e மற்றும் BE 6e இரண்டு கார்களின் முன் பக்கம்,பின் பக்கம் மற்றும் பின்புறம் ஆகியவற்றை பார்க்க முடிகிறது. மேலும் இரண்டு எலெக்ட்ரிக் எஸ்யூவி -களும் கூபே-எஸ்யூவி பாடி ஸ்டைலை கொண்டுள்ளன. மற்றும் அவற்றின் கான்செப்ட் பதிப்புகளுக்கு நெருக்கமாக உள்ளன. BE 6e, முன்பு BE.05 என குறிப்பிடப்பட்டது. இது ஷார்ப்பான பானட், C-வடிவ LED DRL -கள் மற்றும் ஸ்லீக்கரான பம்பர் கொண்ட கூர்மையான வடிவமைப்பைக் கொண்டுள்ளது. XEV 9e ஆனது முன்பு XUV e9 என குறிப்பிடப்பட்டது. இன்வெர்ட்டட் L-ஷேப்டு கனெக்டட் LED DRL -கள் மற்றும் கனெக்டட் LED டெயில்லைட்களையும் இந்த காரில் பார்க்க முடிகிறது.
BE 6e -ன் கேபினையும் டீஸரில் பார்க்க முடிந்தது. இதில் டூயல்-இன்டெகிரேட்டட் ஸ்கிரீன்கள், ஸ்கொயர்-ஆஃப் ஸ்டீயரிங் வீல் மற்றும் சன்ரூஃப் கண்ணாடியில் ரெட் டிஸைன் எலமென்ட்களை பார்க்க முடிகிறது.
எதிர்பார்க்கப்படும் வசதிகள்
முந்தைய ஸ்பை ஷாட்களின் அடிப்படையில் XEV 9e ஆனது புதிய டாடா கார்களில் இருப்பதைப் போலவே ட்ரை-ஸ்கிரீன் செட்டப் மற்றும் இல்லுமினேட்டட் லோகோவுடன் 2-ஸ்போக் ஸ்டீயரிங்கை கொண்டிருக்கும். மல்டி ஜோன் ஏசி, வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், பிரீமியம் ஆடியோ சிஸ்டம் மற்றும் வென்டிலேட்டட் மற்றும் பவர்டு சீட்களையும் இது கொண்டுள்ளது. இது ஒரு EV என்பதால் இது வெஹிகிள் டூ லோடிங் (V2L) மற்றும் மல்டி ரீஜெனரேஷன் மோட் டெக்னாலஜியையும் கொண்டிருக்கலாம்.
BE 6e காரிலும் அதே 2-ஸ்போக் ஸ்டீயரிங் வீலுடன் டூயல் இன்டெகிரேட்டட் ஸ்கிரீன் செட்டப் இருக்கும். XEV -யை போலவே பல மல்டி ஜோன் ஏசி, வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் மற்றும் பிரீமியம் ஆடியோ சிஸ்டம் ஆகியவற்றை கொண்டிருக்கும்.
இரண்டு எலக்ட்ரிக் எஸ்யூவி -களிலும் பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்ஸ் (ஸ்டண்டர்டாக), 360 டிகிரி கேமரா மற்றும் லெவல் 2 அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) ஆகியவை இருக்கும்.
எதிர்பார்க்கப்படும் பவர்டிரெய்ன்கள்
இரண்டு EV களிலும் இருக்கும் பேட்டரி பேக் மற்றும் எலக்ட்ரிக் மோட்டார் விவரங்களை மஹிந்திரா இன்னும் வெளியிடவில்லை. இருப்பினும் XEV 9e ஆனது 60 kWh மற்றும் 80 kWh பேட்டரி பேக்குகள் கொடுக்கப்படலாம். மொத்தம் 500 கி.மீ வரை செல்லும் என கிளைம் செய்யப்பட்டுள்ளது. INGLO கட்டமைப்பு தளமானது ரியர் வீல் டிரைவ் (RWD) மற்றும் ஆல் வீல் டிரைவ் (AWD) செட்டப்களுக்கு ஏற்ப மாற்றியமைக்கப்படலாம். BE 6e எலெக்ட்ரிக் எஸ்யூவி ஆனது 60 kWh பேட்டரி பேக் மூலம் சுமார் 450 கி.மீ தூரம் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது RWD மற்றும் AWD ஆகிய இரண்டு ஆப்ஷன்களும் கொடுக்கப்படலாம்.
எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்
மஹிந்திரா XEV 9e விலை ரூ. 38 லட்சத்தில் இருந்து தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் BE 6e காரின் விலை ரூ.24 லட்சத்தில் இருந்து தொடங்கலாம். XEV 9e ஆனது வரவிருக்கும் டாடா ஹாரியர் EV மற்றும் சஃபாரி EV ஆகிய கார்களுடனும் BE 6e ஆனது டாடா கர்வ்வ் EV, MG ZS EV மற்றும் வரவிருக்கும் ஹூண்டாய் கிரெட்டா EV ஆகியவற்றுக்கும் போட்டியாக இருக்கும்
விலை விவரங்கள் அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் -க்கானவை
ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகளை பெற வேண்டுமா? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.