முதல் Thar Roxx காரை ஏலத்தில் விட முடிவு செய்த Mahindra
published on செப் 13, 2024 03:58 pm by shreyash for மஹிந்திரா தார் ராக்ஸ்
- 70 Views
- ஒரு கருத்தை எழுதுக
தார் ராக்ஸின் ஏலத்தில் இருந்து திரட்டப்பட்ட நிதி வெற்றியாளரின் விருப்பத்தின் அடிப்படையில் நான்கு இலாப நோக்கற்ற நிறுவனங்களில் ஒன்றிற்கு நன்கொடையாக வழங்கப்படும்.
-
ஏலம் விடும் நிகழ்வு செப்டம்பர் 15 மற்றும் செப்டம்பர் 16 தேதிகளில் நடைபெறும்.
-
தார் ராக்ஸின் முதல் வாடிக்கையாளர் யூனிட் VIN 0001 என்ற முத்திரையைக் கொண்டிருக்கும்.
-
ஆனந்த் மஹிந்திராவின் கையொப்பத்துடன் கூடிய பேட்ஜும் இதனுடன் வரவிருக்கிறது.
-
தார் ராக்ஸின் டாப்-ஸ்பெக் AX7L டீசல் ஆட்டோமேட்டிக் 4WD வேரியன்ட்டும் ஏலத்தில் இடம்பெறும்.
-
2020 ஆம் ஆண்டில், தார் 3-டோர் வெர்ஷன் 1.11 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.
மஹிந்திரா தார் ராக்ஸின் முதல் வாடிக்கையாளர் யூனிட், VIN 0001, 2020 இல் 3-டோர் மாடலைப் போலவே ஏலம் விடப்பட உள்ளது. ஆம் மீண்டும் வரலாறு படைக்க மஹிந்திரா தயாராகி வருகிறது. இந்த ஏலத்திற்கான ஆன்லைன் பதிவுகளை மஹிந்திரா தொடங்கியுள்ளது, 3-டோருக்காக திரட்டப்பட்ட நிதி இலாப நோக்கற்ற நிறுவனத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்டது. இதே போன்று தார் ராக்ஸுக்கும் இப்போதும் வெற்றியாளரின் விருப்பத்தின் பேரில் ஏலத்தில் திரட்டப்படும் தொகையானது ஒரு இலாப நோக்கற்ற அமைப்பிற்கு வழங்கப்படவுள்ளது. ஏலம் செப்டம்பர் 15, 2024 அன்று மாலை 5 மணிக்கு ஆன்லைனில் தொடங்கி மறுநாள் செப்டம்பர் 16, 2024 மாலை 7 மணிக்கு முடிவடையும்.
வெற்றியாளர் பின்வரும் நான்கு இலாப நோக்கற்ற நிறுவனங்களில் இருந்து ஒரு நிறுவனத்தை தேர்வு செய்யலாம்:
-
நந்தி பவுண்டேஷன் (பெண்கள் மற்றும் பெண்களை மேம்படுத்துதல்),
-
BAIF டெவலப்மெண்ட் ரிசர்ச் பவுண்டேஷன் (நீர்நிலை மற்றும் கிராமப்புற வாழ்வாதார மேம்பாடு),
-
வாட்டர்ஷ்ட் ஆர்கனைசேஷன் ட்ரஸ்ட் (ஒருங்கிணைந்த நீர்வள மேலாண்மை மற்றும் விவசாயம்), அல்லது
-
யுனைடெட் வே மும்பை (சாலை பாதுகாப்பை மேம்படுத்துதல்).
2020 ஆம் ஆண்டில், மஹிந்திரா 3-டோர் தார் முதல் வாடிக்கையாளர் யூனிட்டை 1.11 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது. கோவிட் நிவாரண நிறுவனங்களுக்கு ஆதரவாக இந்தத் தொகை வழங்கப்பட்டது. 3-டோர் தாருக்கான ஏலத்தில் புதுதில்லியில் வசிக்கும் திரு. ஆகாஷ் மிண்டா வெற்றி பெற்றார்.
மேலும் பார்க்க: Maruti Jimny-யை விட 5-டோர் Mahindra Thar Roxx வழங்கும் 10 சிறப்பம்சங்கள்
VIN 0001 தார் ராக்ஸ் பற்றிய கூடுதல் தகவல்
மஹிந்திரா தார் ராக்ஸின் டாப்-ஸ்பெக் AX7 L டீசல் ஆட்டோமேட்டிக் 4WD வேரியன்ட்டை ஏலம் விடவுள்ளது, வெற்றியாளர், டீப் ஃபாரஸ்ட், எவரெஸ்ட் ஒயிட், டேங்கோ ரெட், பேட்டில்ஷிப் கிரே, நெபுலா ப்ளூ, பர்ன்ட் சியன்னா அல்லது ஸ்டீல்த் ப்ளாக் போன்ற ஏழு கலர் ஆப்ஷன்களிலிருந்து ஒன்றை தேர்வு செய்யலாம். தார் ராக்ஸின் இந்த முதல் வாடிக்கையாளர் பிரிவானது, ‘VIN 0001’-ஐ மட்டும் அல்லாமல் காருக்கு மேலும் பெருமை சேர்க்க திரு. ஆனந்த் மஹிந்திராவின் கையொப்பத்துடன் கூடிய பேட்ஜையும் பெறுகிறது.
பெரிய தாரின் இந்த டாப்-ஸ்பெக் வெர்ஷனில் டூயல் 10.25-இன்ச் ஸ்கிரீன் (இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் டிஜிட்டல் டிரைவரின் டிஸ்ப்ளே), ஆட்டோ ஏர் கண்டிஷனிங், காற்றோட்டமான முன் சீட்கள், 6-வே பவர்டு டிரைவர் சீட் மற்றும் பனோரமிக் சன்ரூஃப் போன்ற அம்சங்கள் உள்ளன. இதன் பாதுகாப்பு அம்சங்களை பொறுத்தவரை இதில் 6 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா, ஆட்டோ ஹோல்டுடன் கூடிய எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் மற்றும் லெவல் 2 அட்வான்ஸ்ட் டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) ஆகியவை அடங்கும்.
ஏலம் விடப்படும் மாடலில் 2.2 லிட்டர் டீசல் இன்ஜின் இடம்பெறுகிறது. அதன் விரிவான விவரக்குறிப்புகள் பின்வருமாறு:
விவரங்கள் |
மஹிந்திரா தார் ராக்ஸ் |
|
இன்ஜின் |
2.2 லிட்டர் டீசல் |
|
பவர் |
175 PS |
|
டார்க் |
370 Nm |
|
டிரான்ஸ்மிஷன் |
6-ஸ்பீட் AT* |
|
டிரைவ்டிரெய்ன் |
4-வீல்-டிரைவ் |
*AT - டார்க் கன்வர்டர் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்
மேலும் பார்க்க: உங்கள் வாகனங்களுக்கு இப்போது தேசிய மற்றும் விரைவு நெடுஞ்சாலைகளில் குறிப்பிட்ட தூரத்திற்கு மட்டும் நீங்கள் டோல் கட்டணம் செலுத்த தேவையில்லை
விலை மற்றும் போட்டியாளர்கள்
மஹிந்திரா தார் ராக்ஸ் காரின் விலை ரூ. 12.99 லட்சம் முதல் ரூ. 20.49 லட்சம் வரை (அறிமுகம், எக்ஸ்-ஷோரூம் இந்தியா) உள்ளது. தார் ராக்ஸ்ஸின் ஃபோர்-வீல்-டிரைவ் வேரியன்ட்களுக்கான விலைகளை மஹிந்திரா இன்னும் அறிவிக்கவில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். இது ஃபோர்ஸ் குர்கா 5-டோர் மற்றும் மாருதி சுஸுகி ஜிம்னி உடன் போட்டியிடுகிறது.
புதிய கார்கள் தொடர்பான அப்டேட்களுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்து கொள்ளுங்கள்.
மேலும் படிக்க: Mahindra Thar ROXX-இன் ஆன் ரோடு விலை